ரஜினிக்கு வெல்கம்; கமலுக்கு குட்பை… விரக்தியில் விசு..?

ரஜினிக்கு வெல்கம்; கமலுக்கு குட்பை… விரக்தியில் விசு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Kamal haasanரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர்.

இதற்கான பணிகளில் இருவரும் தனி தனி பாணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான விசு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கமலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக உள்ளேன், தயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என கூறி கையெடுத்து கும்பிட்டப்படி எழுந்து சென்றுவிட்டார்.

கமல்ஹாசன் குறித்து எதுவும் கேட்காதீர்கள் என விரக்தியோடு விசு கூறியது தமிழ்த்திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் கமல் பாணி வேற; என் பாணி வேற… ரஜினி பேட்டி

அரசியலில் கமல் பாணி வேற; என் பாணி வேற… ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Like Cinema in Politics also we follow separate style says Rajini about Kamalவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பித்து அன்றைய தினமே மதுரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார் கமல்ஹாசன்.

இதனையொட்டி ரஜினியை சந்தித்து அந்த மாநாட்டு அழைப்பு விடுத்தார் கமல்.

இதன்பின்னர் ரஜினி செய்தியாளர்களிடம் பேசியதாவது…

அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

ஆண்டவனின் ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.

சினிமாவில் கமல் பாணி வேறு. என் பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் எங்கள் பாணி வேறாக இருக்கும்.

பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான் முக்கியம்.” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Like Cinema in Politics also we follow separate style says Rajini about Kamal

முதன்முறையாக அப்பா சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

முதன்முறையாக அப்பா சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi teamsup with her dad Sarathkumar for Paamban movieகமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போதுதான் சபாஷ் நாயுடு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவர்களைப் போல் சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் இணைந்து நடிக்கின்றனர்.

வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் பாம்பன் படத்தில்தான் அவர்கள் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இத்தகவலை வரலட்சுமியே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Varalakshmi teamsup with her dad Sarathkumar for Paamban movie

Happy to announce that I will be acting along side my father in directed by super excited to share screen space with u daddy.. all the best to the entire team..!!

ரஜினியை சந்தித்து அரசியல் மாநாட்டுக்கு அழைத்தார் கமல்

ரஜினியை சந்தித்து அரசியல் மாநாட்டுக்கு அழைத்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal invited Rajini for his political party launch eventகடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டிக்கும் இரு ஜாம்பவான்கள் கமல்-ரஜினி.

சினிமாவில் போட்டிகள் இருந்தாலும் இவர்களிடையேனான நட்பு அனைவரும் ஆச்சரியப்படும் ஒன்றுதான்.

தற்போது இருவரும் தனித்தனியாக அரசியல் களம் காணவிருக்கின்றனர்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் கட்சியை ஆரம்பித்து அன்றே மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

எனவே இதனை முன்னிட்டு இன்று சற்றுமுன் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.

இதுகுறித்து கமல் தெரிவித்ததாவது…

விரைவில் அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன்.

மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர் வருவாரா? என்பதை அவர்தான் முடிவு செய்வார்.” என்று கமல் தெரிவித்தார்.

Kamal invited Rajini for his political party launch event

பேட்மிண்டன் லீக்; கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணி லோகோ வெளியீடு

பேட்மிண்டன் லீக்; கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணி லோகோ வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Badminton League Gokulam Chennai rockers Logo launchedசெலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.
விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும் என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி.

கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையஅடி கோப்பைகளையும் வென்று வருகிறது.

கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமையான விஷயம் என்றார் பைஜு.

நான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன் முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது என்றார் மிஷா கோசல்.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.

பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள். வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன.

இப்போது மக்களிடம் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாங்கள் சென்னை மதுரை கோவையில் 13 வயது, 15 வயது மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் திறமையாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்றார் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் ஹேமச்சந்திரன்.

1968ல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம்.

எற்கனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.

எங்கள் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள் என்றார் கோகுலம் குழும தலைவர் கோபாலன்.

விழாவில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Badminton League Gokulam Chennai rockers Logo launched

மயில்சாமி ஒரு இளிச்சவாயன்; பிச்சைக்காரன்… விவேக் பாராட்டு

மயில்சாமி ஒரு இளிச்சவாயன்; பிச்சைக்காரன்… விவேக் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek praises Mayilsamy at Kasu Mela Kasu audio launchமயில்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “காசு மேலே காசு”.

கே.எஸ். பழனி இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக், காயத்ரி ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் விவேக் பேசும்போது மயில்சாமியின் நட்பு மற்றும் அவரது நல்ல குணங்களை பற்றி வெகு நேரம் பேசினார்.

அவர் பேசியதாவது…

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சினிமாவில் மயில்சாமி சினிமாவில் இருக்கிறான்.

அவர் என்னை விட மூத்தவராக இருந்தாலும் நான் அவனை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன்.

அவனிடம் யாராவது உதவி என்று கேட்டு சென்றுவிட்டால், கையில் இருப்பதை கொடுத்து உதவுவார்.

ஒருவேளை இல்லையென்றாலும் சும்மா விட மாட்டார். எங்களை போன்ற யாருக்காவது போன் செய்து உதவி கேட்டு அந்த நபருக்கு உதவி செய்வார்.

ஒரு முறை ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தோம். அங்கு ஒருவர் நன்றாக இந்திப் பாடல் பாடிக் கொண்டே இருந்தார். இவன் ஒவ்வொரு பாடலுக்கு பணம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

டேய். போகும்போது மொத்தமா பணம் கொடுத்துடலாம் என்றேன். அது வேற.. இந்த பாட்டு நல்லாயிருக்கு. அதுக்குதான் இந்த பணம் என்றான்.

பார்ட்டி எல்லாம் முடிஞ்சி போகும்போது டேய்.. ஆட்டோவுக்கு 50 ரூபா இருந்தா கொடு என்றான். இப்படி ஒரு நேரம் பணக்காரனாகவும் சில நிமிடங்களில் பிச்சைக்காரனாகவும் மாறிவிடுவான்.

இதேபோல்தான் உதவுவதிலும். காசு இருக்கும் போது கொடுத்துவிட்டு பின்பு பிச்சைக்காரனாக மாறிவிடுவான். அவன் ஒரு இளிச்சவாயன்/

அவனின் நல்ல குணத்துக்காகத்தான் சினிமாவில் சாதித்த பல இயக்குனர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.” என்று அவரை பாராட்டி பேசினார் விவேக்.

Vivek praises Mayilsamy at Kasu Mela Kasu audio launch

 

kasu mela kasu audio launch photos (5)

More Articles
Follows