காதலையும் கம்ப்யூட்டரையும் இணைக்கும் *இதுதான் காதலா*

காதலையும் கம்ப்யூட்டரையும் இணைக்கும் *இதுதான் காதலா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Idhuthan Kaadhala movie connect with Computer and Loveகுறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எஸ்.முருகன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘இதுதான் காதலா’.

‘இதுதான் காதலா’ படத்தை வி.எஸ்.முருகன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா நடிக்கிறார்.

மேலும் படத்தில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.எஸ்.முருகனும் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ‘காதல்’ சுகுமார், ‘கூல்’ சுரேஷ், பாலு ஆனந்த் ‘பயில்வான்’ ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்துக்கு சங்கர் இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் முருகன் கூறுகையில்,‘‘ஒரு விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதை வலியுறுத்தி காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இந்த ‘இதுதான் காதலா’ படத்தை உருவாக்கியுள்ளோம்’’ என்றார் இயக்குனர்.

இந்தப் படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் எம்.எம்.தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ‘ஊமை விழிகள்’இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Idhuthan Kaadhala movie connect with Computer and Love

அமலா மகன் அகில் & பிரியதர்ஷன் மகள் கல்யாணி இணையும் *ஹலோ*

அமலா மகன் அகில் & பிரியதர்ஷன் மகள் கல்யாணி இணையும் *ஹலோ*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala son Akhil and Priyadharsan daughter Kalyani join hands for Hello தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த “ஹலோ“ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது.

தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ரம்யாகிருஷ்ணா பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தை உலக முழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி.

படம் பற்றி நாயகன் அகில்…

நான் குழந்தையாக நடித்த “சுட்டிக் குழந்தை“ படத்தை வெற்றிபெற செய்த தமிழக மக்கள் மீது எப்பொழுதும் எனக்கு மதிப்பு உண்டு.

அதே போல் என் அம்மா தமிழ் படத்தில் அறிமுகமாகி தான் புகழ் அடைந்தார். இந்த ஹலோ படம் நான் கதாநாயகனாக நடித்துள்ள படம்.

இந்த படத்தையும் தமிழ் ரசிகர்கள் பெரும் வெற்றிபெற செய்வார்கள் என்று நம்புகிறேன். என் நன்றியை தமிழ் ரசிகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
ரொமாண்டிக் ஆக்ஷன், திரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் சினிமா இது.

இந்த படத்தின் பிரமாண்டமான சண்டை காட்சிகளுக்காக இங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுடன் தாய்லாந்து ஸ்டன்ட் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றி உள்ளனர்.

படத்தின் ஐந்து பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது.

படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்றார் அகில்.

ஒளிப்பதிவு – P.S.வினோத்
இசை – அனூப் ரூபன்ஸ்
எடிட்டிங் – பிரவீன் புடி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – நாகர்ஜுனா
கதை, திரைக்கதை, இயக்கம் – விக்ரம்.K.குமார்

Amala son Akhil and Priyadharsan daughter Kalyani join hands for Hello

ஜிப்ரானை பாராட்டி விருது வழங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றம்

ஜிப்ரானை பாராட்டி விருது வழங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghibran Conferred With Confluence Excellence Award in Music at British Parliamentநல்ல தரமான மற்றும் நேர்மையான ஒலி மற்றும் இசைக்காக கொண்டாடப்பட்ட ஜிப்ரானை, தற்போது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இசைக்கான ‘கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது’ வழங்கி கவுரவிக்கிறது.

“சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கௌரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே வேளையில், என் மீதும், என் இசையின் மீதும் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஜிப்ரான் சமீப காலங்களில் அடுத்தடுத்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை கொடுத்து பாராட்டுகளை பெற்று வருகிறார். நேர்த்தியான பாடல்களுக்கு மட்டுமல்லாமல், பின்னணி இசைக்கும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

மிகத் தீவிரமான உதாரணமாக அவரது சமீபத்திய வெளியீடான ‘ராட்சசன்’ படத்தை சொல்லலாம். சிறு குழந்தைகள் உள்ளிட்ட பல ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் அவருடைய இசைப் படைப்புகளை மறுபடியும் செய்து பார்க்க முயற்சித்துள்ளனர்.

