ரஜினி-அஜித்துக்கு காத்திருக்காமல் படத்தை ஆரம்பித்த இயக்குனர்

ரஜினி-அஜித்துக்கு காத்திருக்காமல் படத்தை ஆரம்பித்த இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhaskar the Rascal director siddiqueபிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் மம்மூட்டி, நயன்தாரா, பேபி அனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி எழுந்தது.

இப்படத்தை தமிழிலும் நானே இயக்குவேன் என்றும் அதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார் சித்திக்.

அவரின் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் அஜித் நடிக்க வேண்டும் என விரும்பினார்.

ஆனால் காலம் கடந்து போனதே தவிர ரஜினி-அஜித் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.

எனவே அர்விந்த்சாமி, அமலாபால் நடிக்க, இப்படத்தின் பூஜையை போட்டு இன்று ஆரம்பித்துவிட்டார் சித்திக்.

Director Siddique started his tamil remake of Bhaskar the Rascal

baskar rascal

‘மூன்று முகம்’ டைட்டில் குறித்து விஜய்-61 தரப்பு விளக்கம்

‘மூன்று முகம்’ டைட்டில் குறித்து விஜய்-61 தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay new lookதெறி, பைரவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

அட்லி இயக்கிவரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இப்படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ’மூன்றுமுகம்’ டைட்டில் வைக்கப்படலாம் என செய்திகள் வந்தன.

இதனை மிஞ்சும் வகையில் டைட்டில் டிசைன் உடன் கூடிய லோகோ ஒன்று இணையத்தில் பரவியது.

இது குறித்து இப்படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‘அந்த டிசைன் யாரோ ஒருவர் செய்திருக்கிறார். படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை.

ஐந்து டைட்டில்கள் பரிசீலனையில் உள்ளது. அதில் மூன்று முகம் டைட்டிலும் இருக்கிறது. அவ்வளவுதான்.” என்றனர்.

Vijay 61 team clarifies Moondru Mugam title

vijay 61 team

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam teaser may release on Ajith Birthday 1st Mayசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் தவிர எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

படத்தின் டீசர் அதோ… இதோ என கூறப்பட்டாலும் அதுபற்றிய உறுதியான தகவலும் வரவில்லை.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று நிச்சயம் விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல்கள் வந்தன.

ஆனால் தற்போது, அஜித் பிறந்தநாளில் (மே 1ஆம் தேதி) விவேகம் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Vivegam teaser may release on Ajith Birthday 1st May

 

vivegam stills

தமிழ் புத்தாண்டுக்காக காத்திருக்கும் தனுஷ்-சிவகார்த்திகேயன்

தமிழ் புத்தாண்டுக்காக காத்திருக்கும் தனுஷ்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Sivakarthikeyanஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வருகிறார் தனுஷ்.

ஆனால் தற்போதுதான் ப பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்து இருக்கிறார்.

இப்படத்தின் இரண்டு ட்ரைலர்களும் நல்ல எதிர்பார்ப்பு எழுந்திருந்தாலும், தன் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார் தனுஷ்.

இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. எனவே அந்நாளை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதேநாளில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் வியாபாரம் தொடங்கவுள்ளதாக இதன் தயாரிப்பாளர் 24AM ஸ்டுடியோஸ் ஆர் டி ராஜா தெரிவித்துள்ளார்.

இவர்களின் கூட்டணியில் வெளியான ரெமோ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், வேலைக்காரன் படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே, தன் படத்தின் வியாபாரம் தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம் இந்த வேலைக்காரன்.

விஜய் பிறந்த நாளை குறிவைக்கிறாரா அட்லி.?

விஜய் பிறந்த நாளை குறிவைக்கிறாரா அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeவிஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்கிவருகிறார்.

இப்படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் குறித்த பல ஊகங்கள் கோலிவுட்டை வலம் வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக்கை, ஜூன் மாதம் வெளியிட இருக்கிறார்களாம்.

ஒருவேளை டைட்டில் குறித்த அறிவிப்பு முன்பே வந்தாலும் பர்ஸ்ட் லுக்கை ஜீன் மாதத்தில் விஜய் பிறந்தநாளில் வெளியிடுவது ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறார்களாம்.

இது விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என அட்லி திட்டமிட்டு இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Whether Director Atlee is targetting Vijay Birthday

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரானார் விஷால்; தேர்தல் முடிவுகள் முழுவிவரம்

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரானார் விஷால்; தேர்தல் முடிவுகள் முழுவிவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal elected as President in Tamilnadu Film Producers Councilதென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது.

தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட மொத்தம் 27 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது.

ராதா கிருஷ்ணன், கேயார் மற்றும் விஷால் ஆகியோர் தலைமையிலான 3 அணிகள் போட்டி போட்டன.

மொத்தமுள்ள 1211 வாக்குகளில் 1059 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின.

இந்நிலையில் சற்றுமுன் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் விஷால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும்.

மேலும் விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் கூறினார்.

வாக்குகள் விவரம்…

விஷால் 476 வாக்குகள், ராதாகிருஷ்ணன், 332 வாக்குக்கள், கேயார் 224 வாக்குகள் பெற்றனர்.

விஷால் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரைத் தொடர்ந்து இவரது அணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் இதோ…

பிரகாஷ்ராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.ஆர்.பிரபு பொருளாளராக தேர்வு பெற்றார்.

சங்க கௌரவ செயலாளர்களாக ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ஆனால் இதில் கதிரேசன் என்பவர், கேயார் அணி சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் அணி சார்பாக இப்பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் மிஷ்கின் தோல்வியை தழுவினார்.

மற்றவர்களின் வாக்குகள் விவரம்…

  • பிரகாஷ்ராஜ் – 408 வாக்குகள்
  • கௌதம் மேனன் – 357 வாக்குகள்
  • கே ராஜன் – 269 வாக்குகள்
  • ஏஎம் ரத்னம் – 294 வாக்குகள்
  • பிடி செல்வகுமார் – 216 வாக்குகள்
  • ஞானவேல்ராஜா – 373 வாக்குகள்
  • கதிரேசன் – 415 வாக்குகள்
  • மிஷ்கின் – 242 வாக்குகள்
  • ஏஎல் அழகப்பன் – 161 வாக்குகள்
  • சிவசக்தி பாண்டியன் – 206 வாக்குகள்
  • ஜேஎஸ்கே சதீஷ் – 237 வாக்குகள்
  • எஸ்ஆர் பிரபு – 394 வாக்குகள்
  • விஜயமுரளி – 212 வாக்குகள்
  • எஸ்ஏ சந்திரசேகர் – 326 வாக்குகள்

செயற்குழு உறுப்பினர்கள்…

1. சுந்தர் சி : 564 வாக்குகள்
2. பார்த்திபன் ஆர் : 501 வாக்குகள்
3. பாண்டிராஜ் : 489 வாக்குகள்
4. ஆர்.வி.உதயகுமார் : 465 வாக்குகள்
5. மன்சூர் அலிகான் : 460 வாக்குகள்
6. எஸ்.எஸ்.துரைராஜ் : 410 வாக்குகள்
7. ஆர்.கே.சுரேஷ் : 409 வாக்குகள்
8. ஆர்யா : 398 வாக்குகள்
9. ராமச்சந்திரன் : 392 வாக்குகள்
10. ஜெமினி ராகவா : 388 வாக்குகள்
11. அபினேஷ் : 383 வாக்குகள்
12. உதயா : 370 வாக்குகள்
13. காஃபர் : 369 வாக்குகள்
14. ப்ரவீண்காந்த் : 354 வாக்குகள்
15. மனோஜ்குமார் : 353 வாக்குகள்
16. தேனப்பன் : 348 வாக்குகள்
17. தங்கராஜ் : 344 வாக்குகள்
18. கே.பாலு : 342 வாக்குகள்
19. அன்பு : 326 வாக்குகள்
20. குமரன் : 320 வாக்குகள்
21. தியாகராஜன் : 319 வாக்குகள்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

Actor Vishal elected as President in Tamilnadu Film Producers Council

More Articles
Follows