நிறைய அடி வாங்கி இருக்கேன்.; நானே என்னை பாராட்டி கொண்டேன் – ‘டக்கர்’ சித்தார்த்

நிறைய அடி வாங்கி இருக்கேன்.; நானே என்னை பாராட்டி கொண்டேன் – ‘டக்கர்’ சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரித்த திரைப்படம் ‘டக்கர்’.

கார்த்திக் ஜி கிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த், திவ்யா ஷான், யோகி பாபு, அபிமன்யு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மே 30ஆம் தேதி செய்தியாளர்களை படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் சந்தித்தனர்.

டக்கர்

அப்போது நடிகர் சித்தார்த்த பேசும் போது…

“கொரோனா காலகட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

பெரும்பாலும் என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் ஐந்து ஃபைட் இருக்கு என்பார்கள். ஆனால் ஷூட்டிங் செல்ல செல்ல இரண்டு பைட் மூன்று பாடல் மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் கதை சொல்லும் போது ஐந்து ஃபைட் நிச்சயம் இடம்பெறும். இது முழுக்க ஆக்ஷன் திரைப்படம் என்றார்.

ஒரு கோபக்கார இளைஞனின் கதைதான் இந்த படம். ஒரு இளைஞனுக்கு எதற்கு கோபம் வர வேண்டும்? அவன் பணக்காரன் ஆக வேண்டும் என நினைப்பான். ஆனால் ஆக முடியவில்லை. இதனால் அவன் கோபம் அதிகரிக்கிறது.

இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள திவ்யா இந்த படத்திற்கு பிறகு பெரும் பெயரை பெறுவார். அவர் டக்கர் டீசரில் பேசிய வசனம் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டக்கர்

யோகி பாபு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த படத்தில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்படும். தற்போது சினிமாவை தவிர பலவிதமான பொழுதுபோக்குகள் மக்களுக்கு உள்ளன.

அதன் இடையில் இந்த படத்தின் பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது.

திரையரங்குகளில் ஜூன் 9ஆம் தேதி டக்கர் படம் ரிலீஸ் ஆகிறது. டக்கர் என்றால் சூப்பர். டாப் டக்கர் என்றால் ரொம்ப சூப்பர் என்பார்கள். இந்தப் படத்தில் டக்கர் என்பது மோதலை குறிக்கும் சொல்லாகும்.

இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய அடி வாங்கி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னுடைய காட்சிகளை பார்க்கும்போது நானே என்னை பாராட்டி கொண்டேன். எனக்கே வியப்பாக இருந்தது”

இவ்வாறு பேசினார் நடிகர் சித்தார்த்.

டக்கர்

I appreciates myself says Siddharth at Takkar Trailer Launch

இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.; ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டிரைலருக்கு ரஜினி பாராட்டு

இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.; ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டிரைலருக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள “காவி ஆவி நடுவுல தேவி” படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்” என்று பாராட்டு தெரிவித்து வெளியிட்டார்.

ரஜினிகாந்த் அருகில் வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி எடிட்டர் மார்ட்டின் ஆகியோர் உள்ளனர்.

rajinikanth released ‘kaavi aavi naduvula devi’ movie trailer

மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘2018’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘2018’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் “2018”.

இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

“2018” படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

“2018” படம் வெளியாகி 10 நாட்களில் 13 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனையை மலையாள திரை உலகில் நிகழ்த்தியது.

இந்த படமானது 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

‘2018’ படத்தை தற்போது தமிழில் டப் செய்து கடந்த மே 26ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியிட்டனர்.

இந்நிலையில், “2018” படம் வரும் ஜூன் 7ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘2018’ படம் இதுவரை 150 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் மூலம் மலையாள சினிமாவின் முதல் ரூ.150 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை ‘2018’ படத்திற்கு கிடைத்துள்ளது.

Malayalam hit movie 2018 gets OTT release date from june 7

என்னை காதலித்தால் சமாதி ஆகி விடுவீர்கள்… சல்மான்கானின் அதிர்ச்சி பேட்டி

என்னை காதலித்தால் சமாதி ஆகி விடுவீர்கள்… சல்மான்கானின் அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான்.

இவர்க்கு 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் சல்மான்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர், சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஸ்லானி, கத்ரினா கைப், சோமி அலி என்று பல நடிகைகளுடன் அவர் காதலில் இருந்து பிறகு முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IIFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழாவில் சல்மான்கானிடம் ஒரு பெண் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.

நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான், “எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்றார்.

சமீபத்தில் சல்மான்கான் அளித்த பேட்டியொன்றில், “என் முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. தவறு என்னுடையதுதான். என்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம். எனது காதல் கதைகள் என்னோடு சமாதி ஆகி விடும்” என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், நடிகர் சல்மானின் இத்தகைய பேச்சால் ரசிகர்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman professes love for salman khan asks him to marry her

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட புரோமோசனில் கடுப்பாகி வெளியேறிய ஆர்யா

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட புரோமோசனில் கடுப்பாகி வெளியேறிய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

இந்த படத்தில் ஆர்யா மற்றும் சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற ஜூன் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் தமிழகமெங்கும் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள பிரபல மாலில் ரசிகர்களை சந்திக்க சென்றனர் படக்குழுவினர்.

இவர்கள் வருவதை முன்பே அறிந்து கொண்ட ரசிகர்கள் திரளாக அந்த வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

ஆர்யா மற்றும் சித்தியை கண்ட ரசிகர்கள் ஓடோடி வந்து செல்பி எடுக்க முயன்றனர்.

இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரியத் தொடங்கின.

இதனால் கோபமடைந்த ஆர்யா அந்த வளாகத்தை விட்டு வெளியேறினார். இதை அறியாத சில ரசிகர்கள் ஆர்யா வருவார் என காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arya, who was fierce in the promotions of the film ‘Kathar Bhassha endra Muthuramalingam’

பாய் ஃப்ரெண்ட் யார்.? திருமணம் எப்போது? கீர்த்தியும் தந்தை சுரேஷும் ஓபன் டாக்

பாய் ஃப்ரெண்ட் யார்.? திருமணம் எப்போது? கீர்த்தியும் தந்தை சுரேஷும் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

‘மகாநடி’ என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றபோது இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் துபாய் தொழிலதிபர் பர்ஹான் என்பவரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்தன.

மேலும் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கீர்த்தி தன் சமூக வலைத்தளப் பக்கத்தில்.. “இது போன்ற வதந்திகளில் என் அன்பான நண்பரை இழுக்க வேண்டாம்.. நான் திருமணம் செய்யும் நபரை நானே முறைப்படி அறிவிப்பேன்.. இதுவரை யாரையும் தேர்வு செய்யவில்லை” என தெரிவித்துள்ளார் கீர்த்தி

இது குறித்து கீர்த்தியின் தந்தை சுரேஷ் அளித்துள்ள விளக்கத்தில்…

“கீர்த்தியும் ஃபர்ஹானும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.. ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதைப் பார்த்தவர்கள் தவறாக பரப்பி விட்டார்கள். இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.. என் மகள் திருமணம் என்றால் நானே முறைப்படி அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார் கீர்த்தியின் தந்தை சுரேஷ்.

Keerthy and her father Suresh open talk about her marriage

More Articles
Follows