இது ஜிப்ரானின் தலைசிறந்த இசை, ‘பின்னணி இசை’ அமைப்பில் பலருக்கும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.

விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான், ஹன்சிகாவின் மகா, மாதவன் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் படம், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, இத் வேதாளம் சொல்லும் கதை, ஹவுஸ் ஓனர், ஹோம் மினிஸ்டர், உள்துறை மந்திரி (கன்னடம்-தெலுங்கு இருமொழிகளில்) உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான்.

Ghibran Conferred With Confluence Excellence Award in Music at British Parliament

மாரி2 பட ‘ரௌடி பேபி’ பாடல் ரிலீஸ்; யுவன்-அனிருத் ரசிகர்கள் மோதல்

மாரி2 பட ‘ரௌடி பேபி’ பாடல் ரிலீஸ்; யுவன்-அனிருத் ரசிகர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rowdy baby songதனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகவுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் பாலாஜி மோகனே இயக்கியுள்ளார். ஆனால் முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைக்க, 2ஆம் பாகத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

மாரி படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டு அடித்திருந்தது.

இந்நிலையில் ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ நேற்று வெளியானது.

ஆனால் இந்த பாடல் ‘டானு… டானு’ பாடல் அளவுக்கு இல்லை என அனிருத் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டனர்.

இதற்கு யுவன் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து ‘ரௌடி பேபி’ பாட்டு சூப்பராக இருக்கிறது என பதிலடி கொடுத்தனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உருவானது.

விஸ்வாசம் அப்டேட்ஸ்..: மதுரை ஸ்லாங்கும் அஜித் பாடி லாங்குவேஜும்

விஸ்வாசம் அப்டேட்ஸ்..: மதுரை ஸ்லாங்கும் அஜித் பாடி லாங்குவேஜும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith in viswasamஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற 2019ல் பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் மற்றும் படக் கதை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் தான் கதை நடக்கிறதாம்.

இதில் தூக்கு துரை என்ற கிராமத்து இளைஞனாக அஜித் நடித்துள்ளார். மேலும் முதன் முறையாக மதுரை ஸ்லாங்கும் பேசி அதற்காக தன் பாடி லாங்குவேஜ்ஜையும் மாற்றியிருக்கிறாராம்.

நாம் ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பதை விட விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் ஒன் லைன் கதையாம்.

காலா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இரும்புத்திரை படத்திற்கு வசனம் எழுதிய பாக்யராஜ், சபரி உள்ளிட்டோர் விஸ்வாசம் படத்திற்கு வசனம் எழுதி உள்ளனர்.

அஜித்தின் ஜோடியாக நிரஞ்சனா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.

அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமைய்யா நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கேரக்டரில் விவேக் மற்றும் யோகி பாபுவும் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என கூறப்படுகிறது. படத்தில் 5 பாடல்கள் உள்ளதாம். விவேகா, அருண்பாரதி, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர்.

ரஜினியின் 2.0 படத்திலேயே 3.0 படத்தை காட்டிய ஷங்கர்

ரஜினியின் 2.0 படத்திலேயே 3.0 படத்தை காட்டிய ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவான 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இதில் வசீகரன், சிட்டி ரோபோ, 2.0 ரோபோ உள்ளிட்ட 3 கேரக்டர்களில் ரஜினி நடித்திருந்தார் என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் 4வது ஒரு கேரக்டர் உள்ளது என ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார் ஷங்கர்.

இந்நிலையில் ‘ரோபோ சிட்டி கம்ப்ரெஸ்டு வெர்ஷன் 3.0’ என்ற கேரக்டரும் தற்போது தெரிய வந்துள்ளது.

ரஜினி ஓகே சொன்னால் 3.0 படத்தை இயக்குவேன் என ஷங்கர் சொல்லியிருந்தார்.

தற்போது 3.0 கேரக்டர் இதில் தெரிய வந்துள்ளதால் அதன் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் 3.0 படத்திற்கு ரஜினி ஓகே சொல்வாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

More Articles
Follows