கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் குப்பத்து ராஜா

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் குப்பத்து ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash in Kuppathu Rajaசூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குப்பத்து ராஜா படத்தலைப்பில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

இதில் ஜிவி. பிரகாஷ் உடன் பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘S Focuss’ சார்பாக சரவணன், சிராஜ் மற்றும் டி. சரவணன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை இந்தாண்டு 2017 கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்

காரைக்காலில் விவேகம் படம் பார்த்த ரசிகர் மரணம்

காரைக்காலில் விவேகம் படம் பார்த்த ரசிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamநேற்று முன்தினம் அஜித் நடித்த விவேகம் படம் உலகமெங்கும் வெளியானது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் பகுதியில் உள்ள இரண்டு தியேட்டர்களான பிஎஸ்ஆர் மற்றும் முருகராம் தியேட்டர்களிலும் இப்படம் வெளியானது.

அப்போது சர்புதீன் என்ற இளைஞர் காரைக்காலில் உள்ள முருகராம் தியேட்டரில் விவேகம் படத்தை தன் நண்பர்களுடன் பார்த்துள்ளார்.

இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இவரது நண்பர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லவே, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட நண்பர்கள் கதறி அழுதுள்ளனர்.

சபுருதீனின் மனைவி இந்த திடீர் மரணம் குறித்து புகார் அளிக்கவே, தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ajith fan died while watching vivegam movie in Karaikal Theatre

விவேகத்தை கிழித்த நீலசட்டை விமர்சகர்; விளாசிய விஜய்மில்டன்

விவேகத்தை கிழித்த நீலசட்டை விமர்சகர்; விளாசிய விஜய்மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay miltonநேற்று முன்தினம் அஜித் நடித்த விவேகம் படம் வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை தனது யூடியுப் பக்கத்தில் கடுமையாக கலாய்த்து விமர்ச்சித்திருந்தார் புளூசட்டை புகழ் தமிழ் டாக்கீஸ் மாறன்.

எனவே அவருக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக இயக்குனர் ஒளிப்பதிவாளருமான விஜய்மில்டன் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஒரு படம் ரிலீஸ் என்பது ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் வலியை போன்றது.

குழந்தை பிறக்கும் முன்பு நல்ல ஆரோக்கியமான உணவுகளையே தாய் சாப்பிடுகிறாள்.

ஒருவேளை குழந்தை ஊனமாக பிறந்தால் யாரும் குழந்தையை உதாசீனப்படுத்துவதில்லை.

அது அவரவர் மனநிலையை பொறுத்தது என கடுமையாக சாடியுள்ளார்.

Director Vijay Milton reaction to negative review for Vivegam

இதோ அந்த வீடியோ பதிவு இங்கே…

விஜயகாந்த் மகனின் மதுரவீரன் ட்ரைலரை பார்த்ததும் வாங்கிய விநியோகஸ்தர்

விஜயகாந்த் மகனின் மதுரவீரன் ட்ரைலரை பார்த்ததும் வாங்கிய விநியோகஸ்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhura veeranபிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் “மதுரவீரன்” .

வி -ஸ்டுடியோஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் தான் விஜயகாந்த் வெளியிட்டார்,

இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வியந்து போய் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார்.

இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.

படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகியுள்ளது படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் புதிய படம் தான் இந்த,’மதுரவீரன்’.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப் பட்டுள்ளது.

இப் படத்தில்,சண்முக பாண்டியனின் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி மற்றும் ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார், P.G.முத்தையா.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார், பாடல்கள் யுகபாரதி, எடிட்டிங் கே.எல்.பிரவீன், கலை விதேஷ், சண்டைப் பயிற்சி ‘ஸ்டன்னர்’ சாம்.

நடனம் சுரேஷ். நிர்வாக தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி. விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.

Srinivasa Guru bagged the theatrical rights of Shanmuga Pandiyans MadhuraVeeran

7ஸ்டார்-இது புன்னை நகர் அணி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர்கள்

7ஸ்டார்-இது புன்னை நகர் அணி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

idhu punnai nagar ani movie poster‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, “7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் மூலம் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார்.

இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார்.

ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

“7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘புரட்சி இயக்குநர்’ எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ‘ஜனரஞ்சக இயக்குநர்’ எஸ்.ஆர்.பிரபாகரன் வெளியிட்டனர்.

Directors SAC and Prabhakaran released first look poster of 7 Star Idhu Punnai Nagar Ani movie

idhu punnai nagar ani movie 1st look poster

நாய்கள் குரைக்கும்; கமலுடன் மீண்டும் வாழ்வது பற்றி கவுதமி விளக்கம்

நாய்கள் குரைக்கும்; கமலுடன் மீண்டும் வாழ்வது பற்றி கவுதமி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan gautamiதிருமணம் செய்த கௌதமி தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இவருடன் இவரது மகள் சுபலட்சுமி வாழ்ந்து வருகிறார்.

அதன்பின்னர் திருமணம் செய்யாமலே நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து 13 ஆண்டுகள் வாழ்ந்தார் கவுதமி.

பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு தன் மகளின் வாழ்க்கை நலனுக்காக கமலை பிரிகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் கமலோடு இணைந்து வாழ கௌதமி முடிவெடுத்திருப்பதாக ஒரு இணையத்தளத்தில் தகவல் பரவியது.

இதுகுறித்து கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்…

‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும்.

நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

Gautami refuses and clarifies her decision of Live together again with Kamal

Gautami‏Verified account @gautamitads
Fools chatter & dogs bark. I’ve moved on & every1 else shld get on wit their lives & do something dat really matters

More Articles
Follows