10 ரூபாய்க்கு உணவளிக்கும் நடிகர்.; ஸ்விக்கி ஜூமோட்டோ டெலிவரி பாய்ஸ்களும் கார்த்தி கஸ்டமர்ஸ் தான்.!

10 ரூபாய்க்கு உணவளிக்கும் நடிகர்.; ஸ்விக்கி ஜூமோட்டோ டெலிவரி பாய்ஸ்களும் கார்த்தி கஸ்டமர்ஸ் தான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உணவகத்தில்
ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

தினசரி சராசரியாக100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஊருக்கே உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்ஸ்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள்கிறார்கள்.

லாப நோக்கம் எதுவுமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் திரு. கார்த்தி அவர்களின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இந்த உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.

Karthi fan club provides food at low cost to poor people

விலங்கு’-க்காக மீண்டும் இணைந்த ஜோடி விமல் – இனியா

விலங்கு’-க்காக மீண்டும் இணைந்த ஜோடி விமல் – இனியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 தளமானது, பல்வேறு வகையிலான கதையுடன் மிகச்சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமிகு ஒடிடி தளமாகியுள்ளது.

ஜீ5 யில் வெளியான ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ மற்றும் பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளன. தற்போது, ஜீ5 அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “விலங்கு” என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை, ஃபிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது.

7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது.

இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார்.

இனியா நயகியாக நடித்துள்ளார்.

இவர்கள் 2011ல் சற்குணம் இயக்கிய ‘வாகை சூட வா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது,

எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதில் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடர்.

விலங்கு தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்குனர் – G.துரைராஜ்.

ஜீ5 ஒரிஜினல் தொடரான “விலங்கு” பிப்ரவரி 18, 2022 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

ZEE5 Original Series “Vilangu” is all set to enthrall the audience with ultimate edge-of-seat moments

‘மகான்’ படத்தின் கதை.; அப்பா மகனாவே இணையும் விக்ரம் – துருவ் நெகிழ்ச்சி

‘மகான்’ படத்தின் கதை.; அப்பா மகனாவே இணையும் விக்ரம் – துருவ் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள ‘மகான்’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Prime மெம்பர்கள் இப்படத்தை பிப்ரவரி 10 முதல் Prime Video-இல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணலாம்.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேர்மையான, கொள்கை பிடிப்பு கொண்ட வாழ்க்கையிலிருந்து விலகியதால், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதையில் இந்த டிரெய்லர் நம்மை அழைத்துச் செல்கிறது. அவர் தனது லட்சியங்களை எட்ட தனித்து முன்னேறுகிறார். அதில் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், அவர் தனது மகன் தன்னுடன் இல்லாத இழப்பை உணர்ந்து, அவரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை இப்படம் சித்தரிக்கிறது.

“திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் முழு முயற்சியுடன் ஒத்துழைத்து, ஆதரவு தந்ததின் விளைவாக உருவான ‘மகான் =’ முழுமையான அன்பின் வெளிப்பாடு” என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

“விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் ‘மகான்’ திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது.

‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது. இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணரந்துள்ள இப்படம், ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். Amazon Prime Video மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ‘சீயான்’ விக்ரம் கூறுகையில்…

, “மகான் திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவின் சரியான கலவையைக் கொண்டிருக்கும். இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பல சாயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சாயலும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய 60வது படமாக எனது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதால், இது எனக்கு மிக முக்கியமான படமாகும்,

இரண்டாவதாக எனது மகன் துருவ் விக்ரம் இபடத்தில் எனது மகனாக நடிக்கிறார். இந்தப் பாத்திரத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மேலும் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகச் சித்தரிக்க முழுமையான உழைப்பை அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குநருடன் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகிறது. பிப்ரவரி 10 அன்று ‘மகான்/ Prime Video மூலம் உலகெங்கும் சென்றடைய உள்ளார். அதுவே எனது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.” என்கிறார்.

“மகான் எனக்கு முக்கியமான திரைப்படம் என்பேன். ஏனென்றால் நான் என் தந்தையுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை, அதுவும் அவரது மகனாகவே இதில் நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டவர்.

அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, ”என்று துருவ் விக்ரம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்….

“கார்த்திக் சுப்புராஜ் சாரின் இயக்கத்தில் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, என் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களையும் தீவிரத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார். எனது நடிப்பையும் படத்தையும் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..” என்கிறார்.

