கமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ்

Hero Jithan Ramesh turns as Villain in untitled movieஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ்.

நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார்.

இவர் வில்லனாக நடிக்கவுள்ள படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

கதாநாயகனாக சாய் நடிக்க கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

கதாநாயகன் நடித்து இன்று ஏன் வில்லன்? என ஜித்தன் ரமேஷிடம் கேட்டோம்…

படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா ?

அது மாதிரி தான் என் காரக்டரை சொல்லனும்னா “ஹை வோல்டேஜ் வில்லன்” என்று சொல்லலாம் என்றார் ஜித்தன் ரமேஷ்.

ஒளிப்பதிவு – ரவி
இசை – ஆனந்த்
எடிட்டிங் – ஹரி
நடனம் – பிரேம் ரக்‌ஷித்
சண்டை பயிற்சி – டிராகன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – R.ரமேஷ்,ராம்பிரபு
எழுதி இயக்குபவர் – வம்சி கிருஷ்ணா மல்லா.
தயாரிப்பு – ரவி செளத்ரி, நாகார்ஜுனா

Hero Jithan Ramesh turns as Villain in untitled movie

Overall Rating : Not available

Related News

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவர்கள்…
...Read More

Latest Post