ரசிகர்களிடம் பிறந்த நாள் பரிசு கேட்ட நடிகர் கார்த்தி

ரசிகர்களிடம் பிறந்த நாள் பரிசு கேட்ட நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiநடிகர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.

இன்று (25.05.2021) தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கார்த்தி.

இதை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்…, “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு மிகக் கடுமையாக உள்ளது.

அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வசிப்பிடத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதுவே இந்தப் பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்”

என கேட்டுக் கொண்டுள்ளார் கார்த்தி.

Karthi requests fans on his birthday

மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டா ட்விட்டர் தளங்களுக்கு மே 26 முதல் தடை?

மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டா ட்விட்டர் தளங்களுக்கு மே 26 முதல் தடை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fb twitterகொரோனா காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை என்றால் இந்த சமூகம் இயங்குமா? என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

அந்தளவிற்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக பதிவுகள் பகிரப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.

மேலும் ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

எதிர்ப்பு அதிகமானால் இதன்பின்னர் சம்பந்தப்பட்ட தளங்கள் அந்த பதிவை நீக்கும்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதாவது… “சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி குழு வேண்டும்.

இதில் மத்திய அமைச்சர்கள் அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

இவர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான பதிவுகளை கவனித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க சொல்வார்கள்.

உடனே சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் அந்த பதிவை 2 வாரங்களில் நீக்க வேண்டும்.

ஓடிடி, அமேசான், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இவ்வாறு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மூலம் புதிய விதியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

மத்திய அரசின் புதிய கொள்கையை மற்ற தளங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியாவின் “கூ” செயலி மட்டுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவும் விதித்தது மத்திய அரசு. காலக்கெடு இன்று மே 25 தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால் மத்திய அரசின் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன.

ஒருவேளை மத்திய அரசு கூடுதல் அவகாசம் கொடுக்கவில்லை என்றால் இந்தியாவில் நாளை முதல் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

நாளை விடியட்டும் பார்ப்போம்..

Twitter and FB to be blocked in india ?

நடுங்கிய படக்குழுவினருக்கு தல தந்த சர்ப்ரைஸ்..; அஜித் அண்ணி கொடுத்த ‘வலிமை’ அப்டேட் இதோ

நடுங்கிய படக்குழுவினருக்கு தல தந்த சர்ப்ரைஸ்..; அஜித் அண்ணி கொடுத்த ‘வலிமை’ அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimaiபோனி கபூரின் தயாரிப்பில் அஜீத் தற்போது நடித்துள்ள படம் ‘வலிமை’.

யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

நாயகியாக ஹூமா குரேஷி் நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

இதில் அஜித்தின் அண்ணியாக ஜானகி என்பவர் நடிக்கிறாராம்.

அவர் வலிமை அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில்…

இந்த பட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற போது ஒரு நாள் இரவில் செம குளிராக இருந்தது.

படக்குழுவினரின் நடுக்கத்தை பார்த்த அஜித் தன் கேரவனில் சிக்கன் சூப் சமைத்து படக்குழுவினருக்கு தந்து நடுக்கத்தை போக்கினாராம்.

என தல புகழ் பாடுகிறார் ஜானகி அண்ணி.

Valimai actress shares hot updates

கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம்……..; மனைவி் மரணம் பற்றி அருண்ராஜா உருக்கம்..!

கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம்……..; மனைவி் மரணம் பற்றி அருண்ராஜா உருக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arunraja kamaraj with wifeகடந்த வாரம் கொரோனா பாதிப்பால் தன் மனைவி சிந்துஜாவை இழந்தவர் பாடலாசிரியர் இயக்குனர் நடிகர் அருண்ராஜா காமராஜ்.

இந்த நிலையில் தனது மனைவி மரணம் குறித்து அவர் உருக்கமாக முகநூலில் பதிவு செய்திருப்பதாவது:

“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது..
எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள் பிரார்த்தனைகள் அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப்பிரித்துவிட்டு சென்றது..

நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது.. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே.. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு ,வன்மம் ,காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.

பாதிப்பும் பங்களிப்பும் இங்கு நம்மை மட்டுமே தான் சுழலும்… இங்கு வெற்றி என்பது நம் நண்பர்கள் உறவுகள் மட்டும் காக்கப்படுவது அல்ல.. ஒவ்வொரு உயிரும் தான் நம் அரண்.. இந்த நச்சின் முமு எதிர்வினை நமக்கான ஒருங்கிணைப்பே அன்றி நமக்கான வேறெதுவும் அல்ல.. நாம் இங்கே வாழப்பிறந்தோம் , “வாழ்தல் என்றுமே யாரை எதிர்க்க வேண்டும்” என்று குறுகிவிடாமல் “எதை எதிர்க்க வேண்டும்” என்ற ஓர் புரிதலுக்குள் செல்லுமாயின் எவ்வித நச்சும் மனிதத்தையோ மனித ஒற்றுமை மேன்மையையோ எதுவும் செய்துவிட முடியாது என நான் நம்புகிறேன்.

