‘பிக்பாஸ்’ பாரபட்சம்..: சரவணனை கண்டித்த கமல் பாலாவை கண்டுக்கலையே.?

‘பிக்பாஸ்’ பாரபட்சம்..: சரவணனை கண்டித்த கமல் பாலாவை கண்டுக்கலையே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan balaji murugadossவிஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 4’ கடந்த ஒரு மாதமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது அனல் பறக்கும் வாய்ச்சண்டைகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.

ஒரு நாள் நடிகை சனம் ஷெட்டியை பாலா, ‘தருதலை’ என கேலி செய்தார்.

இதனையடுத்து கோர்ட் செட்டப் ஒரு டிசைன் செய்து பாலா, சனம் இருவரது சண்டை பற்றியும் இரு அணிகளாக விவாதம் நடைபெற்றது.

இறுதியாக பாலாவுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சுசித்ரா.

இவையில்லாமல் சனம் பற்றி பாலா பேசும்போது ‘அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் போட்டியில் வென்றார்,’ எனவும் ஒரு முறை கூறியிருந்தார்.

ஆனால் கடந்த வருட பிக்பாஸ் சீசனில் பெண் அவமதிப்பு பற்றிய சர்ச்சை உருவானது.

எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை நடிகர் சரவணன் சொன்னதை அடுத்து அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள்.

ஆனால், இந்த சீசனில் பாலா எதை செய்தாலும் பிக்பாஸ் அவரை கண்டு கொள்வதில்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டப்பெயர்களை வைத்து வருகிறார் பாலாஜி.

ஆரிக்கு அட்வைஸ் ஆரி, சனம்க்கு முந்திரிக்கொட்டை, வேல்முருகன்க்கு டிப்ளமேட்டிக், சோம்க்கு பப்பட் என ஒவ்வொருவருக்கும் பெயர் வைத்துள்ளார் பாலாஜி.

ஆனால் அவரை குழந்தை என அழைத்தால் மட்டும் ஏன் கோபப்படுகிறார்?

இதுபோல பல்வேறு கண்டனங்களை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Did Balaji Murugadoss cross his limits ?

மாஸ்டரை இயக்கும் ‘டாக்டர்’ பட டைரக்டர்..? வேற மாரி.. வேற மாரி..

மாஸ்டரை இயக்கும் ‘டாக்டர்’ பட டைரக்டர்..? வேற மாரி.. வேற மாரி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nelson dilipkumarமாஸ்டர் படத்தை அடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

கிட்டத்தட்ட இது உறுதியான பட்சத்தில் இந்த படத்திலிருந்து விலகினார் முருகதாஸ்.

எனவே தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்தது.

விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் பேரரசு இயக்குவார் என்று தகவல்கள் பறந்தன.

ஆனால் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா? அல்லது இதுவும் வழக்கம்போல வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவேளை இது உண்மையானால் இது வேற மாரியான கூட்டணியாக இருக்கும் என நம்பலாம்.

Nelson Dilipkumar to direct Thalapathy 65

ஹீரோவாக சிம்புவின் 18 ஆண்டுகள்…; ஹிட் எத்தனை? ப்ளாப் எத்தனை?

ஹீரோவாக சிம்புவின் 18 ஆண்டுகள்…; ஹிட் எத்தனை? ப்ளாப் எத்தனை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuகுழந்தை நட்சத்திரமாக பலர் நடித்தாலும் ஒரு சில குழந்தைகளே மக்கள் மனதில் இடம் பிடிப்பர்.

அதில் கமல், ஸ்ரீதேவி, மீனா போல முக்கியமானவர் நடிகர் சிம்பு.

அவரின் தந்தை டிஆர் இயக்கத்தில் 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். எங்க வீட்டு வேலன் படத்தை யாராலும் மறக்க முடியாது.

2002ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படம் வருவதற்கு முன்பே 2001ல் ‘சொன்னால்தான் காதலா’ என்ற டிஆரின் படத்தில் ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.

இந்த நிலையில் இன்றுடன் சிம்பு ஹீரோவாகி 18 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்துள்ளனர்.

இவர் தற்போது ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தன்னுடைய 46வது படமாக “ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ஹிட் படம் வரிசையில் ஓரிரு படங்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடிகிறது.

மன்மதன், வாலு, வல்லவன், தொட்டி ஜெயா, கோவில், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, சிலம்பாட்டம், இது நம்ம ஆளு, செக்கச் சிவந்த வானம் ஆகிய சொற்ப ஹிட் படங்களே உள்ளன.

