தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்.
அதன் பின் அழகு ராஜா, VSOP, மிஸ்டர். லோக்கல் என படு தோல்விப் படங்களை கொடுத்தார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ்.
சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இதில் நடிகை அம்ரிதா ஐயர், ரேஷ்மா, யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.
அதாவது ஜிவி இசையில் ஒரு பாடலை அவர் பாடவிருக்கிறாராம்.
‘டாட்டா பை பை’ என்ற முதல் பாடலை கானா வினோத் எழுதுகிறாராம்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ என்று பெயரிட்டு இப்பட ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர்.
பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
#VanakkamDaMappilei First Look
Direction – Rajesh
Cast – GV Prakash, Amritha, Yogi Babu, Anand Raj, Daniel, Reshma
Music : GV Prakash
Production Company : Sun Entertainment
GV Prakash and Amritha joins for VanakkamDa Mappilei