தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன்.
இவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது அதுல் என்ற ஒரு ரசிகர் நீங்கள் வெர்ஜினா? (கன்னித் தன்மையுடையவரா) என எதிர்பாராத ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.
அந்த கேள்விக்கு சாட்டையடி பதில் ஒன்றை அளித்துள்ளார் சம்யுக்தா.
“ஹாஹா… மரியாதைக்குரிய அதுல் பிகே, வெர்ஜினிடி, செக்ஸ், ஆல்கஹால் உள்ளிட்டவை பற்றி கேட்டால் பெண்கள் பயந்துடுவாங்களா?
இது போல கேள்வி கேட்டா தனியாக தெரியப்படுவோம் என நீங்க நினைச்சுட்டீங்களா..?
எந்த பெண்ணை பார்த்தாலும் இப்படிதான் யோசிப்பீங்களா?
ஏதோ ஒரு பிரச்சனை உங்களுக்கு இருக்கு?
கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். யாரிடமாவது அடி வாங்கிவிட போறீங்க” என அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Samyuktha Menon slams netizen his question Are you virgin