அந்த இரண்டு பெண்களால் நான் ஈர்க்கப்பட்டேன்: ராம் சரண்

அந்த இரண்டு பெண்களால் நான் ஈர்க்கப்பட்டேன்: ராம் சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலியா ராபர்ட்ஸை மிகவும் கவர்ச்சியாகக் கண்ட ஒரு காலமும் இருந்ததாக ராம் சரண் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு முறையும் நான் டிவியில் பார்க்கும் போது, ​​நான் மிகவும் உணர்ச்சி வசபட்டவனாக இருப்பேன் . அதை ஆவேசம் என்று அழைக்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான ஒன்று இருந்தது. நான் அவருடைய பெரிய ரசிகன்.

மிகவும் கவர்ச்சிகரமான மற்றொரு நடிகை கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ். அவர் நடித்த ‘என்ட்ராப்மென்ட்’ (1999) என்ற திரைப்படம் விருப்பமான திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது என்றார் ராம் சரண்.

I was attracted to those two women: Ram Charan

‘லியோ’ படப்பிடிப்பில் “பூமியில் காஷ்மீர் ஒரு சொர்க்கம்” என்று பதிவிட்ட த்ரிஷா…

‘லியோ’ படப்பிடிப்பில் “பூமியில் காஷ்மீர் ஒரு சொர்க்கம்” என்று பதிவிட்ட த்ரிஷா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

‘லியோ’ படப்பிடிப்பில் இருந்து த்ரிஷாவின் சமீபத்திய படத்தை நடிகையே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவர் “பூமியில் காஷ்மீர் ஒரு சொர்க்கம்” என்று தலைப்பிட்டுள்ளார்.

படத்தில், த்ரிஷா மெரூன் டாப் மற்றும் ஸ்கை-ப்ளூ டெனிம் அணிந்து காணப்படுகிறார், மேலும் இது ‘லியோ’ நடிகைக்கு ஸ்டைலான தோற்றமாக இருக்கும் என்று தெரிகிறது. அழகிய நடிகை காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தைப் பகிர்ந்துள்ளார். த்ரிஷாவும் ‘லியோ’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதைக் காணலாம், மேலும் இது அவரது கேரியரில் நடிகைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

Trisha’s latest picture from the shooting of ‘Leo’

‘ரன் பேபி ரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு ‘தண்டட்டி’…

‘ரன் பேபி ரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு ‘தண்டட்டி’…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரன் பேபி ரன்’ தயாரிப்பாளர்கள் அடுத்த படைப்பிற்கு ‘தண்டட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராம் சங்கியா இயக்கத்தில், பசுபதி, விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சிவந்தீஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் ‘தண்டாட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

‘தண்டட்டி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியை தொடங்கவுள்ளது.

மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Thandatti’ movie First look poster released

முதல் படத்திலேயே இசை ‘தடம்’ பதித்து வளரும் இசையமைப்பாளர் அருண் ராஜ்

முதல் படத்திலேயே இசை ‘தடம்’ பதித்து வளரும் இசையமைப்பாளர் அருண் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘தடம்’.

இந்த படம் தமிழ் சினிமாவில் ஓர் ஆழமான தடத்தை பதித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த படத்திற்கு இசையமைத்தவர் அருண் ராஜ். இவரது இசையில் உருவான ‘பைரி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இவர் தற்போது இசையமைத்துள்ள படம் ‘பீட்சா 3’.

அஸ்வின் & பவித்ரா இணைந்து நடித்துள்ளனர். மோகன் கோவிந்த் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை சி.வி. குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற “மின்னல் கண்ணிலே…” என்று தொடங்கும் பாடல் ஏழு மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.

“கண்ணிலே.. மின்னல் கண்ணிலே.. என்னை தாக்கியே பெண்ணே என்னை நீ பார்க்கிறாய்..”

உன் மூச்சிலே உன் மூச்சு காற்றிலே என்னை நீ தீண்டும்போது என்னை நீ சாய்க்கிறாய்…”

இந்தப் பாடலை மோகன் ராஜா என்பவர் எழுத பாடி இசையமைத்துள்ளார் அருண் ராஜ்.

மேலும் இதே படத்தில் இடம் பெற்ற அடுத்த பாடலான ‘கண்ணே கண்மணியே..’ கடந்த வாரம் வெளியானது

இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

“கண்ணே கண்மணியே…” என்று தொடங்கும் இந்த பாடல் ஓர் அழகான குடும்ப உறவை சித்தரிக்கும் பாடலாக அமைந்துள்ளது.

“கண்ணே கண்மணியே நீ இருந்தாலே வாழ்க்கை மாறும்…்என் கண் முன்னே நீ சிரிச்சாலே என் சோகம் தீரும்..

உன் கை கோர்த்து நான் போகும் தூரம் எல்லாம் என் சந்தோஷம் நூறாகும் நெஞ்சமெல்லாம்..

என அழகான வரிகளுடன் அனைவருக்கும் புரியும் படியில் ஓர் உணர்வு பாடலாக உருவாகியுள்ளது.

இந்தப் பாடல் வரிகளை மோகன் ராஜா எழுத லலிதா சுதா பாடியுள்ளார்.

சமீப காலமாக பாடல் வரிகளை கவனிக்க விடாமல் இசையே மேலோங்கி நிற்கும். ஆனால் அருண்ராஜ் இசையமைத்த இந்த இரு பாடல்களிலுமே வரிகளுக்கு தனித்துவம் கொடுத்து இதயத்திற்கு இதமான ராகத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதுபோல பல பாடல்களை அமைத்து அருண் ராஜ் இனி ஆனந்த (இசை) ராஜாவாக மாற வாழ்த்துவோம்…

Thadam composer Arun Raj next project details

காதலர் தின அப்டேட் : லெஸ்பியன் படத்தை தயாரிக்கும் நடிகை நீலிமா

காதலர் தின அப்டேட் : லெஸ்பியன் படத்தை தயாரிக்கும் நடிகை நீலிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும்… என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது.

இந்த நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வித்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள்.

இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பது குறித்தும் விவரிப்பது தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.

அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார்.

ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை நீலிமா இசை இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகிகளின் முகங்கள் வண்ணமயமாக இடம்பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

காதலைப் பற்றி காமத்தை கடந்து உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பதால் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

vazhvu thodangumidam neethane first look poster released

ஹாலிவுட் டிவி சீரியல் பாலிவுட்டில்.; இசையமைக்கும் சாம் சி.எஸ்.

ஹாலிவுட் டிவி சீரியல் பாலிவுட்டில்.; இசையமைக்கும் சாம் சி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.

‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’.

6 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது.

இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

சாம் சி. எஸ்

இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது.

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற சாம் சி எஸ், ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் சி. எஸ்

music director sam cs composed to bollywood tv serial

More Articles
Follows