AK 62 படத்தில் கமல்ஹாசன் பட நாயகி.; மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார்.!

AK 62 படத்தில் கமல்ஹாசன் பட நாயகி.; மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில பிரச்சனைகளால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிய பட குழு தற்போது மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிவா இயக்ஐஇ 2017-ம் ஆண்டில் வெளியான ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார் காஜல்.

கொரோனா லாக்டவுனில் திருமணம் செய்து கொண்ட காஜல் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

மேலும் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajal aggarwal to pair opposite with Ajith again?

ஆர்ஜே. பாலாஜி-யின் ‘ரன் பேபி ரன்’.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்ஜே. பாலாஜி-யின் ‘ரன் பேபி ரன்’.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த படம் ‘ரன் பேபி ரன்’.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், ராதிகா சரத்குமார், பகவதி பெருமாள், ஜார்ஜ் மர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ரன் பேபி ரன் வரும் மார்ச் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rj balaji’s run baby run OTT Release Date Announcement

மீண்டும் ரிச்சர்ட் உடன் இணையும் ‘பகாசூரன்’ பட இயக்குனர்

மீண்டும் ரிச்சர்ட் உடன் இணையும் ‘பகாசூரன்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ரதாண்டவம்’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி.

இவரது இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

நவீன உலகின் ‘பகாசூரன்’ தான் மொபைல் போன் என்பதை இந்த படத்தின் கதை கருவாக வைத்திருந்தார் இயக்குனர்.

இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.

இது தொடர்பாக அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில்…

“இவர் யாரென்று தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி… என்னோட அடுத்த படத்தின் நாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்…” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Bakasuran director Mohan g next movie news update

‘துருவ நட்சத்திரம்’ இந்தத் தேதியில் ரிலீஸ் ஆகிறதா ?

‘துருவ நட்சத்திரம்’ இந்தத் தேதியில் ரிலீஸ் ஆகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 இல் ஆரம்பிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளி கொண்டே போனது .

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் குறித்து கடந்த மாதம் கவுதமும், விக்ரமும் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்களை முடித்து, மே 19 அன்று துருவ நட்சத்திரம் வெள்ளித்திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை. இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘Dhruva Natchathiram’ to hit the screens on this date?

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி சூட்டிங் விபத்துக்கு பிறகு மீண்டும் பணிகளில் இறங்கியுள்ளார் . படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் ஆண்டனியே இயக்கிய ‘பிச்சைக்காரன் 2’ இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் அதே தேதியில் ‘பிச்சகடு2’ என்ற பெயரில் வெளியாகிறது. சசி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிச்சைக்காரன்/பிச்சகாடு’ படத்தின் தொடர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antony officially announces festive release date of ‘Pichaikkaran 2’

மறைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவி ஜெயலட்சுமி காலமானார்

மறைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவி ஜெயலட்சுமி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், தெலுங்கு திரையுலகின் மிகவும் போற்றப்பட்ட நடிகர் கே.விஸ்வநாத்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர், பிப்ரவரி 3 ஆம் தேதி தனது 93 வயதில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

கணவர் இறந்து 24 நாட்களுக்கு பிறகு அவரது மனைவி ஜெயலட்சுமியும் உயிர் பிரிந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இவர் வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டு வந்தார்கள். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

பல தெலுங்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஸ்வநாத்தின் அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு வந்தார்கள்.

விஸ்வநாத்

director K.Viswanath’s wife Jayalakshmi passes away

More Articles
Follows