ராயல்டி தொகை பாடகர்களுக்கு கிடைத்த புதையல்.: எஸ்.பி.பி. பேச்சு

Indian Singers Rights Association event updatesஇந்திய பின்னணி பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் பாடகர்களுக்கு ரூ.51 லட்சத்து 77 ஆயிரத்து 704 ‘ராயல்டி’ தொகை வழங்கும் விழாவும் 8-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ள பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், மனோ, எஸ்.பி.பி.சரண் பாடகிகள் பி.சுசீலா, வாணிஜெயராம், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜேசுதாஸ் பேசியதாவது:-

“தேசிய விருதை 8-வது முறையாக பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி.

பாடல்கள் பாடும்போது பணம் எவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இல்லை. சுருதி, உணர்வுகள் பாடலில் நன்றாக இருக்கிறதா? என்பதை மட்டும்தான் யோசிப்பேன்.

பாடகர்களுக்கு ராயல்டி கிடைப்பதன் மூலம் மரியாதை கிடைத்துள்ளது.” என்றார்.

பாடகரும் நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியன் பேசியதாவது…

“ஜேசுதாசுக்கு 8-வது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

முன்பெல்லாம் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும்போது இசைக்கருவிகள், கலைஞர்கள் என கல்யாண கச்சேரி மாதிரி இருக்கும்.

ஆனால் இப்போது அப்படியில்லை. பாடகர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

என்னைப் போன்ற சிலர் டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோம்.

இந்த நேரத்தில் பாடகர்களுக்கு ராயல்டி தொகை புதையல் மாதிரி கிடைத்து இருக்கிறது.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார்.

Indian Singers Rights Association event updates

Overall Rating : Not available

Latest Post