காதலரை மணக்கிறார் ஹன்சிகா.; ஜெய்ப்பூரில் டிசம்பர் மாதம் திருமணம்.!

காதலரை மணக்கிறார் ஹன்சிகா.; ஜெய்ப்பூரில் டிசம்பர் மாதம் திருமணம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா.

இவர் தமிழில் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான ‘மஹா’ என்ற/படம் இவரது 50வது திரைப்படமாகும்.

பல சமூக சேவைகளை செய்து வருகிறார் ஹன்சிகா. ஆதரவற்ற பல குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘வால்’ படத்தில் நடித்த போது சிம்வுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்தார்.

ஆனால் அந்த காதல் திருமணத்தில் கைகூடவில்லை.

இந்த நிலையில் தனது காதலர் சோஹேல் கதுரியா என்பவரை வரும் 2022 டிசம்பர் மாதத்தில் கரம் பிடிக்கிறார்.

இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வந்துள்ளன.

டைரக்டர் டூ ஹீரோ..; ‘லவ் டுடே’ பிரதீப்புக்கு சிம்பு – ஜெயம் ரவி அட்வைஸ்

டைரக்டர் டூ ஹீரோ..; ‘லவ் டுடே’ பிரதீப்புக்கு சிம்பு – ஜெயம் ரவி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகி பாபு நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன்.

ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகவே பிரதீப்பின் அடுத்த பட ஹீரோ யார்? என கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்தது.

ஆனால் அடுத்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கிறார்.

‘லவ் டுடே’ என்ற பெயரில் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில் இவானா, ரவீனா ரவி மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர்.

இந்த படம் தொடர்பான பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளதாவது….

“நான் ஹீரோவாக நடிப்பதை அறிந்த ஜெயம் ரவி.. “சும்மா ஏனோதானோ என்ற நடிக்காமல் நன்றாக நடிக்க வேண்டும்.

எனக்கு போட்டியாக வரவேண்டும் என அட்வைஸ் செய்தார்.

‘லவ் டுடே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த சிம்பு என்னை அழைத்தார். அதற்கு முன்பு நான் அவரிடம் பேசியதே இல்லை.

என்னுடைய போஸ்டர் ‘வல்லவன்’ படத்தை போன்று இருக்க வேண்டும் என்று நினைத்தே டிசைன் செய்திருந்தேன்.

அதை பார்த்து சிம்பு எனக்கு போன் செய்தார். போஸ்டர் நன்றாக இருக்கிறது. எதிர்ப்பார்ப்பு இருக்கு. இன்றைய காதலை சொல்லீட்டீங்க.. படத்திற்கு வாழ்த்துக்கள்” தெரிவித்தார் சிம்பு.

2வது திருமணம் செய்துக் கொண்ட இயக்குனரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ்

2வது திருமணம் செய்துக் கொண்ட இயக்குனரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் அருண் ராஜா காமராஜ்.

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில் இவர் பாடிய ‘நெருப்புடா….’ பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ மற்றும் உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.

இந்த இரு படங்களும் அருண் ராஜா காமராஜுக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

இவரின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார்.

இந்த நிலையில் இவரது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த திருமணம் ஓரிரு தினங்களுக்கு முன் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றதாம்

விரைவில் தனது 2வது திருமணம் பற்றிய அறிவிப்பை அருண்ராஜா காமராஜ வெளியிடுவார் என கூறப்படுகிறது.

‘தியாகி பாய்ஸ்’ ரெடியா.?; ‘காஃபி வித் காதல்’ குழுவுடன் FDFS பார்க்க ப்ரீ சான்ஸ்

‘தியாகி பாய்ஸ்’ ரெடியா.?; ‘காஃபி வித் காதல்’ குழுவுடன் FDFS பார்க்க ப்ரீ சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பூ தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காஃபி வித் காதல்’.

இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஒரு நடனப் போட்டியை அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘தியாகி பாய்ஸ்…’ என்ற பாடலை ரீல்ஸ் செய்து வருகிற நவம்பர் 3ம் தேதிக்குள் பட குழுவினருக்கு அனுப்பினால் அதற்கு அடுத்த நாள் ‘காஃபி வித் காதல்’ பட குழுவினருடன் காபி அருந்திக் கொண்டே முதல் நாள் முதல் காட்சி பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

‘காஃபி வித் காதல்’ படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, சம்யுக்தா சண்முகம், ரெட்டின் கிங்ஸ்லி என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

‘தியாகி பாய்ஸ்’ பாடலை யுவன் சங்கர் ராஜாவும் ஹிப்ஹாப் ஆதியும் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர். (இதற்கு முன்னதாக இருவரும் அன்பறிவு படத்தில் இடம்பெற்ற ”அரக்கியே” எனும் பாடலை இருவரும் சேர்ந்து பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது).

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

உங்களை தியாகம் செய்ய ரெடியா..?

நயன்தாராவை அடுத்து காஜலுடன் இணைந்த யோகிபாபு.; வைரலாகும் ‘கோஸ்டி’ டீசர்

நயன்தாராவை அடுத்து காஜலுடன் இணைந்த யோகிபாபு.; வைரலாகும் ‘கோஸ்டி’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குலேபகவாலி’, ‘ஜாக்பாட்’ & ‘ஷூ’ ஆகிய காமெடி படங்களை இயக்கியவர் கல்யாண்.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கோஸ்டி. (GHOSTY)

இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

(இதற்கு முன்பு முன்னணி நடிகையான நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.)

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுரேஷ் மேனன், தங்கதுரை, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சத்யன், ஸ்ரீமன், சுப்பு பஞ்சு, மனோபாலா, அஜய் ரத்தினம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மேற்கண்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னணியில் பாராளுமன்ற போஸ்டரும் இடம் பெற்றிருந்தது.

இதனையடுத்து திரையுலகில் பரபரப்பு உண்டானது.

இந்த நிலையில் இன்று இப்பட டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்

 

அஜித்தின் ‘துணிவு’.; அப்டேட் கொடுத்த ஹீரோயின் மஞ்சு வாரியர்

அஜித்தின் ‘துணிவு’.; அப்டேட் கொடுத்த ஹீரோயின் மஞ்சு வாரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

ஜீ ஸ்டூடியோஸ் சார்பாக இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் நாயகியாக மஞ்சு வாரியார் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்தனர்.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தன் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக நாயகி மஞ்சு வாரியார் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows