தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2012ஆம் ஆண்டில் மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மோகன்லால் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்தது.
இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொண்டது.
ஆனாலும் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
பின்னர் அடுத்த கட்ட விசாரணையில்.. “மோகன்லால் வீட்டில் வளர்க்கப்பட்ட யானை இறந்து விட்டதால் அதனுடைய தந்தங்களை அவர் வைத்திருப்பதாக கேரள அரசு வழக்கு விசாரணை தெரிவித்தது.
இந்த நிலையில்.. “ஒரு சாமானியனுக்கு இதுபோன்று கேரள அரசு சிபாரிசிக்காக முன் வரவில்லை. ஆனால் ஒரு நடிகருக்காக வந்துள்ளது.
ஒருவேளை மோகன்லால் நடிகராக இல்லாவிட்டால் அவர் நிச்சயம் ஜெயிலில் இருந்திருப்பார் என அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது ஐகோர்ட்.
இது கேரளா மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகருக்கு ஒரு சட்டம்.? மக்களுக்கு ஒரு சட்டமா? என மலையாளிகள் மனம் கொதித்துள்ளனர்.
Ivory case Kerala HC reserves Mohanlals petition updates






