ஹன்சிகா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு தனுஷ் விருந்து

ஹன்சிகா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு தனுஷ் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and hansikaஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா.

அதன்வின்னர் ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படம் கடந்த 2007-ல் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நாயகியாக நடிக்க துவங்கினார்.

தமிழில் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தற்போது வரை 50 படங்களில் நடித்து விட்டார்.

தற்போது விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’ மற்றும் அதர்வாவுடன் ‘100’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகா அடுத்து நடிக்கவுள்ள அவரது 50-வது படத்தின் அறிவிப்பை அவரது பிறந்தநாளில் வெளியிட உள்ளனர்.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு, நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

சுயசரிதை எழுத மாட்டேன்; சுய தம்பட்டம் சரித்திரமாகாது… இளையராஜா

சுயசரிதை எழுத மாட்டேன்; சுய தம்பட்டம் சரித்திரமாகாது… இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraajaஇசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடையே இளையராஜா பேசினார். அவர் பேசியதாவது…

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தான் எனது ஊர். அங்கு இசை கற்க எந்த வாய்ப்பும் இல்லை. அண்ணன் வரதராஜன் கச்சேரி செய்வார். அவர் ஆர்மோனிய பெட்டியை தொட விடமாட்டார்.

பிறகு நானாகவே மெல்ல கற்றுக் கொண்டேன். சென்னைக்கு வரும்போது வீட்டில் இருந்து ரேடியோவை விற்று அம்மா 400 ரூபாய் கொடுத்தார். அந்த பணத்துடன் சென்னை வந்தேன்.

இப்போது வரை எளிமையாக வாழவே விரும்புகிறேன்.

நான் எத்தனை பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன்.

ஆனால் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த “மலைப்பொழுதின் மயக்கத்திலே நான்…” பாடல் தான் எனக்கு பிடித்த பாடல்.

பாடலுக்கேற்ற பாடகர்களை தேடுவேன். யாருமே கிடைக்காவிட்டால் நானே பாடி விடுவேன்.

இசை என்பது இயல்பாகவே வர வேண்டும்.

என் இசை தான் என் சுயசரிதை. அதை நாள்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே சுயசரிதை எழுதும் எண்ணம் இல்லை.

சுய தம்பட்டம் எப்போதும் சரித்திரம் ஆகாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும். என் வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் கற்றக் கொள்ள எதுவுமே இல்லை.”

இவ்வாறு இசைஞானி இளையராஜா பேசினார்.

இயக்குனர் ஷங்கரால் இந்தியாவுக்கு பெருமை.. – ஏஆர். ரஹ்மான்

இயக்குனர் ஷங்கரால் இந்தியாவுக்கு பெருமை.. – ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar is pride of Indian Cinema says AR Rahmanகோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என பிஸியாக இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொண்டபோது 2.0 படம் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில்… “2.0 போன்ற ஒரு படத்தை டைரக்டர் ‌ஷங்கரால் மட்டுமே கொடுக்க முடியும்.

தான் விரும்பும் தரத்தை கொடுக்க அவர் மெனக்கெட்டு வருகிறார்

படத்தில் ஒரு முக்கியமான பாடலைப் பார்த்தேன். அதில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை. ஆனால் அதை அற்புதமாக படமாக்கியிருந்தார்.

கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். அந்த காட்சி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. ‌

ஷங்கர் போன்ற திறமைசாலியால் நம் இந்தியாவுக்கே பெருமை” என பதிலளித்தார்.

லைகா தயாரித்து வரும் இப்படத்தல் ரஜினிகாந்த், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Director Shankar is pride of Indian Cinema says AR Rahman

கலைஞர் கவலைக்கிடம்; சூர்யா சூட்டிங் & விஜய் மீட்டிங் கேன்சல்

கலைஞர் கவலைக்கிடம்; சூர்யா சூட்டிங் & விஜய் மீட்டிங் கேன்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya shooting and Pa Vijay meeting cancel due to Karunanidhi health issueதிமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த 12 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுநாள் வரை தீவிர சிகிச்சையில் இருந்து அவர் இன்று கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அவரது உடல்நிலையை குறித்து வந்த செய்திகளை அடுத்து நடிகர் சூர்யா படமான என்ஜிகே சூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் பாடலாசிரியர் பா விஜய் நடித்துள்ள ஆருத்ரா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya shooting and Pa Vijay meeting cancel due to Karunanidhi health issue

பவர் ஸ்டார் படம் ரீமேக்கில் தல? தளபதி.? யோசனையில் லைகா..!?

பவர் ஸ்டார் படம் ரீமேக்கில் தல? தளபதி.? யோசனையில் லைகா..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and ajithதெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் வெளியான அந்தரிண்டிகி தாரேதி.

2016ல் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற, இந்தியில் டப் செய்யப்பட்டது.

கன்னடத்தில் சுதீப் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ் ரீமேக் உரிமையை லைகா பெற்றுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் அஜித் நடிக்க வைக்க முயற்சிக்கலாம் என்ற யோசனை இருந்த்தாம்.

ஆனால் விஸ்வாசம் படம் வெளியான தபின்னர் தான் அடுத்த படம் பற்றி முடிவை அஜித் எடுக்கவுள்ளாராம்.

எனவே தல இல்லேன்னா தளபதி நாடலாமா? என யோசித்து வருகிறதாம் லைகா.

ஆனால் சர்கார் படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சர்கார் விஜய்யின் அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபலம்

சர்கார் விஜய்யின் அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shobi masterசன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘சர்கார்’.

இந்தியாவில் சில பகுதிகளில் இதன் சூட்டிங்கை முடித்த கையோடு சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க ‘சர்கார்’ படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பயணமாகியுள்ளனர்.

இதில் கலந்துக் கொள்வதற்காக வரலட்சுமியும் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

அமெரிக்காவில் ‘சர்கார்’ படத்தின் அறிமுக பாடலை படம் பிடிக்க, இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…’ என்று துவங்கும் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows