இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் ‘ஹர்காரா’

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் ‘ஹர்காரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ‘ஹர்காரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது ஃபர்ஸ்ட்லுக்.

வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஹர்காரா

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.

படத்தினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி வெளியிட்டார்.

மேலும் படம் குறித்து அவர் கூறுகையில்…

“பல நூற்றாண்டுகளாக தகவல் தொடர்புக்கான ஒரு ஊடகமாக சேவை செய்யும் அஞ்சல் துறை, நமது குடிமக்களின் இதயங்களில் எப்போதும் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தபால்காரர்களின் சிறப்பான பங்களிப்பை கவுரவிப்பதற்கும், அவர்களின் பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இந்த திரைப்படம் ஒரு வாய்ப்பாகும்.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சினிமா முயற்சியானது, நமது அஞ்சல் துறையின் முக்கியத்துவம் மற்றும் தபால்காரர்களால் ஆற்றப்படும் தன்னலமற்ற சேவையைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் என்றார்.

ஹர்காரா

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார்.

பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்குநர்: ராம் அருண் காஸ்ட்ரோ
ஒளிப்பதிவு: பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: VRK ரமேஷ்

ஹர்காரா

First Look of Harkara revealed by Chief Postmaster General Tamilnadu

கலைஞர் முத்தம் கொடுப்பார்.; சினிமா ஹீரோயின்களின் பைத்தியக்காரத்தனம் – கனிமொழி

கலைஞர் முத்தம் கொடுப்பார்.; சினிமா ஹீரோயின்களின் பைத்தியக்காரத்தனம் – கனிமொழி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா பெருமைப்படும் வகையில் தன் நடிப்பாற்றாலை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.

இவர் அறிமுகமான முதல் படமான ‘பராசக்தி’ படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க திரைக்கதை வசனம் எழுதியிருந்தார் கலைஞர் கருணாநிதி.

தற்போது கருணாநிதி நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் நேற்று ஜூன் 4ம் தேதி சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பராசக்தி திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இதற்கான நிகழ்வில் திரை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

கனிமொழி

இந்த நிலையில் கனிமொழி எம்பி பராசக்தி குறித்தும் தன் தந்தையின் வசனம் குறித்து பேசினார். அவர் பேசுகையில்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி என்று சொல்லலாம்.

எப்படி நடிக்கிறான் பாரு எனப் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது எழுந்து சென்று தொலைக்காட்சியில் முத்தம் கொடுப்பார் கலைஞர். அம்மா கூட கிண்டலடிப்பார்கள்.

ஆனாலும், அவரால் கட்டுப்படுத்த முடியாது. நாயகனுக்குப் பகுத்தறிவு சொல்லிக் கொடுத்து, நாயகனுக்கு வழிகாட்டிய படமாகப் பராசக்தி திரைப்படம் அமைந்தது.

இப்போது வரை தமிழ் சினிமா ஹீரோயின்கள் பைத்தியக்காரத்தனமாக கேள்விகள் கேட்பது போல தான் கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால், அன்றே கதாநாயகியைச் சிந்திக்கத் தெரிந்த, சமூகக் கருத்துகள் பேசும் கதாநாயகியாக உருவாக்கியிருந்தார் கலைஞர்.” என்று பேசினார் கனிமொழி கருணாநிதி.

கனிமொழி

Kanimozhi MP speech about Parasakthi movie

நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதி; அதிர்ச்சியில் ரசிகர்கள்..

நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதி; அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி.

கடந்த ஜனவரி மாதத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ மக்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது.

நடிகர் சிரஞ்சீவி இந்தப் படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், சிரஞ்சீவிக்கு கேன்சர் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று தற்போது குணமாகியுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து சிரஞ்சீவியை நலம் விசாரித்து வருகிறார்களாம்.

இதனால் தற்போது இந்த விஷயத்தில் விளக்கம் அளித்துள்ளார் சிரஞ்சீவி.

தனக்கு கேன்சர் இல்லை என்றும் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு இந்த செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் ஒரு கேன்சர் சென்டர் திறப்பு விழாவில் பங்கேற்று, நிகழ்ச்சியில் பேசியபோது, ரெகுலராக கேன்சருக்கான டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், கேன்சரை தவிர்க்கலாம் என்றும் பேசியதாகவும்.

அதேபோல தான் கோலன் ஸ்கோப் டெஸ்ட் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ள அவர், அப்போது தனக்கு நான் கேன்சரஸ் பாலிப்ஸ் இருந்தது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

actor chiranjeevi reacts after reports claim he was diagnosed with cancer

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் ‘பார்த்திபேந்திரன் பல்லவன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க, தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

சாகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை விக்ரம் பிரபு போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாயும் ஒளி நீ எனக்கு

vikram prabhu’s Paayum Oli Nee Yenakku release date announcement

பிரபல நடிகர் 39 வயதில் திடீர் மரணம்; பெரும் அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல நடிகர் 39 வயதில் திடீர் மரணம்; பெரும் அதிர்ச்சியில் திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் நிதின் கோபி.

நடிகர் நிதின் கோபி திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன்.

இவர் விஷ்ணுவர்தன் நடித்த ‘ஹலோ டாடி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா என 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நிதின் கோபி வெள்ளித்திரை படங்களில் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார்.

இவர் பெங்களூர், இட்டமடுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் நிதின் கோபி வீட்டில் உள்ளபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, வரும் வழியிலயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

39 வயதான நிதினின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

kannada actor nithin gopi passes away at the age of 39

சீயான் விக்ரம் பாணியில் சிலம்பரசன்.; சிலிர்க்க வைக்கும் போட்டோஸ்

சீயான் விக்ரம் பாணியில் சிலம்பரசன்.; சிலிர்க்க வைக்கும் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் நீண்ட தலை முடி மற்றும் நீண்ட தாடியுடன் காணப்பட்டார். அவரது இந்த ஸ்டைலிஷ் ஆன லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த படத்திற்கு பிறகு விக்ரம் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை விட ‘தங்கலான்’ படத்திற்காக நீண்ட தலை முடி தாடியை வளர்த்து வருகிறார்.

எனவே தான் ‘பொன்னியின் செல்வன் 2’ ப்ரமோசன்களில் அதே ஸ்டைலிஷ் லுக்குடன் வந்து ரசிகர்களையும் தமிழ் திரை பிரபலங்களையும் அதிர வைத்தார்.

சிம்பு

இந்த நிலையில் சீயானை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது மாஸான லுக்கில் வலம் வருகிறார்.

‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிலம்பரசன்.

இந்த நிலையில் தற்போது லண்டனில் இருக்கும் சிம்புவின் சில புகைப்படங்களை இணையத்தில் லீக்காகியுள்ளது.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து சிலிர்த்து வருகின்றனர்.

சிம்பு

simbu new look photos tranding in social media

More Articles
Follows