நான் தயார்! விஜய் தயாரா? நெப்போலியன் கேள்வி

நான் தயார்! விஜய் தயாரா? நெப்போலியன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2007 ஆம் ஆண்டு போக்கிரி படத்தின் செட்டில் விஜய்யுடன் மிகவும் தனிப்பட்ட முறையில் சண்டையிட்ட பிறகு, இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் கூறினார். நெப்போலியன் விஜய்யின் படங்கள் எதையும் தான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும், இந்த சண்டையை தொடர ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்

விஜய்யுடன் எனக்கு மோதல் ஏற்பட்டு 15 வருடங்கள் ஆகிறது. இத்தனை நாள் இடைவெளிக்குப் பிறகு விஜய் என்னுடன் பேசத் தயாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் பேசத் தயாராக இருக்கிறேன், என்றார் நெப்போலியன்.

I’m ready! Is Vijay ready? Napoleon’s question

நல்ல குணம் கொண்ட தங்கமானவர் விஜய்சேதுபதி… – நடிகர் சந்தீப் கிஷன்

நல்ல குணம் கொண்ட தங்கமானவர் விஜய்சேதுபதி… – நடிகர் சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் & விஜய் சேதுபதி இணைந்துள்ள படம் ‘மைக்கேல்’. பிப்ரவரி 3 தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது…

“இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது.. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம் அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது.

ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. மொழி தாண்டி இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.

இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர், பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

Sundeep Kishan speech at Michael trailer launch

கௌதம் மேனன் படங்களைப் பார்த்து வளர்ந்தேன் – இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி

கௌதம் மேனன் படங்களைப் பார்த்து வளர்ந்தேன் – இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் & விஜய் சேதுபதி இணைந்துள்ள படம் ‘மைக்கேல்’. பிப்ரவரி 3 தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது…

“எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர் தயாரிப்பாளர்கள் தான். அவர்களால் தான் இந்த மைக்கேல் படம் இப்படி உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும், வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும்.

அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார்.

சாம் CS எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர். இந்த படத்தில் ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதியிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார்.

கௌதம் மேனன் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

Director Ranjit Jeyakodi speech at Michael trailer launch

எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு ரொம்ப ஆழமானது… – ரெஜினா கசாண்ட்ரா

எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு ரொம்ப ஆழமானது… – ரெஜினா கசாண்ட்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் & விஜய் சேதுபதி இணைந்துள்ள படம் ‘மைக்கேல்’. பிப்ரவரி 3 தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியதாவது…

“எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன்.

சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். ”

இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..,

” ரஞ்சித், லோகேஷ் போன்ற இயக்குநர்களுடன் பயணிக்கும் போது எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது.

இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன் இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ” என்றார்.

Regina Cassandra speech at Michael trailer launch

சந்தீப் எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரல.. – தயாரிப்பாளர் SR பிரபு

சந்தீப் எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரல.. – தயாரிப்பாளர் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்த படம் ‘மைக்கேல்’ .

ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது…

“சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன்.

தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார்.

அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும். இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ” என்றார்.

Producer SR Prabhu speech at Michael trailer launch

சிங்கிள் கேரக்டர்.. ஒரே ஷாட்.. நோ க்ரீன் மேட்.; புதிய முயற்சியில் ஹன்சிகா

சிங்கிள் கேரக்டர்.. ஒரே ஷாட்.. நோ க்ரீன் மேட்.; புதிய முயற்சியில் ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் பேனரின் கீழ் பொம்மக் சிவா தயாரித்துள்ள இப்படத்தை ராஜு துசா எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து முதல் பிரதி தயாராகிவிட்டது. விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் டிரைலர் வெளியாகவிருக்கிறது.

ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.

இந்த நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

தெலுங்கில் இப்படி ஒரு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் எந்த பச்சை (க்ரீன்) மேட்டையும் பயன்படுத்தாமல் படமாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
படத்தை முடித்து, முதல் பிரதியை படக்குழு பார்த்தபிறகு அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் படம் வந்துள்ளதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிங்கிள் ஷாட்டில்
ஒரே ஒரு கேரக்டரை வைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹன்சிகா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.

முழுப் படமும் ஒரே கேரக்டரில் ஒரே ஷாட்டில் ஓடுவதால், முழுப் படத்தையும் தன் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் பார்வையாளர்களை படத்தோடு ஒன்றவைக்கவேண்டும்.
ஹன்சிகா இந்தபடத்தில் பாத்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் விதமாக படம் உருவாகியிருக்கிறது.

‘ஒன்றல்ல ஐந்தே நிமிடம்’ படம் ஹன்சிகாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.
ரீ-ரிக்கார்டிங்கிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் கதை சொல்லும் போது, ​​அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பு கவனம் செலுத்தி BGM ஐ இசையமைத்திருக்கிறார் சாம்.
படம் முழுக்க தனது இசையால் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சாம்.

படம் ஒரே ஷாட்டில் ஓடுவதால், ஒளிப்பதிவாளர் கிஷோர் பாய்தாபு, புதிய லைட்டிங் நுட்பத்தை இந்தபடத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குனர் ராஜு துசா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தை மிகவும் கச்சிதமாக வடிவமைப்பதில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளனர்.

முதன்முறையாக குறைந்த பட்ச வசனங்களுடன் ஒரே கதாபாத்திரத்தில் ஒரே ஷாட்டில் படம் எடுக்க, தயாரிப்பாளருக்கு தைரியமும் ஆர்வமும் தேவை. ஒரு துணிச்சலான தயாரிப்பாளர் பொம்மக் சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

விரைவில் படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Single Character.. Single Shot.. No Green Mat.; Hansika in a new venture

More Articles
Follows