பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்

New Project (2)தற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.

கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தக் குறும்படம் சமீபத்தில் பிரபலமான யூடியூப் இணையதளத்தில் வெளியானது. சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படத்தை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இக்குறும்படம் குறித்து நடிகர் நகுல் கூறும்போது, ‘குலசாமி என்னும் குறும்படத்தை பார்த்தேன். சமுதாயத்தில் நடக்கிற நிஜமான விஷயத்தை இயக்குனர் பாக்கியராஜ் திறமையாக இயக்கியிருக்கிறார். சாதி என்ற வார்த்தையால் எத்தனை பேர், எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இக்குறும்படத்தில் பார்க்கலாம்’ என்றார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாமி குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ். இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.

குலசாமி குறும்படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டுவது, மற்றவர்களிடையே குலசாமி குறும்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

Kulasamy Video Link – https://youtu.be/hEcE1PQbXDY

Overall Rating : Not available

Related News

Latest Post