கண்ணன் – தனஞ்செயன் வெற்றி கூட்டணியில் ஹன்சிகா – சிரிஷ் இணைந்தனர்

கண்ணன் – தனஞ்செயன் வெற்றி கூட்டணியில் ஹன்சிகா – சிரிஷ் இணைந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் ஆகியோர் இணைந்த ‘இவன் தந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் இப்படத்திற்காக கைகோர்கின்றனர்.

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார்.

பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:

இயக்குனர் : ஆர்.கண்ணன்
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா
மக்கள் தொடர்பு : ஜான்சன்

தலைவர் ரஜினி.. விஜய் கவனிப்பு.. அனிருத் பார்ட்டி.. நயனுடன் சினிமா.; ஷாரூக்கின் ஷாக்கான சென்னை ஃபீல்

தலைவர் ரஜினி.. விஜய் கவனிப்பு.. அனிருத் பார்ட்டி.. நயனுடன் சினிமா.; ஷாரூக்கின் ஷாக்கான சென்னை ஃபீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் உருவாகும் இந்த படம் பல்வேறு இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ஷாரூக் ஜோடியாக நயன்தாரா நடிக்க வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது.

தற்போது சென்னை ஷூட்டிங் முடித்துக் கொண்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் சென்னை அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார் நடிகர் ஷாரூக்கான்.

அவரின் பதிவில்….

” சென்னையில் 1 மாதம் ஒரு சிறப்பான அனுபவம். தலைவர் ரஜினிகாந்த் எங்கள் சூட்டிங் தளத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்தார். அனிருத்துடன் பார்ட்டி. விஜய் சேதுபதியுடன் உரையாடினேன்.

நயன்தாராவுடன் படம் பார்த்தேன். நடிகர் விஜய் சிறப்பான உணவு விருந்தளித்தார்.

இயக்குனர் அட்லி பிரியா ஜோடியின் விருந்தோம்பலுக்கு ரொம்ப நன்றி.

விரைவில் சிக்கன் 65 சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார் ஷாரூக்கான்.

பழுவேட்டரையரை பாராட்டிய ரஜினி.; நன்றி தெரிவிக்க சரத்குமார் என்ன செய்தார்.?

பழுவேட்டரையரை பாராட்டிய ரஜினி.; நன்றி தெரிவிக்க சரத்குமார் என்ன செய்தார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார்.

(இந்த கேரக்டரில் நடிக்க தான் மணிரத்னத்திடம் கேட்டு இருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இது போன்ற சின்ன கேரக்டரில் உங்களை நடிக்க வைத்தால் உங்கள் ரசிகர்கள் திட்டுவார்கள் என மணிரத்னம் மறுத்து விட்டதாக தெரிவித்து இருந்தார் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது)

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்து ஒவ்வொருவரையும் பாராட்டி வருகிறார் ரஜினி.

நடிகர்கள் கார்த்தி ஜெயம் ரவி ஆகியோர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர்.

அதுபோல சரத்குமாரையும் பாராட்டி இருக்கிறார் ரஜினி.

இதனையடுத்து அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்….

“அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பெரிய பழுவேட்டரையர்” கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி் தெரிவிக்கும் விதமாக இன்றைய (அக்டோபர் 9) தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது.

எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார் சரத்குமார்.

Rajiniaknth Sarath Kumar

PS1 ரூ 350 கோடி வசூல்: அந்தந்த கேரக்டர்களாகவே மாறி படம் பார்த்த ரசிகர்கள்

PS1 ரூ 350 கோடி வசூல்: அந்தந்த கேரக்டர்களாகவே மாறி படம் பார்த்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்கி தயாரித்து இருந்தார் மணிரத்னம்.

இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, காளிதாஸ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

கடந்த மாதம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் முதல் பாகம் வெளியானது.

இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் பலத்த எதிர்பார்ப்பும் இருந்ததால் முதல் நாளிலேயே ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

இரண்டு நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது இந்த படம்

முதல் வார முடிவில் ரூ.309 கோடியை வசூலித்தது.

மேலும் தற்போது 10 நாட்களை நெருங்கிய நிலையில் உலகம் முழுக்க ரூ.350.80 கோடியை PS1 வசூலித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கும்பகோணத்தில், ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களின் வேடமணிந்த ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்த்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ponniyin selvan

ponniyin selvan

JUST IN இசைக்கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் காலமானார்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

JUST IN இசைக்கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் காலமானார்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசைக்கலைஞர் (வில்லிசை கலைஞர்) 94 வயதான சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் காலமானார்.

அவரின் வாழ்க்கை பதிவு…

இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி சத்திர புதுக்குளத்தில் பிறந்தார்.

இவர் சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்தவர்.

மேலும் 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார்.

இவர் வில்லுப்பாட்டினை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணனிடம் கற்றார்.

இவர் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் எளிய வகையில் வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்.

மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை கவர்ந்தவர்.

1975ம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்.

2021ல் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது.

நடிகர் நாகேஷின் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார்.

திரைத்துறையை விட பெரியளவில் இசை துறை வளர வேண்டும் – கமல்ஹாசன்

திரைத்துறையை விட பெரியளவில் இசை துறை வளர வேண்டும் – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார்.

இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார்.

இந்த பாடலின் தெலுங்கு பதிப்பு நாகார்ஜூனாவால் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

கமல்ஹாசன்

வெளியீட்டு விழாவினில்…

*இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் கூறியதாவது…*

“கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்க கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடல் உடைய ஐடியாவை முதன் முதலில் அவரிடம் தான் கூறினேன். அவருடைய உத்வேகம் தான் நான் இந்த பாடலை முடிக்க காரணமாக இருந்தது. அவருக்கு இசையின் மேல் இருக்கும் பிரியம் தான், என்னையும் அவரையும் ஒன்றிணைத்தது.

அதனால் தான் அவர் இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். சுயாதீன கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காக தான் கொரோனா காலத்தில் ராக்ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன். இந்த பாடலின் நோக்கமே சுயாதீன கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பது தான். இனிமேல் வரும் சுயாதீனகலைஞர்களும் பல மொழிகளில் தங்கள் பாடல்களை உருவாக்க வேண்டும். பல மொழிகளை கற்று கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும்.

இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. சமீபத்தில் ஹிந்தியில் இந்த பாடல் வெளியானது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. T Series-க்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். பூஷன் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி.

*நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது…*

“தேவிஶ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார். அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம்.

இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதாகிறது எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை. திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள்.

திரைப்படங்களை விட மிகப்பெரிய துறையாக இசை துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. அதனால் அதற்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை. பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் மீண்டும் அது வர வேண்டும்.

தேவிஶ்ரீபிரசாத் உடைய இந்த பாடல் பெரும் வெற்றி பெற வேண்டும், தமிழ் சினிமாவிலும் இவர் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இந்த பாடலுக்கு உறுதுணையாக இருந்த பூஷன் குமாருக்கு நன்றி. இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”

கமல்ஹாசன்

Kamal Haasan launches DSPs O Penne Independent Album Song

The party begins with Rockstar DSP’s #OPenne
Song streaming now,

▶️ https://bit.ly/OPenne-Tamil

@TSeries #BhushanKumar @ThisIsDSP @raqueebalam @SijuThuravoor @Aazad_Varadaraj @manojhemchandar #RockStarDSP #dspOpenneTamil #DspPop #PanIndianPop #PanIndianRockstar

More Articles
Follows