வாழ்தல் என்றும் மக்கள் மக்களுக்காக மக்களுடனே மட்டுமே, நாம் ஒற்றுமையின்றி் ஒரு பொது எதிரியை எதிர்கொள்வது என்பது மேலும் மேலும் எதிரியை வலுப்பெற வைக்கும்… நம்மால் மனித உயிர்களை மீட்டு எடுத்து வர முடியாது. நாம் வாழ்வது நமை கொண்டாட துடிக்கும் உள்ளங்களுக்காகவே அன்றி பந்தாடத் துடிக்கும் நச்சுக்களுக்காக அல்ல..

பல்லாயிரம் பல லட்சம் பறிகொடுத்தும் இந்த எதிரியை நாம் வீழ்த்தவில்லையெனின் இந்தப்போர் நினைவில் கூட எண்ணிப்பார்க்க எதுவுமின்றி அழிவுகளாகவே எஞ்சி நிற்குமோ என்ற ஓர் அச்சம் நமை கொஞ்சமாவது செயல்பட வைத்தால் நாம் இழப்புகளை தவிர்க்கலாமோ!! அந்த அளவிற்கு ஓர் புரிதலை நமக்கு நாம் கொடுத்துக்கொள்ளும் அவசியம் உணர வேண்டுமோ!!!.. எல்லாம் இருந்தும் எதுவுமில்லாதது போல் ஓர் வெறுமையைப் பரிசளித்துவிட்டு கோடுங்கோல் புரிகின்ற ஓர் நச்சு, அதை நாம் பரிகாசமாக்க நினைத்து பலரை பறிகொடுக்கிறோமோ.

வீசும் காற்றில் விசம் பரவிவிட்டது.. இன்னும் அதை உள்ளத்தால் ஒன்றுகூடி எதிர்த்து விரட்ட முடியவில்லை எனில், நாம் தனித்தனி தீவுகளானோம் எனில் வெல்லபோவது மீண்டும் நச்சு தான் , வீழப்போவது ஒன்றாய் நின்று எதிர்க்காதவர்களாகிய நாம் தான்.. நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்பது மனிதனை மனிதனே எதிரியாக்கி வேடிக்கைப் பார்க்கும் மனநிலை.. இங்கே ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான பொது எதிரி வந்தும் தனித்தீவுகளாகவே வாழ்கிறோமோ என்ற ஓர்அச்சம் ஆட்கொண்டுள்ளது..

கண்ணில் படாத கடவுள்கள் நல்லது செய்வார்கள் என தீர்க்கமாக நம்பும் நாம் அதே கடவுள்கள்கூட நம் ஒற்றுமையில்லா மனநிலைக் கொண்டு நமை நச்சிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தவர்களாகத்தானே இருக்கக்கூடும்.
..
தினசரி வாழ்வு என்றுமே போராட்டமாகத்தான் இங்கே பல கோடி மனிதங்களுக்கு இருந்து கொண்டு வருகிறது.. அப்போது வாழ்வு நம் வரையறுத்துக்கொண்ட அளவீடுகளுக்குள் மட்டுமே சுழன்றது.

ஆனால் இன்று அந்த அளவீடுகள் மாறி ,வாழ்வதே பெரும் சவால் என்று வந்து நின்றும் அதை நாம் பொருட்படுத்தவில்லை எனில் வீசும் காற்றில் பரவிய நச்சு நம் சுவாசம் விட்டு நீங்க நமையே பலியாக கேட்டுக்கொண்டே இருக்கும்… இன்பம் வேண்டுமானால் அவரவர் மனதிற்கு ஏற்றார் போல் மாறலாம் , இழப்பு அப்படி அல்ல , அனைத்தையும் உலுக்கிவிடும். நம் இனத்தை நாமே வேரறத்தோம் என்ற வரலாற்றை அள்ளிப் பூசிக்கொள்ள ,, அறியாமலும் துணிந்துவிட வேண்டாம்..

நமைசுற்றி பரவிய நச்சுக்காற்று நமை பொசுக்கி எறிவதற்குள் அதை வேரறுக்க குறைந்தபட்சம் நம் சார்ந்தவர்களுக்கு தவி்ர்க்க வேண்டிய , கட்டாயம் தவிர்க்கவேண்டிய காரண காரியங்களை ஒரு அடுத்த தலைமுறைக்கான புரிதலாய் எடுத்துரைத்து வழிநடத்தி நமை சுற்றி உள்ள கடைசி உயிர்மூச்சு வரை நச்சு பரவாமல் தடுத்தாலே மட்டும் இங்கு நம் கனவுகள் குறிக்கோள்கள் இன்பங்கள் வாழ்தல் மீட்டெடுக்கப்படும்..

அலட்சியங்களே நம் முதல் எதிரி.. சிலரின்இந்த சிறு அலட்சியங்கள் கூட மிகவும் அக்கறையுடன் இந்நிலையைக் கையாளுபவர்களையும் பாதிக்கும்.. நச்சுக்கிருமியின் ஆயுதம் நமது அலட்சியங்களே.. கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை பிறகு பார்த்துக் கொள்ள நமக்கு வாழ்நாள் அவகாசம் உள்ளது… கண்ணுக்கு தெரியாத எதிரியை வேரறுங்கள்.

