கடத்தப்பட்ட பெண்களை மீட்க *சென்னை டூ பாங்காக்* செல்லும் ஜெய் ஆகாஷ்

கடத்தப்பட்ட பெண்களை மீட்க *சென்னை டூ பாங்காக்* செல்லும் ஜெய் ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jai Akash next movies Chennai to Bangkok and Lungi Raja updatesஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் ‘சென்னை டூ பாங்காக்’.

இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள்.

யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் :

இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன் அந்த பெண்களை மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான்.

அங்கே சென்றதும் தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்சசியான விபரம் தெரிய வருகிறது.

அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை.

இதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.விறு விறுப்பனா சண்டை காட்சிகளும் இடம்பெறுகிறது .

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், ஸ்ரீலங்கா தாயலாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது. U.K.முரளியின் இசையில்,தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய,, இயக்குனர் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவர் இயக்குகிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து – இயக்கம் ; சதீஷ் மற்றும் சந்தோஷ்
இசை ; U K முரளி
ஒளிப்பதிவு ; தேவராஜ் – பாலா

ஜெய் ஆகாஷ் அடுத்து 3 படங்களை தயாரித்து நடிக்கவுள்ளார். அதில் ஒரு படத்திற்கு லுங்கி ராஜா எனத் தலைப்பிட்டுள்ளார்.

Jai Akash next movies Chennai to Bangkok and Lungi Raja updates

Chennai to Bangkok Audio launch stills (28)

மியா பாடல் தொகையை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் இனியா

மியா பாடல் தொகையை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் இனியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Iniya decided to help cancer patient from her album song Miaஇனியா …தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தை அதிக அளவில் நேசிக்கக் கூடியவர்.

அதனால் மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.

மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும். விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும்.

இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள் எவ்வளவோ தடைக்கற்கள்.

ஆனால் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போரடுகிறாள் அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது..இது தான் மியாவின் பதிவு..

“வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா ” என்று தொடங்கும்
இந்த இசை ஆல்பத்தில் வசனங்களும் இருக்கும்.

வழக்கமான இசை ஆல்பம் மாதிரி இல்லாமல் ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் உருவாக்கப் பட்டுள்ளது.

அமயா எண்டர்டைமெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக இனியா தயாரித்து மியா என்ற கதாபாத்திரமேற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு : அபி ரெஜி. லாவல்
எடிட்டிங் : அருள் தாஸ்
இசை : அஸ்வின் ஜான்சன்
பாடல் : கோவிந்தன் பழனிசாமி
கான்சப்ட் நடனம் : அருண் நந்தகுமார்..
இயக்கம் : S.மகேஷ்

இது பற்றி இனியா கூறும் போது…

இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி.

இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.

இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய திரு நவீன்பிரபாகர் திரு ரியாஸ், திரு கபாலிபாபு மூவரும் பியாண்ட்பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள்.

இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியா வை காணிக்கையாக்குகிறேன்” என்றார் இனியா.

Actress Iniya decided to help cancer patient from her album song Mia

பேஸ்புக்கில் காலா படத்தை லைவ்வாக ஓட்டிய நபர் கைது

பேஸ்புக்கில் காலா படத்தை லைவ்வாக ஓட்டிய நபர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala streamed 45 mins on FB Live That boy has been arrested by Singapore Policeரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது.

இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்குத்தான் முதல் காட்சிகள் துவங்கவுள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் முதல் நாள் பிரிமீயர் காட்சிகள் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் பேஸ்புக் சமூகவலைதளங்களில் சிலர் காலா படத்தின் 45 நிமிட வீடியோவை சட்டவிரோதமாக வெளியிட்டது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இப்படியான தகாத செயலில் ஈடுப்பட்ட பிரவீன் என்ற இளைஞரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளாதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Rajinis Kaala streamed 45 mins on FB Live That boy has been arrested by Singapore Police

kaala fb live arrest

காலா படம் பாருங்க; 50% தள்ளுபடி விலையில் நல்லா சாப்பிடுங்க.!

காலா படம் பாருங்க; 50% தள்ளுபடி விலையில் நல்லா சாப்பிடுங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai 5 Star Hotel offer Watch Kaala movie and get discount on foodரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் இன்று ஜீன் 7ல் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் ரஜினி மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக காலா படம் பார்த்தவர்களுக்கு மட்டூம் 50% தள்ளுபடி கொடுத்துள்ளது ஒரு ஹோட்டல் நிர்வாகம்.

அவர்கள் தெரிவித்துள்ளதாவது..

சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள்.

5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான உணவருந்தலாம். டிக்கெட்டை காட்டினால் உணவின் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை நாளை முதல் 2 வாரங்களுக்கு உள்ளது. ரஜினி மீது கொண்ட அன்பின் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai 5 Star Hotel offer Watch Kaala movie and get 50% discount on food

காலா-வை திரையிட பாதுகாப்பு கொடுங்கள்; கர்நாடக அரசுக்கு விஷால் கோரிக்கை

காலா-வை திரையிட பாதுகாப்பு கொடுங்கள்; கர்நாடக அரசுக்கு விஷால் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vishalகாலா படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட அந்த மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு போட்டு இருந்தது.

இதுகுறித்து விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று.

சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.

பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமா துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது.

ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல்புகக்கூடாது.இந்த தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள்.

கர்நாடகவில் முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் திரு.குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

காலா திரைப்படத்திற்கு தொடர்ந்துவரும் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது.

கர்நாடக அரசு காலா திரைப்படம் வெளியாவதை உறுதி செய்வதோடு படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும் காண வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்று நம்புகிறோம்.

இதனை ஒரு கோரிக்கையாகவே கர்நாடக அரசிடம் வைக்கிறோம்.

மாண்புமிகு முதலமைச்சர் தாங்கள் எடுக்கும் சுமூகமான முடிவினால் இரு மாநில பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். இரு மாநிலத்திற்கும் நட்புக்கும் இது எதிர்கால பயனை அளிக்கும்.

தலைவர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

Vishal request Karnataka Govt to give protection to Kaala screening theatres

kaala tfpc

காலா ஸ்பெஷல் ஷோக்களுக்கு தமிழக அரசு அனுமதி

காலா ஸ்பெஷல் ஷோக்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt gave permission for Kaala movie special shows at early morningரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வியாழக்கிழமை ஜீன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளதால் சிறப்பு காட்சிகள் முன்பதிவுகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு விட்டன.

எனவே ரசிகர்களின் மற்றும் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைப் படி காலா தயாரிப்பு தரப்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அதன்படி காலா சிறப்பு காட்சிகளுக்கு முதல் நான்கு நாட்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதாவது வரும் 10ம் தேதி வரை லைசென்ஸ் உள்ள திரையரங்குகளில் காலை 4 மணிக்கு முதல் காட்சிகளை திரையிட சிறப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

TN Govt gave permission for Kaala movie special shows at early morning

More Articles
Follows