கொரோனா நோய் பரப்பிய சீனக்காரன் சிறந்தவனே… – டைரக்டர் பேரரசு

கொரோனா நோய் பரப்பிய சீனக்காரன் சிறந்தவனே… – டைரக்டர் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Perarasu talks about Dr Simon burial and Corona சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கினர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் பேரரசு அவர்களும் தன் கண்டனத்தை கவிதையாக தெரிவித்துள்ளார்.

மனித வைரஸ்
————-
இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!

மனசாட்சியை
புதைத்துவிட்டு
மருத்துவரை
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!

இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!

நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!

கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!

இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!

இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கொரோனா வந்து
சாவதுமேல்!
*பேரரசு

Director Perarasu talks about Dr Simon burial and Corona

கீழ்த்தரமான காலத்தில் வாழ்கிறோம்.; டாக்டர் உடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பற்றி ராஜ்கிரண்

கீழ்த்தரமான காலத்தில் வாழ்கிறோம்.; டாக்டர் உடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பற்றி ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajkiran condemns disruption of Chennai Dr Simons funeral சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டாக்டரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர் மக்கள்.

அந்த ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் ராஜ்கிரண் தன் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது… தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், யாரைப்பற்றியும் கவலைப்படாமல், “தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே” என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால், இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.

இதைப் போன்ற கொடுமைகளுக்கு, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..” என தெரிவித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

Actor Rajkiran condemns disruption of Chennai Dr Simons funeral

தமிழ்ச் சமூக தலைகுனிவு.; Dr சைமன் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்த கார்த்தி

தமிழ்ச் சமூக தலைகுனிவு.; Dr சைமன் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi condemns disruption of Dr Simons funeralசென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டாக்டரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர் மக்கள்.

அந்த ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் கார்த்தி தன் கூறியதாவது…

Actor Karthi

டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!

Karthi condemns disruption of Dr Simons funeral

ரீமேக் படத்தில் விஜய் மகனை ஹீரோவாக்கும் விஜய்சேதுபதி.?

ரீமேக் படத்தில் விஜய் மகனை ஹீரோவாக்கும் விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi plans to produce Vijay son Sanjays debut movieசிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ள படம் உப்பெனா.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் இன்னும் தெலுங்கில் வெளியாகவில்ல்லை.

ஆனால் அதற்குள் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக முயற்சித்து வருகிறாராம். இது தொடர்பாக விஜய்யிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

புச்சி பாபுவே தமிழிலும் இயக்கவிருக்கிறாராம்.

கனடா நாட்டில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார் விஜய் மகன் சஞ்சய்.

இவரே சில குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகக்து.

Vijay Sethupathi plans to produce Vijay son Sanjays debut movie

ஊரடங்கிலும் உலக நாயகனின் ‘அறிவும் அன்பும்’ ரிலீஸ்; சூட்டிங் எப்படி நடந்தது?

ஊரடங்கிலும் உலக நாயகனின் ‘அறிவும் அன்பும்’ ரிலீஸ்; சூட்டிங் எப்படி நடந்தது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ulaganayagan Kamals Corona alert song Arivum Anbum Song makingகொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் எழுதி, இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர்.

“அறிவும், அன்பும்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்பாடலை நாளை ஏப்ரல் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இப்பாடலுக்கு மஹேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

திங்க் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்படவிருக்கின்றது.

முதல் முறையாக ஜூம் செயலியின் மூலமாக ஊடக நண்பர்கள் முன்னிலையில் கமலும் ஜிப்ரானும் இணைந்து இப்பாடலை வெளியிட உள்ளனர். மற்ற கலைஞர்கள் வீட்டில் இருந்தபடி இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.

இந்த பாடல் குறித்து கமல் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத சூழ்நிலையில் உள்ளோம்.

அவர் அவர் பாடும் பகுதிகளை தனியாக படம் பிடித்துள்ளனர்.

அவர்களாகவே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

அவரவர் எடுத்த வீடியோக்களை கமலுக்கு அனுப்ப அதை எடிட்டர் தொகுத்துள்ளார்.

நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார். மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர்.

இந்த கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற்றும்.

என கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ulaganayagan Kamals Corona alert song Arivum Anbum Song making

முதன் முறையாக 5 மொழிகளில் அசத்த வரும் ‘மாஸ்டர்’ விஜய்

முதன் முறையாக 5 மொழிகளில் அசத்த வரும் ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master movie will release in 5 languagesமாநகரம், கைதி ஆகிய இரு வெற்றி படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் இப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறதாம்.

இதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஜய் நடித்துள்ள ஒரு படம் 5 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

Vijays Master movie will release in 5 languages

More Articles
Follows