ஹீரோயின் பால்கோவா; ஆனா எனக்கு தங்கச்சி… வேறென்ன வேண்டும் விழாவில் பேரரசு பேச்சு

ஹீரோயின் பால்கோவா; ஆனா எனக்கு தங்கச்சி… வேறென்ன வேண்டும் விழாவில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Perarasu speech at Verenna Vendum movie audio launchஏ.எம்.ரெட் கார்பெட் பிலிம்ஸ், எஸ்.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அனுமணி, சால திம்ம ரெட்டி இணைந்து தயாரிக்கும் படம் வேறென்ன வேண்டும்.

நரேன்ராம் தேஜ், பெரான கண்ணா, தர்ஷன், அனுபமா, சுப்பிரணி, ஆதித்யா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரேம்குமர் சிவபெருமான் ஒளிப்பதிவு செய்கிறார். சிவபார்வதி குமாரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசினார்.

இந்த படத்தின் ஹீரோயின் பெரனா பார்க்க பால்கோவா மாதிரி இருக்கிறார். ஆனா நான் இதுக்கு மேல எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஏனென்றால் நாட்டு நிலைமை அப்படி. அவர் எனக்கு தங்கச்சி மாதிரி. என்று உஷாராக பேசினார் பேரரசு.

Director Perarasu speech at Verenna Vendum movie audio launch

இந்தியன்–2 படத்தை முடித்துவிட்டு தேவர்மகன்-2; கன்பார்ம் செய்த கமல்

இந்தியன்–2 படத்தை முடித்துவிட்டு தேவர்மகன்-2; கன்பார்ம் செய்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thevar magan 2கடந்த 1992–ல் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் இணைந்து நடித்து வெளியான படம் தேவர் மகன்.

இதில் நாசர், ரேவதி, கவுதமி, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடிக்க இளையராஜா இசையமைக்க, பரதன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இந்தி, கன்னட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளதாக கமல் உறுதிசெய்துள்ளார். இந்த அறிவிப்பை ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார் கமல்.

விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

அந்த படத்தை முடித்துவிட்டு தேவர் மகன்-2 பட சூட்டிங்கை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 நாட்கள் கொண்டாட்டம்; கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் உற்சாகம்

3 நாட்கள் கொண்டாட்டம்; கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshதமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் ஆஸ்தான நாயகி ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

எனவே, இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இவர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இதற்கு அடுத்த நாள் விஷாலுடன் இவர் இணைந்துள்ள சண்டக்கோழி2 திரைப்படம் வெளியாகிறது.

இதற்கு மறுநாள் அக்டோபர் 19ஆம் விஜய்யுடன் கீர்த்தி 2வது முறையாக இணைந்துள்ள சர்கார் பட டீசர் வெளியாகவுள்ளது.

எனவே 3 நாட்கள் கொண்டாட்டம்தான் என்பதால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.

இசை வெளியீட்டு விழான்னு இனிமே சொல்லாதீங்க… : சீறிய சீமான்

இசை வெளியீட்டு விழான்னு இனிமே சொல்லாதீங்க… : சீறிய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician Seeman speech at Billa Pandi audio launchபல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களில் மிரட்டல் வில்லனாகவும் அசத்தியவர் ஆர்.கே. சுரேஷ்.

இவர் முதன்முறையாக பில்லா பாண்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

இதில் இந்துஜா மற்றும் சாந்தினி இருவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரபல நடிகரான ராஜ் சேதுபதி இயக்க, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார் எம்.எம்.எஸ். மூர்த்தி. இளையவன் என்பவர் இசையமைக்கிறார்.

வீரகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜாமுகம்மது எடிட்டிங்கை கவனிக்கிறார்.

கேசி. பிரபாத் இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான், சூரி, வேல ராம மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் சீமான் பேசும்போது…

பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழான்னு சொல்லாதீங்க. பாடல்கள் வெளியீட்டு விழான்னு சொல்லுங்க. இசையை நாம் வெளியிட முடியாது.

மலையாள சினிமாவில் எழுத்தாளருக்கு மரியாதை உண்டு. ஆனால் இங்கே எழுத்தாளர்களை கதாசிரியர்களை மதிப்பதில்லை.

ஹீரோக்கள் சொல்வதையே கேட்கிறார்கள். அவர்கள் தான் ஹீரோயின் யார்? என்பதை முடிவு செய்கிறார்கள்.” என பேசினார்.

Politician Seeman speech at Billa Pandi audio launch

பஞ்சாப் சர்வதேச படவிழாவில் விருது பெற்ற *பென்டாஸ்டிக் பிரைடே*

பஞ்சாப் சர்வதேச படவிழாவில் விருது பெற்ற *பென்டாஸ்டிக் பிரைடே*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fantastic friday short film‘பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.

இந்தப்படத்தின் இயக்குனர் மணிமேகலை தமிழ்நாட்டைச் சார்ந்தவர். இந்தத் திரைப்படவிழாவில் பஞ்சாப் திரைத்துரையினரும், தேசிய விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இயக்குனர் மணிமேகலையின் கதைத்தேர்வு, மற்றும் அவர் அதைக் கையாண்டு இயக்கியவிதத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கின்றன மற்றும் அவை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பவற்றை மெல்லியதாக விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்தின் இயக்குனர் நம் எண்ணங்களே நம் செயல்களாக மாறுகின்றன என்ற கருத்தினை ஆழமாக முன் வைக்கிறார்.

மணிமேகலை மானிடவியல் பயின்றவர். நியூயார்க் பிலிம் அகாடமியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர். இவர் தற்பொழுது முழுநீளப் படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டுள்ளார்.

பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் பெயரில் திருத்தம் சொன்ன சீமான்

பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் பெயரில் திருத்தம் சொன்ன சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh must make some corrections in his name says Seemanவில்லன் நடிகரும் பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷ் அவர்கள் பில்லா பாண்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும் இவரது நடிப்பில் வேட்டை நாய் என்ற படமும் உருவாகிவருகிறது.

இந்நிலையில் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சீமான் கலந்துக் கொண்ட போது….

தமிழர்கள் மட்டும்தான் தன் பெயருக்கு முன்னால் ஆங்கிலத்தில் இன்சியல் போடுகிறார்கள். அதையும் தமிழில்தான் போட வேண்டும்.

சுரேஷ் களஞ்சிய தேவரின் மகன். எனவே அவர் ஆர்.கே. சுரேஷ் என ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.

பில்லா பாண்டி பட போஸ்டர்களில் பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் என்ற டைட்டில் கார்டு போடப்படுகிறது.

RK Suresh must make some corrections in his name says Seeman

More Articles
Follows