‘நடிகைகளுக்கு ஒண்ணுன்னா மட்டும் வந்துடுவாங்களே…’ ஜிவி.பிரகாஷ்

‘நடிகைகளுக்கு ஒண்ணுன்னா மட்டும் வந்துடுவாங்களே…’ ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஜல்லிக்கட்டை இந்தாண்டு நடத்திட வேண்டும் என இயக்குனர் கவுதமன் போராட்டம் நடத்தி வருகிறார்.

அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே அவருக்கு ஆதரவாக கமல் மற்றும் ஜிவி. பிரகாஷ் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan ‏@ikamalhaasan
தம்பி கவுதமன் நடத்துவது போராட்டம். புரிந்தும் துணிந்தும் செய்த செயல் சட்டம் ஒழுங்கு குலையாமலது சிறக்கட்டும். மற்றபடி கண்ணியம் காப்பது கடமை

G.V.Prakash Kumar ‏@gvprakash 9m9 minutes ago
இயக்குநர் கவுதமன் மீது தடியடி கண்டிக்கதக்கது.. அவர் மட்டுமல்ல ஜல்லிக்கட்டு ஆதரவாக இருக்கும் எவர் மீது கைவைத்தாலும் கண்டிக்கிறேன்.

G.V.Prakash Kumar ‏@gvprakash 7m7 minutes ago
நடிகைகளுக்கு ஒண்ணுன்னா வருவாங்க.. ஒரு இயக்குனருக்கு வரமாட்டார்களா.. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் என் குரல் உண்டு.

GV Prakash statement about Jallikattu Haters

‘த்ரிஷாவை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்…’ கமல்ஹாசன்

‘த்ரிஷாவை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்…’ கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Trishaஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பில் நடிகை த்ரிஷா இருப்பதால் அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு எதிரான கருத்துக்கள் பற்றி கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

த்ரிஷாவை காயப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது…

Kamal Haasan ‏@ikamalhaasan
Pls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்

Please stop hurting Trisha says Kamalhassan

நீங்கள் தமிழன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்..’ – த்ரிஷா

நீங்கள் தமிழன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்..’ – த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trishaஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறிய பீட்டா அமைப்பு அதை தடை செய்ய வலியுறுத்தியது.

இதனால் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் PETA அமைப்பின் விளம்பர தூதராக இருக்கும் நடிகை த்ரிஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

மேலும் சிவகங்கையில் கர்ஜனை சூட்டிங்கில் கலந்துக் க்கொண்ட த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்தினர்.

இதனால் பொறுமை இழந்த த்ரிஷா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது… ‘பெண்களை மதிக்காமல் அவர்களையும் குடும்பங்களையும் திட்டு வருகிறீர்கள்.

நீங்கள் தமிழன் என்று சொல்வதால் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.

Disrespecting a woman and her family is tamil culture?You should be ashamed to call urself a Tamilian or even speak about Tamil culture.
— Trisha Krishnan (@trishtrashers) January 14, 2017

Actress Trisha statement about her haters

ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini jallikattuதமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் அதை விட்டுக்கொடுக்கவே கூடாது.

விதிமுறைகளை வகுக்கலாம். ஆனால், விளையாட்டை தடை செய்யக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

Superstar Rajini support Jallikattu

தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya as Bodhidharmarஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 7ஆம் அறிவு.

இதில் உண்மைத் தமிழரான போதி தர்மன் கேரக்டர் இடம் பெற்றது.

இவர் சீனா நாட்டில் தமிழரின் கலை, பெருமைகளை எடுத்துரைத்தவர் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ராம் மாத்வானி இயக்கத்தில் இந்த கேரக்டர் தற்போது ஒரு நீண்ட படமாக உருவாகவுள்ளதாம்.

இயக்குனர் ராம் மத்வானி மற்றும் இந்தி பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இதில் போதி தர்மரின் முழு வாழ்க்கையும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

இது போதி தர்மராக நடித்த சூர்யாவுக்கு பெருமை என்றே கூறலாம்.

போதி தர்மர் பற்றிய ஒரு சிறு குறிப்பு…

  • போதி தர்மர் கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.
  • பல்லவ மன்னன் நாகேந்திர பல்லவனின் 3வது மகன். முதல் மகன் மன்னனாவும், இரண்டாவது மகன் தளபதியாகவும் ஆன பிறகு போதி தர்மனை அமைச்சராக பதவியேற்க சொன்னார்கள்.
  • ஆனால் புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதி தர்மன் அரச வாழ்க்கை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் நடை பயணமாகவே சீனாவுக்கு சென்ற போதி தர்மன் தமிழ்நாட்டின் தற்காப்பு கலையை மாற்றம் செய்து ஷாலின் குங்பூவாக அங்கு கற்றுக் கொடுத்தார்.
  • சீனாவில் தீராத நோயாக இருந்த அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார்.
  • போதி தர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது.
  • அவரை போதி தர்மர் என்றும் சீன மக்களை காப்பாற்றிய வீரத் துறவி என்றும் அவர் திராவிட நாட்டை சேர்ந்தவர் என்றும் சீன வரலாறு குறிப்பிடுகிறது.

Bodhidharmar Biopic will be produced by Bollywood director Ram

வேதாளத்தை வென்று கபாலியிடம் தோற்ற பைரவா

வேதாளத்தை வென்று கபாலியிடம் தோற்ற பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Vedhalam Bairavaaநேற்று விஜய் நடித்த, பைரவா படம் வெளியானது.

இப்படம் கோவை மாவட்டத்தில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதன் முதல்நாள் வசூல் மட்டும் அங்கு ரூ. 3.90 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குமுன் கோவையில் வெளியான படங்களில் வேதாளம் ரூ. 2.85 கோடியையும், தெறி படம் ரூ. 3.68 கோடியையும் வசூலித்துள்ளது.

இவை அனைத்தையும் முறியடித்து கபாலி படம் ரூ. 4.20 கோடியை கடந்து, முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bairavaa beats Vedalam but failed to beat Kabali

More Articles
Follows