ஆபாசத்துடன் பிராமணர்களை இழிவு படுத்தும் ’காட்மேன்’ டீசர் யூட்யூப்பில் நீக்கம்

godman web seriesபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது.

ஜீ5 நிறுவனம் தயாரித்த இந்த வெப் தொடர் இந்த டீசர் வெளியான பின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் ஆபாச காட்சிகள் இருந்ததாகவும், ஒரு பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

பல்வேறு காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக இந்துமத அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்த எதிர்ப்பை தொடர்ந்து யூட்யூப்பில் இருந்து ’காட்மேன்’ டீசரை ஜீ5 நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இருந்த போதிலும் இந்த வெப்தொடர் திட்டமிட்டபடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் நியூ டீசர் வெளியாகவுள்ளது.

Overall Rating : Not available

Related News

Latest Post