மறு தேர்தல்? வாக்கு எண்ணிக்கை? விஷால் கார்த்தி & எதிரணி செப். 24க்குள் பதிலளிக்க ஐகோர்ட் ஆர்டர்

மறு தேர்தல்? வாக்கு எண்ணிக்கை? விஷால் கார்த்தி & எதிரணி செப். 24க்குள் பதிலளிக்க ஐகோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Karthiதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல் சமயத்தின் போது சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டனர்.

மேலும் தபால் வாக்குகள் அளிக்கப்படாதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தபால் வாக்கு பிரச்சினையால் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சங்க தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதால் மறுதேர்தல் நடத்துவது என்பது சாத்தியம் இல்லை.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பு வாதிட்டது.

ஆனால் தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பினர் வாதத்தை கேட்ட நீதிபதி…

சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா; வாக்கு எண்ணிக்கை நடத்துவதா நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர்தரப்பினர் செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

High courts asks vishal team for sangam election issue

காஞ்சனா 3 ஹீரோயின் ‘ரி’ நடிக்க லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’

காஞ்சனா 3 ஹீரோயின் ‘ரி’ நடிக்க லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ri Djavi AlexandraGK சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

கதாநாயகியாக மெக்சிகோவை சேர்ந்த நடிகை ‘ ரி ‘ என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே காஞ்சனா 3 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர்.

மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் மற்றும் நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆரம்பம், அனேகன் என பிரமாண்ட படங்களில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷிடம் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகவும்,ஆதி நடிக்கும் ‘ பாட்னர் ‘ படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இவர் தற்போது விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களின் எடிட்டராக வலம்வரும் ரூபனின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வுதான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். வரும் அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Kanchana 3 actress is on board for Gate

அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.; அஜித் அறிக்கை..; என்னாச்சு.?

அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.; அஜித் அறிக்கை..; என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithகடந்தாண்டில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அஜித் ரசிகர்கள் பா.ஜ.கவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது.

உடனே தன் வக்கீல் சார்பாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார் அஜீத்.

அரசியல் கட்சிகளிடையே தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தற்போது அஜித் பெயரை முன்னிலைப்படுத்தி ஒரு சிலர் திரைத்துறையில் ஆதாயம் அடைவதாக தகவல்கள் வெளியானது.

அதாவது அஜித் & ஏஜிஎஸ் இடையே திரைப்படம் ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இதனை ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்து செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அஜித்தின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதில்…

‘சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே தனது மேலாளர் எனவும், சினிமா துறை தொடர்பாக எனது நேரடி மேலாளர் வழியாக மட்டுமே தொடர்பு இருக்க வேண்டும் எனவும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் தவிர வேறு யாரிடமாவது வர்த்தக ரீதியாக தொடர்பு கொண்டால் நான் பொறுப்பாக முடியாது என தெரிவித்துள்ளார்.

இதோ அவரின் அறிக்கை…

ajith press statement

IMG-20200917-WA0077

Actor ajiths legal notice about a shocking fraud

தலைவா உன்னை அரியணையில் ஏற்றாமல் போய்விடுவேனோ.?; மரண படுக்கையில் இருந்த ரசிகருக்கு ரஜினி வாய்ஸ் (ஆடியோ)

தலைவா உன்னை அரியணையில் ஏற்றாமல் போய்விடுவேனோ.?; மரண படுக்கையில் இருந்த ரசிகருக்கு ரஜினி வாய்ஸ் (ஆடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான இளைஞர் முரளி தற்போது மும்பையில் வசிக்கிறார்.

இந்த ரசிகர் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொரோனாவில் பெற்றோரை இழந்தவர். தற்போது இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது கிட்னி இரண்டும் செயலிழந்த நிலையில் ட்வீட்டர் தளத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டிருந்தார்.

அவரின் மகன் தர்சனின் ட்விட்டர் பக்கத்தில்…

தலைவா ரஜினிகாந்த்.. என் இறுதி ஆசை… 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் ரூ. 25000 என்ற நிலையை உருவாக்கி கொடு.

உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரு வருத்தம் என உருக்கமாக பதிவிட்டுள்ள்ர்.

இதனையறிந்த ரஜினிகாந்த் தன் ஆடியோவில்..

முரளி கண்ணா.. நீ நிச்சயம் குணமடைந்து வருவாய்… என் வீட்டிற்கு உன் குடும்பத்துடன் வா. நாம் சந்திப்போம்.

நம்பிக்கையுடன் இரு. நான் இறைவனிடம் உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் ஆடியோவை கேட்ட அந்த ரசிகர் உற்சாகமாகி குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாம்.

Rajinikanth wished his fan for speedy recovery

தீபாவளிக்கு ‘சக்ரா’ விரு(ந்)து…; ஆன்லைன் ரிலீசுக்கு தாவிய விஷால்

தீபாவளிக்கு ‘சக்ரா’ விரு(ந்)து…; ஆன்லைன் ரிலீசுக்கு தாவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra vishalவிஷால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா உள்ளிட்டோர் இணைந்துள்ள படம் ‘சக்ரா’.

எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தனது தந்தைக்கு இந்திய அரசு வழங்கிய அசோக சக்ரா விருது பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பே படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்த இந்த சக்ரா படக்குழு தற்போது இறுதிக்கட்ட சூட்டிங்கை முடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தாண்டு 2020 தீபாவளிக்கு ‘சக்ரா’ கண்டிப்பாக வெளியாகும் எனவும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Actor Vishal’s Chakra Releasing On OTT This Diwali

கமலின் சூப்பர் ஹிட் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்வுக்கு கொரோனா

கமலின் சூப்பர் ஹிட் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்வுக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan singeetam srinivasa raoஉலகநாயகனின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

தெலுங்கில் பல படங்களை இயக்கியுள்ள இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

மூத்த கலைஞரான இவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கீதம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில்….

“வருகிற 21-ம் தேதி எனது பிறந்தநாள். அது தொடர்பாக பேசுவதற்காக பலர் என்னை அழைக்கின்றனர். அவர்கள் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் நன்றி.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். 22-ம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் வாசிக்கிறேன். திரைக்கதை எழுதி வருகிறேன்.

முகக்கவசம், சமூக விலகலை ஆகியவற்றை பின்பற்றியும் எனக்கு கொரோனா தொற்று வந்துள்ளது.

கொரோனா தீவிரமான தொற்று. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

Director Singeetham Srinivasa Rao tests positive for Covid-19

More Articles
Follows