பல்லாயிரக்கணக்கானோரின் பிரார்த்தனைகளும் அன்பும் இரங்கல்களும் சகோதரத்துவ வார்த்தைகளும் வலிபட்டு நிற்கும்.

என்னைப்போன்றோரின் வடுவிற்கு ஆறுதலே .. அதற்கு நன்றிக்கடனாய் இந்த நிலை யாரையும் ஆழ்த்தி அந்தரத்தில் விட்டுவிடக்கூடாது இழப்புகள் என்றும் ரணங்களாகிவிடக் கூடாது என்றெண்ணியே என் நன்றிப்பதிவு இது. நமை சுற்றி உள்ள ஒவ்வோர் உயிரும் சுவாசிக்கும் காற்றில் பரவிய நச்சை முற்றிலுமாக அழிக்க,நாம் தான் அதை பரவ விடாமல் தடுக்க வேண்டும்… வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்… அன்புடன் மன்றாடுகிறேன் … மிக மிக அத்யாவசியம் எனில் அதனை நோக்கி செல்லலாம் இல்லை எனில் உங்கள் உறவுகளை பாதுகாக்கும் அரணாக நீங்கள் தான் மாற வேண்டும் .. நான் தவறவிட்டதை இன்னும் எத்தனயோ லட்சம் பேர்கள் தவறவிட்டதை தயவு கூர்ந்து வேறு யாரும் தவறவிட வேண்டாம்.. “வெற்றிகளில் அதே போல் நாமும் வெற்றி பெறலாம்” என்ற உத்வேகம் இருக்கலாம், அதைக் கொண்டாட உறவுகள் காத்திருப்பார்கள்.. ஆனால் இழப்புகளில் போட்டி போடாதீர்கள்.
இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது.. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அருண்ராஜா காமராஜ் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

Arun Raja Kamaraj’s emotional post in social media

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை.. ஆன்லைனிலும் அட்டகாசம்.; நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் உத்தரவு

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை.. ஆன்லைனிலும் அட்டகாசம்.; நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PSBB school harassmentசென்னை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது பி.எஸ்.பி.பி பள்ளி.

இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன.

கடந்த 20 ஆண்டுகளாக அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பறை மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் செய்த பாலியல் சில்மிசங்கள் குறித்து பேசப்பட்டன.

அதாவது ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் புகைப்படங்களை தனக்கு அனுப்ப சொன்னதாக மாணவிகள் குற்றம் சாட்டினர்.

மாணவிகளிடம் பாலியல் இரட்டை அர்த்தங்களுடன் கேள்வி கேட்பாராம்.

மேலும் மாணவிகளின் உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பது, அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்தும் விமர்சித்து பேசுவாராம்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது வெப் கேமரா முன்பாக வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஆசிரியர் வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும், அந்த அசிரியரைக் கூப்பிட்டு எச்சரித்ததோடு பள்ளி நிர்வாகம் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் புகார்கள் கூறுகிறது

இந்த செய்திகள் வைரலானதை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. தன் ட்விட்டரில்….

‘சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.” என கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புகார் குறித்து விசாரிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரனை நடத்த பள்ளியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் விசாரணை தகவல்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் விரைவில் அளிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தொல்லை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறையும் தெரிவித்துள்ளது.

PSBB teacher accused of child sexual harassment

அறிமுகம் இல்லாதவர்களை மின்ன வைக்க நான் நினைத்ததுதான்….; உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்.. – கமல் (வீடியோ)

அறிமுகம் இல்லாதவர்களை மின்ன வைக்க நான் நினைத்ததுதான்….; உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்.. – கமல் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanநடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்.

மே 2 தேர்தல் முடிவுக்கு பின்னர் அந்தக் கட்சியிலிருந்து பலரும் விலக தொடங்கினர்.

கமீலா நாசர், துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல், ஐஏஎஸ் சந்தோஷ் பாபு, பத்மப்ரியா, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர்.

இவர்களில் பலர் கட்சி தலைவர் கமல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்… “தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்…

“மாற்றம் என்றும் மாறாது நிகழ்ந்துக் கொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட, நாம் ஏற்றிய கொடி பறந்துகொண்டு இருக்கிறது.

நேர்மை வழியில் மாற்றத்தை தேடுபவர்களாய் நாம் உள்ளவரையில் நம் கொடி புத்தொளியோடு பறந்துகொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன்.

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். முக அறிமுகம் இல்லாதவர்களை மக்களிடம் மின்ன வைக்க நான் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாய் தெரிகிறது. பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அவர்களுக்கு காலம் பதில் சொல்லும். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே. தோல்வியை கொட்ட குழி தேடுவது ஜனநாயகம் அல்ல.

நாடோடிகள் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்கள் வியாபாரம் முடியும் வரை மட்டுமே தங்குவார்கள். கட்சியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தன் தவறுகளை மறைக்க பிறர் மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

தொண்டர்கள் நம் தரம் குறையாமல் வாதாடலாம்.

உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்”

என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan about his loss in politics

More Articles
Follows