தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எவருமே எதிர்பாராத சமயத்தில், தான் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளதை அறிவித்தார் தனுஷ்.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
இந்த அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மற்ற படங்களை முடித்துக் கொடுத்தார் தனுஷ்.
இதன் படப்பிடிப்பு அக்டோபரில்தான் துவங்கும் என தகவல்கள் வந்தன.
எனவே தனுஷ் வரும்வரை அவருக்கு காத்திராமல் பிரபுதேவா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே.
ஆனால் கால்ஷீட் பிரச்சினையாலும் சில கன்னட அமைப்புகள் பிரச்சினையாலும் இவர் விலக, தற்பேது புதிய நாயகியை தேடிக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.









