ஜெய் – அதுல்யா இணைந்த ‘எண்ணித்துணிக’ இசை விழா சுவாரஸ்யங்கள்

ஜெய் – அதுல்யா இணைந்த ‘எண்ணித்துணிக’ இசை விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக”.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது..

“ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“

ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது..

“இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த படம் இப்படி உருவாவதற்கு காரணம். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.“

இசையமைப்பாளர் சாம் சி எஸ் கூறியதாவது..

இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்த படம் பார்ப்பவரை சீட் நுனிக்கு கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர்.

ஜெய் மற்றும் அதுல்யா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கிறது. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளது.

நடிகை அதுல்யா கூறியதாவது..,

“இந்த படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெய் கூறியதாவது..

“இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி

இயக்குனர் வெற்றி செல்வன் கூறியதாவது..

“தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம்.

எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி“

நடிகர் மாரிமுத்து கூறியதாவது..

“இந்த படத்தில் நான் ஜெய் உடைய அப்பாவாக நடித்திருக்கிறேன். இந்த படம் ஒரு பாசிடிவ் அதிர்வலையை தரும். ஒளிப்பதிவாளர் தினேஷ் இந்த படத்திற்காக கடினமான அர்பணிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம். “

பாடலசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது..

“ பெரிய போராட்டங்களை கடந்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சாம் சி எஸ்- க்கு எனது நன்றிகள். தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. “

ஜாக்குவார் தங்கம் கூறியதாவது..

“ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் ஜெய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நிச்சயமாக இந்த படம் மிகபெரிய வெற்றிப்படமாக அமையும். ஜெய்யும் நாயகியயும் உண்மையிலேயே காதலித்து வாழ்ந்துள்ளார்கள். பார்க்க அழகாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குனர் ஆர் வி உதயகுமார் கூறியதாவது..

“உள்ளடக்கம் சிறப்பாக உள்ள படங்களை உலகம் முழுவதும் ரசிப்பார்கள். இந்த படத்திற்காக எவ்வளவு போராடினார்கள் என எனக்கு தெரியும். படத்தில் ஜெய் பிரமாதமாக நடித்துள்ளார். இது ஒரு நேர்த்தியான திரைப்படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். “

மிர்ச்சி சிவா கூறியதாவது…

இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகபெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் வசந்த் கூறியதாவது…

“நன்றியுணர்வு அதிகம் இருப்பவர் இயக்குனர் வெற்றி, அவர் மிகப்பெரிய வெற்றியடைவார். வெற்றியின் இந்த படத்திற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் மிகச்சிறந்த கேமராமேன், அவருடைய லைட்டிங், காம்போசிசன் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவரும் சிறந்த உழைப்பினை கொடுத்துள்ளனர்.

முதல் பட இயக்குனர் இயக்கும் போல் இந்த படம் இல்லை. இதை படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் கூறியதாவது..

இயக்குனர் வெற்றியை பார்த்த போதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்கு தெரியும். இந்த படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப்பெரியது. அதற்கு நன்றியை கூறிகொள்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்கு பெரிய பலம். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசியதாவது…

இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தை தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இத்திரைப்படத்தில் மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சாம் CS இசையமைத்துள்ளார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Jai Athulya starrer Yenni thuniga audio launch highlights

EXCLUSIVE – நிம்மதி இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி.; சூப்பர் ஐடியா கொடுக்கும் மக்கள்

EXCLUSIVE – நிம்மதி இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி.; சூப்பர் ஐடியா கொடுக்கும் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூலை 22.. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது…

“இந்த யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

நான் நடித்த படங்களில் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான்.

எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறி விட்டனர். ஆனால் நான் இன்னும் நடிகனாகவே இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன்.

ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

இதனையடுத்து ரஜினிக்கு ஐடியா கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் சில கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ரஜினிகாந்த் நிம்மதியாக இருப்பார். அவருக்கு என்ன கவலை? இன்னும் பத்து தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பலர் கணக்கு போடும் கொண்ட சூழ்நிலையில் எனக்கு 10% கூட நிம்மதி இல்லை என்ற ரஜினிகாந்த் கூறியிருப்பதால் சிலர் அதற்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்து வருகின்றனர்.

தலைவா.. நீங்கள் ‘சிவாஜி’ படத்தில் நடித்த போது.. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை நீங்கள் செய்து காட்டினீர்கள்..

அதுபோல நிஜத்தில் உங்கள் பெயரில் அறக்கட்டளைகள் ஏற்படுத்தலாம்.. ஏழை மாணவர்களுக்கு உயர்தர கல்வி கொடுக்கலாம்.. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம்..

வறட்சியான கிராமங்களை வளர்ச்சி மிக்க கிராமங்களாக மாற்றி அமைக்கலாம்… நாட்டின் உயிரான விவசாயத்திற்கு உதவி செய்யலாம்..

தரமான மருத்துவம் கிடைக்க உதவி செய்யலாம்… இதன் மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் பயனடைவார்கள்..

உங்களை வாழவைத்த… வாழ வைத்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம்.. தமிழகமும் வளம் பெறும். மக்கள் உங்களை மனதார வாழ்த்துவார்கள்..

