யூடியுப் சேனல் தொடங்கிய ஹன்சிகா & ரகுல் பிரித்தி சிங்

யூடியுப் சேனல் தொடங்கிய ஹன்சிகா & ரகுல் பிரித்தி சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hansika and Rakul Preet Singh launches their own YouTube channelதிரை நட்சத்திரங்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அக்கௌண்ட் வைத்துள்ளனர்.

இதில் தினமும் தங்கள் பட தகவல் மற்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று யுடிப் சேனலை துவங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனக்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று, என் உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என தன் யூடிப் சேனல் பற்றி கூறியுள்ளார் ஹன்சிகா.

இவரைத் தொடர்ந்து நடிகை ரகுல் பிரித்தி சிங்கும் யூடிப் சேனலை தொடங்கியுள்ளார். இதன் மூலம் வரும் வருவாயை கொரோனா தடுப்பு பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கவிருக்கிறாராம்.

Hansika and Rakul Preet Singh launches their own YouTube channel

https://www.instagram.com/p/B-rsj-5huVD/?utm_source=ig_embed

மீண்டும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்த பெஃப்சி ஆர்கே. செல்வமணி

மீண்டும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்த பெஃப்சி ஆர்கே. செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk selvamaniஇன்று மார்ச் 8 செய்தியாளர்களை சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்கே. செல்வமணி.

அப்போது அவர் பேசியதாவது… “கொரோனா கொடுமையான நோய். தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே இதனை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய் விடும்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெஃப்சி சார்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதியுதவி கேட்டிருந்தோம்.

தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி பெப்சிக்கு கிடைத்துள்ளது.

இவையில்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.

திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .

திரைப்பட கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

பெஃப்சி சார்பாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

தல தளபதி பற்றி சைக்கோ நடிகை அதிதி ராவ் பேச்சு

தல தளபதி பற்றி சைக்கோ நடிகை அதிதி ராவ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aditi rao hydariமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

சமீபத்தில் வெளியான மிஷ்கினின் ‘சைக்கோ’ படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது நெட்டிசன் தளபதி விஜய்யுடன் எப்பொழுது நடிக்கப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் ‘தளபதி விஜய்யிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

பின்னர் தல அஜித் குறித்து சொல்லுங்கள் என்று மற்றொரு ரசிகர் கேட்க, நிரந்தரமான கிளாஸ் ஆனவர் அஜித் என பதிலளித்தார்.

கொரோனாவிடம் தப்பித்தது எப்படி..? ஹாரிபாட்டர் கதாசிரியர் விளக்கம்

கொரோனாவிடம் தப்பித்தது எப்படி..? ஹாரிபாட்டர் கதாசிரியர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JK Rowlingஉலகில் பல புத்தகங்கள் இருந்தாலும் நிறைய பேரால் வாசிக்கப்பட்ட கவரப்பட்ட புத்தகம் என்ற பெருமை ‘ஹாரிபாட்டர்’ புத்தகத்திற்கு உண்டு.

இப்புத்தகம் விற்பனை பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்த புத்தகத்தை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதன்பின்னர் அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜேகே ரவ்லிங் கூறும்போது, “எனக்கும் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் தென்பட்டன.

அப்போது குயீன்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர் அதிலிருந்து எப்படி மீளலாம் என சில டிப்ஸ்களை கொடுத்திருந்தார்..

என் கணவரின் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தபடியே அவற்றை மேற்கொண்டேன். இப்போது நான் பூரண குணமாகிவிட்டேன்.

அந்த டிப்ஸை உங்களுக்கும் தருகிறேன்.. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்” என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டாக்டர் குறித்த வீடியோவையும் இணைத்துள்ளார் ஜே.கே.ரவ்லிங்.

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaநெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா.

இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.

‘விழுத்திரு
தனித்திரு
வரும் நலனுக்காக
நீ தனித்திரு’
என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார்.

பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்.

பாடல் உருவாக்கம் பற்றி சி.சத்யா கூறியதாவது…
“முன்பு அறிவியல் வளர்ச்சி குறைவு.
அதனால் இசைக் கலைனஞர்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது.

தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில்
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்க முடிவு செய்தேன்.

இதில் பாடியவர்கள், பாடல் எழுதியவர் அனைவரும் ஆன்-லைன் மூலம் பாடியும், எழுதியும் கொடுத்தார்கள்.

தொடர்ந்து சில ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்” என்றார்.

இவர் தற்போது எழில் இயக்கியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’, சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை -3’, ‘ராங்கி’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Hope all safe .
This song is my small contribution to create an awareness to the people with co-musicians. Here is the link of YouTube channel.

https://www.youtube.com/channel/UCGRAiGR09SGw6ViRVybIlyQ

மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி

மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pushpa film தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று உலகளவில் மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக ரூபாய் 1.25 கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சமும் வழங்கி அனைத்து ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன்.

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்த தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா” . இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ஆர்யா மற்றும் ஆர்யா 2 படத்திற்கு இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

போலாந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

உலகளவில் அனைத்து திரைப்பட ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

More Articles
Follows