“விக்ரம் மற்றும் கார்த்திக்குடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம் ஆகும். ‘மகான்’ ஒரு ஆக்‌ஷன் நிறைந்த பொழுதுபோக்குப் படமாகும், கதை முழுவதும் பலவிதமான டிராமா மற்றும் உணர்ச்சிகள் பின்னிப்பிணைந்துள்ளது.

திரைப்படத்தில் எனது கதாபாத்திரமான நாச்சி, தனது சிறிய மற்றும் அன்பான குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை நடத்தும் ஓர் எளிமையான மற்றும் இரக்க குணமுள்ள பெண், அவரது கணவர் கொள்கைபிடிப்பான வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் செல்லும்போது அவரது உலகம் எவ்வாறு சிதைகிறது என்பதையே இப்படம் சித்தரிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள Prime Video பார்வையாளர்கள் படத்தை அதன் அற்புதமான கதைக்களத்திற்காகப் பெருமளவில் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று மகான் படத்தின் முன்னணி நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்டார்.

“நாம் செய்யும் பணி எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் பரவுவதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, மேலும் மகான் திரைப்படம் Prime Video-இல் உலகளாவிய பிரீமியர் மற்றும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மகான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அற்புதமான கதைக்களம் மற்றும் அதை இயக்குநர் விளக்கியுள்ள விதம் பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்.” ” என்று நடிகர் பாபி சிம்ஹா பகிர்ந்துள்ளார்.

கதை சுருக்கம்:

மகான் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதை. மனைவி மற்றும் ஒரு மகனுடன் ஒரு சிறிய குடும்பத்தில் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, ஒருபோதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் சாதாரண நபரின் கதை.

அவரது ஒரு நாள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துடன் ஒத்திசைப்பது போல இயல்பான வாழ்க்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையின் எல்லையை மீறி அடியெடுத்து வைக்கும் போது, அமைதியான வாழ்க்கை எதிர் திசையில் மாறி, அதன் விளைவாக அவரது குடும்பம் அவரை விட்டு வெளியேறுகிறது.

சிறு வயதில் தொலைந்து போன ஒரு நண்பருடன் கைகோர்த்து கோடீஸ்வரராகி ராஜ வாழ்க்கையை வாழத் துவங்குகிறார். இருப்பினும், ஒவ்வொரு நாளும் தனது மகன், தன்னுடன் இல்லாததை நினைத்து வருந்துகிறார்.

ஒரு நாள் அவரது மகன் ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவரது வாழ்க்கையில் திரும்பி வரும்போது அவருக்கு வாழ்க்கை முழுமை பெற்றது போலத் தோன்றுகிறது. அடுத்து என்ன நடக்கிறது? என்பதே இந்த பரபரப்பான, அதிரடியான ரோலர் கோஸ்டர் சவாரியின் முக்கியக் கட்டம்.

 

Prime Video Launches the Trailer of Chiyaan Vikram and Dhruv Vikram StarrerAction Thriller – Mahaan

‘சாயம்’ படத்தை வெளியிட கூடாது என இயக்குனருக்கு மிரட்டல்

‘சாயம்’ படத்தை வெளியிட கூடாது என இயக்குனருக்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.

அபி சரவணன் (எ) விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்

பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்

படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் ஹீரோ விஜய் விஷ்வா பேசும்போது,…

“இந்த ஏழு வருட போராட்டத்தை பற்றி இங்கே குறிப்பிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது இயக்குனரின் வலி என்பதால் வெளியே தெரிய வேண்டியதாகி விட்டது.

‘சாயம்’ என்கிற பெயரில் ஜாதியை பற்றியதாக இந்த படம் உருவாகி இருந்தாலும், எந்த ஒரு ஜாதியையும் உயர்த்தியோ தாழ்த்தியோ இந்தப்படத்தில் பேசப்படவில்லை.

ஜாதி பார்க்க வேண்டாம்.. குறிப்பாக படிக்கும் வயதில் மாணவர்கள் ஜாதி பற்றி நினைக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிற கருத்தை தான் இதில் அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் ஆண்டனிசாமி.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சமயத்தில் இருந்து, படத்தில் நடித்தபோதும், இப்போது நடித்து முடித்த பின்பும் கூட மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.. நிச்சயம் எனது திரையுலக பயணத்தில் இந்த படம் எனக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

இயக்குனர் ஆண்டனி சாமி பேசும்போது….