நீங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் இதை செய்து காட்டினால் உங்களது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.. இதன் மூலம் உங்களுக்கு சந்தோஷம் நிம்மதி புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.

நீங்கள் சொன்ன சித்தர்களை விட பல மடங்கு நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.. ‘பாபா’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சித்தர்கள் உங்களை வாழ்த்துவது நிஜத்தில் நிறைவேறும்.”

இவ்வாறு பல சூப்பர் டிப்ஸ்களை சூப்பர் ஸ்டாருக்கு வழங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

Super idea to super ranjikanth by his fans

https://www.youtube.com/shorts/hNELMehNg-A

காணாமல் போன 10000 குழந்தைகள்.; ‘ஜோதி’ சொல்லும் அதிர்ச்சியான உண்மை தகவல்

காணாமல் போன 10000 குழந்தைகள்.; ‘ஜோதி’ சொல்லும் அதிர்ச்சியான உண்மை தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஜோதி’.

மிகப்பெரிய சஸ்பென்ஸ் திர்லர்ரோடு சேர்ந்து அமைந்திருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு.

இந்த ஜோதி திரைப்படத்தை “டிக் டாக்” பிரபலமான ஜி . பி முத்து அவர்கள் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினர்களையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படத்தில் சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கின்றது. என்றும் அது இதுதான் என்று நம் கணிக்கையில் அது இல்ல அப்படின்னு நம் கவனத்தை வேறு மாதிரி திசை திருப்புகின்றது.

இந்த படம் என்று ஜோதி படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் 11 ஆயிரம் குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள். அதில் இன்றைக்கு வரைக்கும் 10800 குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றும் அதிர்ச்சியான ஒன்றும் தான்.

மேலும் இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதை தான் குழந்தைகளை கடத்திவிற்கும் கும்பல் இன்று அதிகமாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம் தான் என்றும் கூறினார் ஜி பி முத்து.

படத்தைப் பார்த்த ஜி.பி. முத்துவிடம் நடிகர் வெற்றியும், நடிகை ஷீலாவும், தயாரிப்பாளர் ராஜா சேதுபதியும் கலந்துரையாடிய கலகலப்பான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tik Tok star GPMuthu In full praises mode for jothi

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவியம்மாள் மரணம்

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவியம்மாள் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜூன்.

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் இவர். தற்போது வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் வயது 84 உடல்நிலை சரியில்லாமல் இன்று ஜூலை 23 மதியம் 3.30 மணியளவில் பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.

பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Actor Arjun’s mother Lakshmi Deviyammal passes away

என் ரசிகர்கள் சன்னியாசி ஆகிட்டாங்க.. நான் நடிகனாகவே இருக்கேன்.. நிம்மதி, சந்தோஷம் இல்ல..; ரஜினி ஓபன் டாக்

என் ரசிகர்கள் சன்னியாசி ஆகிட்டாங்க.. நான் நடிகனாகவே இருக்கேன்.. நிம்மதி, சந்தோஷம் இல்ல..; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூலை 22.. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது…

“இந்த யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

நான் நடித்த படங்களில் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான்.

இந்த இரு படங்கள் ரிலீசான பின்னர் தான் எல்லோருக்கும் இவர்கள் பற்றி தெரிய வந்தது. இதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறி விட்டனர். ஆனால் நான் இன்னும் நடிகானகவே இருக்கிறேன்.

இமயமலையில் அமைந்துள்ள குகைகள் சொர்க்கம். அங்கு கிடைக்கும் சில மூலிகைகளை சாப்பிட்டால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுபோல கங்கை நதியில் பல மூலிகைகள் கலக்கும். அதனால் அது புனிதமாக உள்ளது.

உடலை பாதுக்காக்க உணவை சரியாக எடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

மனிதர்கள் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வார்கள்.. ஆனால் குழந்தைகள் அப்படியல்ல.

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன்.

ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

No peace, no happiness..; Rajini Open Talk

5 தேசிய விருதுகளை சூரையாடியது ‘சூரரைப் போற்று’.; அறிமுகம் முதல் குடும்பம் வரை அனைவருக்கும் சூர்யா நன்றி

5 தேசிய விருதுகளை சூரையாடியது ‘சூரரைப் போற்று’.; அறிமுகம் முதல் குடும்பம் வரை அனைவருக்கும் சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய அளவில் சிறந்த படமாக சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டது.

சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் சூர்யாவும் (சூரரைப் போற்று), நடிகர் அஜய் தேவ்கனும் (தனாஜி:தி அன்சங் வாரியர்) ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

விருதுக்கான வெள்ளித்தாமரையையும், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் இருவரும் பகிர்ந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகையாக ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளர் விருதை (பின்னணி இசை) ‘சூரரைப் போற்று’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் ஆகியோர் விருது பெறுகின்றனர்.

ஆக 5 விருதுகளை ‘சூரரைப் போற்று’ படம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூர்யா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வணக்கம்..

அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்..

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது.

தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..

அன்புடன்,
சூர்யா.
23.07.22

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Won 5 National Awards for ‘Soorarai Pottru’

More Articles
Follows