தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையில் பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரீ ஆனவர் விக்ரம்.
சேது வெற்றியால் இவர்களை ரசிகர்கள் சீயான் விக்ரம் என்றே அழைத்தனர்.
அதன்பின்னர் தில், ஜெமினி, சாமி, ஐ என பல அதிரடி ஹிட்டுகளை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
அண்மையில் இவரின் மகன் துருவ்வை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆதித்ய வர்மா படத்தை மேற்பார்வையிட்டு வந்தார். இதனால் சில படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.
தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென இந்த இரு படங்களை முடித்து விட்டு விக்ரம் நடிப்பதிலிருந்து ஓய்வுப்பெற போகிறார் என்றும் தன் மகனின் எதிர்காலத்தை முன்னேற்ற அவர் இப்படியொரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார் என தகவல் பரவியது.
முற்றிலும் தவறான இந்த செய்தியை எதையும் ஆராயாமல் முன்னணி மீடியாக்களே செய்தியாக வெளியிட்டது. நம் தளத்தில் வெளியாகவில்லை.
தற்போது இதை விக்ரம் தரப்பில் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இது முற்றிலும் வதந்தி, விக்ரம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா மீது தீராத காதல் கொண்டவர் நடிகர் விக்ரம். சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படியிருக்கையில் அவரை பற்றி எப்படிதான் இதுபோன்ற செய்திகளை உண்மையை அறியாமல் சிலர் வெளியிடுகிறோர்களோ என தெரியவில்லை.