ஆபிஸ் இடிப்பு.; நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

ஆபிஸ் இடிப்பு.; நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kangana ranautதோனி படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.

இதற்கு மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இனி கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் கோபமடைந்த கங்கனா ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்கள்’ என சவால் விடுத்தார்.

இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும் சிவசேனா அவருக்கு மிரட்டல் விடுத்து வந்த்து.

இது அரசியல் மற்றும் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையில்… சஞ்சய் ரௌத் இது தொடர்பாக கூறியதாவது: அந்தப் பெண் (கங்கனா) மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஏனெனில், மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அவா் பேசியுள்ளாா். இது ஒட்டுமொத்த மகாராஷ்டிர மக்களையும் அவமதிக்கும் செயல். தனது பேச்சுக்காக அவா் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டால், அவரை மன்னிப்பது தொடா்பாக யோசித்து முடிவெடுப்போம். ஆமதாபாத் நகரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசும் துணிவு அவருக்கு உண்டா என்று அவா் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பிரபலங்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப எக்ஸ், ஒய், இசட் பிரிவுகளில் காவல் பாதுகாப்பு வழங்கப்படும்.

கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வரும் கங்கனாவுக்கு 24 மணி நேரமும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளார்கள்.

மேலும் இமாசலப் பிரதேச அரசும் கங்கனாவுக்குத் தனியாகப் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. கங்கனா மும்பை செல்லும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என இமாசலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனது ஆஃபிஸின் புகைப்படத்தைப் பதிவிட்ட கங்கனா, மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து விடுவார் என்று அச்சம் தெரிவித்திருந்தார். அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்… அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி கங்கனாவின் அலுவலகக் கட்டடத்தை மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுள்ளது.

Kangana Ranaut granted Y-plus category security

உங்க பொழப்புக்கு ஹிந்தி.. நாங்க படிக்க கூடாதா-? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

உங்க பொழப்புக்கு ஹிந்தி.. நாங்க படிக்க கூடாதா-? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajeshகடந்த சில நாட்களாக ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

‘I AM A தமிழ் பேசும் INDIAN’ என்ற வெள்ளை நிற டி-ஷர்ட்டும் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற சிவப்பு நிற டி-ஷர்ட்டும் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தன் பங்குக்கு ஹிந்தி எதிர்ப்பை தெரிவித்தார்.

ஆனால் இதுவே அவருக்கு பிரச்சினையானது.

கடந்த 2017ல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தியில் ‘டாடி’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

மேலும் மும்பையில் அப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ஹிந்தியில் பேசி தனக்கும் ஹிந்தி தெரியும் என கூறியிருந்தார்.

அந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதில்…, “உங்க பொழப்புக்கு மட்டும் ஹிந்தி வேண்டும்.. ஆனால் மற்றவர்கள் படிப்பதற்கு ஹிந்தி கூடாதா..? என ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Aishwarya Rajesh double stands on hindi issue

வாத்தியாரை மிஞ்சுவார் தளபதி..; அமைச்சர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி போஸ்டர்

வாத்தியாரை மிஞ்சுவார் தளபதி..; அமைச்சர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ஆரம்ப கால சினிமாக்களில் ரஜினி ரசிகராகவே அறியப்பட்டார். இதனால் ரஜினி ரசிகர்களும் விஜய் படத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.

தற்போது ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு விஜய் ஆசைப்படுவதால் ரஜினிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கிளம்பிவிட்டனர்.

இதனை விஜய்யும் கண்டிப்பதில்லை. கண்டுக்கவும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் மெர்சல் உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆர் ரசிகராகவே வலம் வர ஆரம்பித்தார் விஜய்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களும் தளபதியை வாத்தியார் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

அண்மையில் விஜய் சங்கீதா திருமண நாள் வந்தபோது புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி என டிசைன் செய்து போஸ்டர்களை ஒட்டினர்.

