பெண்களுக்கு சம உரிமை; பெரியார் சொன்னதை செய்தவர் கலைஞர் : – கார்த்தி

actor karthiமறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளரான கார்த்தி, இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்தி…

“முந்திய தலைமுறையில் இருந்த கடைசி மிகப்பெரிய ஜாம்பவான். அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம், நான் எதுவும் புதிதாக சொல்லிவிட முடியாது.

இட ஒதுக்கீட்டை அவர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால், சின்னச் சின்ன ஊர்களில் இருந்து இவ்வளவு பேர் படித்து பெரிய இடத்துக்கு வந்திருக்க முடியாது.

அதேமாதிரி, பெண்களுக்கு சம உரிமை வாங்கிக் கொடுத்ததும் அவர்தான்.

பெரியார் சொன்ன பல விஷயங்களை, ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது கலைஞர் தான்.

அப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். நிறைய முறை வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்பாவின் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுவார்.

நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்து அவரிடம் ஆசி வாங்கச் சென்றபோது, புத்தகம் ஒன்றைக் கொடுத்தார்.

அவருடன் பழகும் எல்லோரையும் பர்சனலாகத் தெரிந்து வைத்திருந்து, ஒவ்வொரு முறை செல்லும்போதும் வீட்டில் உள்ள எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார்.

ஸ்டாலின் சாரையும் வீட்டில் சென்று பார்த்து வந்தேன்.

அவருடைய குடும்பத்தாருக்கும், திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Overall Rating : Not available

Latest Post