தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இந்திர கோபை’… இந்த புதுமையான பெயரைப் போலவே ஒரு வித்தியாசமான படமும் உருவாகி வருகிறது.
‘இந்திர கோபை என்றால் எத்தனை முறை அழித்தாலும் ஒரு வகையான பூச்சி மண்ணில் உருவாகி கொண்டே இருக்குமாம்.
இந்த பூச்சியானது மழைக் காலங்களில் உருவெடுத்து, பின்னர் பவுடராக உதிர்ந்து விடும். அப்படி உதிர்ந்த பிறகு பல பூச்சிகளாக உருவெடுத்து விடுமாம்.
அதுபோல் இப்படத்தில் உதிர்ந்த காதல் மீண்டும் புதிய காதலர்களாக உருவெடுத்து வருகிறது என்கின்றனர் படக்குழுவினர்.
தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த பிள்ளைகளை பெற்றோர்கள் வெறுப்பதும், அவர்களை வாழ விடாமல் துரத்தும் சமூகத்தை பற்றியதுதான் இப்படம்.
இதன் பின்னணியில் ஒரு உண்மை சம்பவம் மறைந்துள்ளதாம்.
அ ந அய்யும் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் லட்சுமி பிரபா மற்றும் அய்யும் கணபதி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
அரிதாரம் என்ற படத்தை தொடர்ந்து, விஜய் டி.அலெக்சாண்டர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் ராஜு, ஆஷா லதா, விக்கி, மஞ்சு, ஜெயலட்சுமி, கிச்சா, தாமோதரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் ஒளிப்பதிவை வெள்ளா கேசவன் செய்ய, ரெனால்டு ரீகன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், கவிஞர் சொற்கோ, பிஆர்ஓ விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், ஊமை விழிகள் அரவிந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.