மேலும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எம்ஜிஆர் போட்டோக்களில் விஜய் முகத்தை வைத்து டிசைன் செய்து போஸ்டர்கள் நாளைய தமிழகமே.. வாத்தி கம்மிங் என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதை எல்லாம் ஆளும் அதிமுக கட்சி நேரடியாக கண்டுக்கவில்லை என்றாலும் எம்ஜிஆர் இடத்திற்கு விஜய்யால் வர முடியாது என அமைச்சர்கள் மூலம் கருத்து தெரிவித்தனர்.

இதனால் இளைய தளபதியின் இளைய ரத்தங்கள் சூடாகிவிட்டன.

அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்… வாத்தியாரை மிஞ்சுவார் தளபதி…. எம்ஜிஆரை மிஞ்சுவார் விஜய் என போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகின்றனர்.

இனி என்ன என்ன நடக்க போகுதோ…??

pic

vijay-poster-thumbnail

MGR on vijay posters creates controversy

‘வலிமை’ அட்டேட் விரைவில் வரும்..; யுவன் பதிலால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

‘வலிமை’ அட்டேட் விரைவில் வரும்..; யுவன் பதிலால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith yuvanதல அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் “வலிமை”.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு, யுவன் இசையமைக்கிறார்.

காலா பட நாயகி ஹுமா குரேஷி அஜித் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு சினிமா ஹீரோ கார்த்திகேயா வில்லனாகவும், யோகி பாபு காமெடியனாக நடிக்கிறார்.

இந்தப் பட இயக்குனர் வினோத் சமீபத்தில் அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இசை அமைப்பாளர் யுவன் தன் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

‘வலிமை’ வெற்றி பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ படம் பற்றி அப்டேட் கேட்டார்.

அதற்கு Coming Soon “விரைவில் வரும்” என யுவன் பதிலளித்துள்ளார்.

நீண்ட காலமாக வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்.

music composer yuvan shakar raja shares update on valimai

வின்னர் சிக்கன் டின்னர்..; பப்ஜிக்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் சென்ற ரசிகர்கள்

வின்னர் சிக்கன் டின்னர்..; பப்ஜிக்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் சென்ற ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pubg fansவீடியோ கேம்ஸ்களால் இன்றைய இளைஞர்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் பப்ஜி மொபைல் விளையாட்டை விளையாடி வந்தனர்.

இதனையடுத்து பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த தடை பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பப்ஜி பிரியர்கள் வருத்தமடைந்தனர்.

சிலர் மீம்ஸ் மூலம் தங்கள் கருத்தை பகிர்ந்தனர்.

சிலர் ஒரு படி மேலே சென்று பப்ஜின் உருவ படத்திற்கு இறுதி ஊர்வலம் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பப்ஜி போட்டோவுக்கு மாலை அணிவித்து பாடை கட்டி, வெள்ளை நிற உடையணிந்து தோள்களில் சுமந்துகொண்டு ஊர்வலம் மேற்கொண்டனர்.

இறுதி சடங்குகளின் போது ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்று கோஷமிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PUBG fans take out funeral procession for banned game in TN

ஆன்லைன் புக்கிங் & விளம்பரத்தில் வருவாய்.. க்யூப் கட்டணம் முடியாது..; தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா போடும் கன்டிசன்ஸ்

ஆன்லைன் புக்கிங் & விளம்பரத்தில் வருவாய்.. க்யூப் கட்டணம் முடியாது..; தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா போடும் கன்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathirajaதயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய அணி பாரதிராஜா தலைமையில் அண்மையில் உருவானது.

தற்போது பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் இணைந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில்…

சின்ன பட்ஜெட் முதல் 70 கோடி வரை ஷேர் வரும் படங்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதுபோல் திரைப்படங்கள் வருமா? என்பது இயலாத காரியம்.

எனவே இதைக் கருத்தில்கொண்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கியூப் அல்லது யுஎப்ஓ-க்கான கட்டணத்தை இனி வரும் காலங்களில் செலுத்த முடியாது.

திரைப்படத்தின் இடைவேளைகளில்
தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.

இத்துடன் சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களை திடீரென நிறுத்துவதும், தரமான படங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் வேதனையளிப்பதாகக் கூறியுள்ளனர்.

நிறைய திரையரங்குகள் சிலரால் குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கான வியாபார சுதந்திரம் பறிபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tamil Film Active Producers teams conditions to release films

More Articles
Follows