அஜித் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக்கிய தனுஷ்

Dhanush producing movie in the name of Ajith from Aruppukottaiநதிர்ஷா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’.

விஷ்ணு உன்னிகிருஷ்ணன் எழுதி, நடித்துள்ள இந்தப் படம், கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது.
காமெடிப் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்தப் படத்தைத்தான் தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்.

விஜய் டிவி தீனா இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்குகிறார்.

இதற்கு முன்பே தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் தீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush producing movie in the name of Ajith from Aruppukottai

Overall Rating : Not available

Related News

Latest Post