ஆதரவளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கமல் நன்றி

mk stalinதமிழகத்தில் நடந்துவரும் அரசியல் சூழ்நிலையை கமல் விமர்சித்து வருகிறார்.

எனவே கமலை மிரட்டும் நோக்கத்தில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தும், ஒருமையில் பேசியும் வருகின்றனர்.

இந்நிலையில் கமலுக்கு திரையுலகம் எப்போதும் துணை நிற்கும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்திருந்தார்.

கமலுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

எனவே ஸ்டாலினுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் கமல்.

அவர் பதிவிட்டுள்ளதாவது…

அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.

ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது.

Kamal said thanks to MK Stalin for his support

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post