கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

gv prakashநாகை, வேதாரண்யம் மற்றும் டெல்டா பகுதி மக்களுக்காக கஜா புயல் நிவாரண உதவிகளை 2-லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில்படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ஜி.வி.பிரகாஷ் டப்பிங்கை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இப்படி ஒரு அதிரடி பணியில் ஈடுபட்டதை சோசியல் மீடியாக்களும், பொது மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இது பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசும் போது……

கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்க்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன்.

அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம்.

பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

ஒக்கி புயலின் போதும் ஜி.வி.பிரகாஷ் களத்தில் இறங்கி சேவை செய்ததை குமரிமக்கள் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post