வசந்தபாலன்-ஜிவி. பிரகாஷ் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் தகவல்

GV Prakash 17th movie first look will be released 3rd August 2018ஏற்கெனவே 8 படங்களை கையில் வைத்திருக்கும் ஜிவி. பிரகாஷ் தற்போது வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முக்கிய கேரக்டரில் ராதிகா நடிக்க, கணேஷ் சந்திரா என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ரெட்டைக்கொம்பு’, ‘கறுப்பர் நகரம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் ஆகியவையும் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

GV Prakash 17th movie first look will be released 3rd August 2018

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

Latest Post