, “நூறு முறை இந்த படத்தை கைவிட்டு விடலாம் என நினைத்து, ஆனால் திரும்பத்திரும்ப ஆரம்பித்து, இப்போது இந்த படத்தை ரிலீஸ் வரை கொண்டு வந்து விட்டோம். இந்த படத்திற்கான பிரச்சனைகளை சமாளிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்படவில்லை.. ஆனால் எதிர்ப்புகளை அதிகம் சந்தித்து விட்டோம்.. இப்படியெல்லாம் கூட எதிர்ப்பு வருமா எனும் விதமாக எதிர்பாராத திசையிலிருந்து எல்லாம் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

குறிப்பாக இந்த படத்தை தென் மாவட்டங்களில் திரையிட வேண்டாம் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தென் மாவட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்பதால் தென் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியன் அவர்களின் புகைப்படம் சில காட்சிகளில் பின்னணியில் இடம்பெறுவது போல செய்திருந்தோம்

சென்சாரில் கூட, இந்த படத்தில் நாங்கள் பயன்படுத்தி இருந்த தலைவர்களின் புகைப்படங்களை எல்லாம் அவர்கள் உருவம் தெரியாதவாறு மறைக்கும்படி கூறினார்கள். கதைக்கும் காட்சிக்கும் தேவைப்பட்டது என்பதாலேயே அவர்களது படங்களை இடம்பெறச் செய்தோம்..

ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதால் வேறுவழியின்றி சென்சார் அதிகாரிகள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டியதாகிவிட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு, எதற்காக அந்த தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன, குறிப்பிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்தால் நன்றாக இருக்கும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

Director Antony Samy’s Saayam gets trouble in release

‘மூன்றாம் பிறை’ 40ம் ஆண்டு விழாவில் பங்கேற்க உங்களுக்கு சூப்பர் சான்ஸ்

‘மூன்றாம் பிறை’ 40ம் ஆண்டு விழாவில் பங்கேற்க உங்களுக்கு சூப்பர் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்றாம் பிறை 40ஆம் ஆண்டு கொண்டாட்டம் விழா சிறப்பு மலரில் வாசகர்களும் பங்கேற்க வாய்ப்பு:

பாலுமகேந்திரா நூலகம் அறிவிப்பு

03-02-2022 – வணக்கம்.

சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில் உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் 1982 ல் வெளியான மூன்றாம்பிறை தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது.

ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்,பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம் வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ..

இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறது .

இந்த மலரில் படத்தில் இடம்பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம்.

அதன் பொருட்டு மூன்றாம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பவேண்டும்.

இக் கட்டுரையோடு படம் பார்த்த திரையரங்கம், .. ஊர் மற்றும் தங்களது தற்போதைய அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன ..

தேர்வு செய்யப்படும் பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த கட்டுரைகளுக்கு தலா ஐயாயிரம் ரூபாய். பரிசளிக்கப்படும்.

அது மட்டுமல்லமால் படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு.

ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்
உங்கள் கட்டுரையை கீழே கொடுக்கப் பட்டுள்ள பாலு மகேந்திரா நூலக முகவரிக்கு தபால் மூலமகவோ அல்லது ஈ மெயில் முகவரி வழி இணையம் வழியிலோ அனுப்பலாம்.

புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருநதால் பிரசுரத்துக்கு ஏற்கப்பட மாட்டாது . இறுதி தேதி 12–02—2022.

பாலு மகேந்திரா நூலகம், மலாட்சுமி அடுக்ககம் , 4வது தெரு அன்பு நகர்
வளசரவாக்கம் சென்னை

Email: [email protected]

அலைபேசி: 9884060274

Kamal Haasan’s Moondram Pirai completes 40 years

ஜெய் இசையமைத்து நடித்த ‘சிவ சிவா’ படத்தலைப்பை மாற்றினார் சுசீந்திரன்

ஜெய் இசையமைத்து நடித்த ‘சிவ சிவா’ படத்தலைப்பை மாற்றினார் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்துக்கு ‘சிவ சிவா’ என டைட்டில் வைத்திருந்தனர்.

மீனாட்சி என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெய்யின் 30வது திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு நடிகர் ஜெய்யே இசையமைத்துள்ளார்.

ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை காசி விஸ்வநாதன் எடிட் செய்துள்ளார்.

லென்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை ‘வீரபாண்டியபுரம்’ என மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.

Jai Next Movie Titled As Veerapandiyapuram Directed By Suseenthiran

More Articles
Follows