டிவி-யிலிருந்து அடுத்த ஹீரோயின்..; ஜெய்க்கு ஜோடியாகும் திவ்யா

actor jaiநடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம்.

அதுபோல மேயாத மான் பட நாயகி பிரியா பவானி சங்கரும் டிவியில் இருந்து வந்தவர் தான். இவர் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் டிவி சீரியல்கள் நடித்து வந்தார்.

தற்போது செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி என்பவரும் வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வரவுள்ளார்.

இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் திவ்யா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

மேலும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் திவ்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post