பரபரப்பான ஷீட்டிங்கில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !!

பரபரப்பான ஷீட்டிங்கில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி.
கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில் “ரெமோ” இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கைதி” டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த “ கைதி” பட டீஸரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். “ரெமோ” படத்தினை இயக்கி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இப்படத்தில் “கீதா கோவிந்தம்” தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில்
கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ்,லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம்
இசை – விவேக் மெர்வீன் / ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
எடிட்டிங் – ரூபன்
கலை – ஜெய்சந்திரன்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
புரொடெக்‌ஷன் டிசைனர் – ராஜீவன் நம்பியார்
நிர்வாக தயாரிப்பு : அரவிந்த்ராஜ் பாஸ்கரன்

தயாரிப்பு – Dream warrior Pictures S.R.Prakashbabu, S.R.Prabhu

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இன்று திங்கள் முதல் திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்.
அனைவரையும் மகிழ்வித்து வரும் கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஎஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.

பிரமாண்ட அரங்கம் – அதிரடி நடனம்.

விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்.

M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “

என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,

படத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.

C.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

கதாநாயகன் .- ஜெய்,

கதாநாயகிகள் – அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா

இயக்கதிலும் நடிப்பிலும் சிகரத்தை தொடும் கௌரவ் நாராயணன்

இயக்கதிலும் நடிப்பிலும் சிகரத்தை தொடும் கௌரவ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கதையின் தன்மையையும் திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

எதார்த்த வாழ்வியலுக்கு “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்கு “சிகரம் தோடு, தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” என படத்திற்கு படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களை தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார்.

விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்.

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது “ கடமான் பாறை “

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது “ கடமான் பாறை “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் “ கடமான்பாறை “

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – T.மகேஷ்.
இசை – ரவிவர்மா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன் , மன்சூரலிகான்.
வசனம் – R.துரை
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், பம்மல் சந்துரு. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார்
கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம் – மன்சூரலிகான்.

படம் பற்றி மன்சூரலிகான் கூறியதாவது…

நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படம் இம்மாதம் 23 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

வேலையில்லாதவரா நீங்க? நம்ம விஜய்சேதுபதி வேலை வாங்கி தர்றார்

வேலையில்லாதவரா நீங்க? நம்ம விஜய்சேதுபதி வேலை வாங்கி தர்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi giving opportunity for jobless peoples வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற இயக்கத்தின் மூலமாக வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டு வருகிறது.

இந்த இயக்கம் கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 5 மாதங்களாக நடிகர் விஜய்சேதுபதி இந்த இயக்கத்திற்கு உதவி செய்து, தமிழகம் முழுவதும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், விஜய் சேதுபதியின் துணையோடு தமிழகம் முழுவதும் செயல்பட துவங்கியுள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த இயக்கம் பொதுமக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றுள்ளது.

Vijay Sethupathi giving opportunity for jobless peoples

இதன், வீடியோ இணைப்பு…

சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கும் ரஜினியின் உறவினர்

சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கும் ரஜினியின் உறவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

YG Madhuvandhi says she is waiting for challenging characters சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உறவினர் நடிகர் ஒய்ஜி. மகேந்திரன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நடிகர் Y.G.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அவரை தொடர்ந்து அவரது மகளுமான Y.G.மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.

Y.G.மதுவந்தி தனது தந்தை Y.G.மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார்.

Theatre of Maham எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார்.

இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 50க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நாடகங்கள் மேடையெற்றப்பட்டது.

பரதநாட்டிய கலைஞர், மேடை பாடகி, நடிகை என இயல் இசை நாடகம் என்று மூன்று துறையிலும் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார்.

தற்போது நாடகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை Y.G.மதுவந்தி, பல படங்களில் நடித்தும் வருகிறார்.

குடும்ப பாங்கான, சவாலான கதாபாத்திரங்கள் உள்ள நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அப்படி பட்ட கதாபாத்திற்காக தான் நடிப்பதற்கு எப்பவும் ரெடி என்றும் கூறுகிறார் Y.G.மதுவந்தி.

YG Madhuvandhi says she is waiting for challenging characters

More Articles
Follows