இதில் மெகா ஹிட் படம் என ‘மன்மதன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களை மட்டுமே சொல்ல முடியும்.

ஆனாலும் இவருக்கான ரசிகர்களுக்கு என்றுமே குறைவில்லை எனலாம்.

இவருக்கு உள்ள திறமைக்கு சரியான படங்கள் அமையவில்லை என்றே சினிமா வல்லவன்கள் சொல்கின்றனர்.

மேலும் இவருடைய கால்ஷீட் சொதப்பல்கள், சூட்டிங்க்கு சரியான நேரத்திற்கு வராத பஞசாயத்து, கிசுகிசுக்கள் உள்ளிட்டவையே இவருக்கு சினிமாவில் பின்னடவை தந்துள்ளது என்கின்றனர்.

தற்போது உடல் எடையை குறைத்து தனது 2வது இன்னிங்க்சை ஆரம்பித்துள்ளார். இனி என்னாகும் என்று பார்க்கலாம்.

STR completes 18 years in Kollywood

இஸ்லாமியர் நெற்றியில் திலகமிட முடியுமா? ராஜமௌலிக்கு பாஜக MP எச்சரிச்கை

இஸ்லாமியர் நெற்றியில் திலகமிட முடியுமா? ராஜமௌலிக்கு பாஜக MP எச்சரிச்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகிய உண்மையான போராளிகளின் கதைக்களத்தை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அண்மையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கோமரம் பீம் கேரக்டரின் புரொமோ வீடியோ ஒன்று வெளியானது.

அதில் இஸ்லாமியரைப் போல பீம் கேரக்டர் உடை அணியும் காட்சியுள்ளது.

இதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமார்.

அவர் பேசியதாவது… “பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்று கோமரம் பீம் தலையில் ராஜமௌலி குல்லா அணிவித்தால் நாங்கள் அமைதியாக இருப்போமா?

கோமரம் பீம் அவர்களை குறைவாக மதிப்பிட்டோ, ஆதிவாசிகளின் உரிமைகளை, உணர்வுகளைத் தாழ்த்தியோ பட கதை இருந்தால் படம் ஓடும் தியேட்டர்களை எரிப்போம்.

ராஜமௌலிக்கு தைரியம் இருந்தால் ஒரு இஸ்லாமியத் தலைவரை நெற்றியில் திலகத்தோடு, காவி உடை அணியும் போல காட்சி வைக்க முடியுமா?”” என கேள்வி கேட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RRR movie

Telungana BJP MP warns Director Rajamouli

விஜய்-நயன்தாரா தங்கையிடம் பரதம் கற்கும் நடிகர் சிம்பு

விஜய்-நயன்தாரா தங்கையிடம் பரதம் கற்கும் நடிகர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் எவருமே எதிர்பாராத வகையில் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்துள்ளார் சிம்பு.

சில தினங்களாக வெளியாகும் சிம்புவின் ஸ்லிம் படங்களை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் உறைந்துள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இந்த படத்திற்காக களரி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல வித்தைகளை கற்று வருகிறாராம் சிம்பு.

நடிகை சரண்யாவிடம் பரதநாட்டியம் கற்கும் சிம்பு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும் நடித்தவர் சரண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

eeswaran simbu saranya mohan

STR learns Bharatanatyam from Saranya Mohan

மலையாள படம் ரீமேக்…? வெற்றிமாறன் சசிகுமார் கதிரேசன் கூட்டணி

மலையாள படம் ரீமேக்…? வெற்றிமாறன் சசிகுமார் கதிரேசன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumar vetri maaranபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் இணைகின்றனர்.

ஒரு புதிய படத்தை தயாரிப்பதற்காக இவர்கள் இணைந்துள்ளனர்.

மேலும் கதை மற்றும் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதுகிறார்.

இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு இப்பட சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.

மலையாளத்தில் பிரித்விராஜ்-பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்க்காக இந்த படம் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால் அப்பட தமிழ் ரீமேக் உரிமையை கதிரேசன் வாங்கியுள்ளார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

மேலும் அதன் தமிழ் ரீமேக்கில், சசிகுமார் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படம் அந்த படமா? என்பதை படக்குழு அறிவிக்கும் வரை காத்திருப்போம்.

Vetri Maaran and Sasi Kumar joins for a new tamil film

More Articles
Follows