1500 தனுஷ் ரசிகர்கள் ரத்த தானம்.; கலைப்புலி தாணு பெருமிதம்

1500 தனுஷ் ரசிகர்கள் ரத்த தானம்.; கலைப்புலி தாணு பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush fans blood donationநடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் B. ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள், கேரளா, கர்நாடக, ஆந்திரா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை.

இந்த இரத்ததான முகாமை, தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, T. G தியாகராஜன், தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா, S. வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு ” 1500 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார்.

பிறகு விழாவில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனுஷ் பேசியவை :

இரத்த தானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி.

அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்

Dhanush fans blood donation

1500 Dhanush fans blood donation

இந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

இந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பிக்பாஸ் புகழ் ஆரவ் இணைந்து நடித்த மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களின் first look தற்போது வெளியிடப்பட்டுள்ளது .

இப்படத்தை தவிர எழில் சார் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற பாண்டி முனி படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.

ஆக மொத்தம், இந்த வருடம் ஆறு படங்கள் வெளியாகும் அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரத்திரங்ககளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் நிகிஷா பட்டேல்.

‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.

‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-

பாடலாசிரியர் விவேகா பேசும்போது:-

‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர், கபடி விளையாட்டை முன்னிறுத்தும் படமாகவும் வறுமை பூசிய எளிய மனிதர்களின் வாழ்வு, பெண்களின் முன்னேற்றம் போன்ற வலிமையான கருத்துகளை கூறும் படமாக இருக்கும், இமான் மிகச் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார், ஜாம்பவான் பாரதிராஜா இப்படத்தில் இருப்பது மிகப் பெரிய பலம் என்றார்.

எஸ்.டி.சபா பேசும்போது:-

படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் சுசீந்திரன் விருது பெற்று விட்டார், இந்த மாதிரி தரமான படங்களைத் தயாரிப்பதற்கு தாய் சரவணனுக்கு நன்றி. எங்கள் ஆசானான பாரதிராஜாவை வைத்து இரண்டாவது படம் எடுப்பது பாக்கியமாக கருதுகிறேன் என்றார்,

படதொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது:-

இப்படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் நன்றாக நடித்துள்ளார்கள்.

இயக்குநர் அகத்தியன் பேசும்போது:-

கபடியை மையமாகக் கொண்டு இயக்குநர் சுசீந்திரன் இரண்டாவது படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சி. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கபடி தான் எனது பிரதான விளையாட்டு. பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. என் பெண் இப்படம் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகிறார் என்றார்.

சண்டை இயக்குநர் தினேஷ் காசி பேசும்போது:-

இது என்னுடைய மூன்றாவது படம். சசிகுமாருடன் பணியாற்றியது சுலபமாக இருந்தது, பாரதிராஜாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது:-

இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

கதிரேசன் பேசும்போது:-

சமுதாயத்தில் பெண்களை மையப்படுத்தி அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் எல்லாவற்றுக்கும் தயங்கிக் கொண்டே இருப்பார்கள். இன்று சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பல வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரனுக்கு இந்த படத்தின் வெற்றி சாதாரணம் என்றார்,

இயக்குநர் எழில் பேசும்போது:-

சுசீந்திரனைப் பற்றிக் கூறவேண்டுமானால் சினிமா வெறிப்பிடித்த மனிதர் என்று கூறலாம், அவருடைய முதல் படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு போனேன். பாரதிராஜாவை பார்க்கும்போது விளையாட்டு வீரராகத் தோன்றுகிறது. மேலும் இப்படத்தைப் பார்க்கும் போது அனைவருக்கும் முக்கியமானதொரு படமாக தோன்றுகிறது. இமான் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர் P.L.தேனப்பன் பேசும்போது:-

இப்படத்தின் பாடல் பார்க்கும்போதே வெற்றிப் படமென்று தெரிகிறது என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது:-

மொழி சார்ந்து பாரம்பரியமிக்க கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் இயக்கியிருக்கும் சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். டி.இமானை தமிழ் சினிமா இசையின் செல்லப்பிள்ளை என்றே கூறலாம். இப்படம் வெற்றிபடமாக அமையும் என்றார்.

நாயகி மீனாட்சி பேசும்போது:-

இயக்குநர் சுசீந்திரனிம் கடின உழைப்பு போன்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். தேர்வு இல்லாமல் தான் என்னை தேர்ந்தெடுத்தார் சுசீந்திரன். அதுபற்றி அவரிடம் கேட்கும்போது நான் என் மேல் நம்பிக்கை வைத்துதான் உன்னைத் தேர்வு செய்தேன் என்றார். சசிகுமார் மிக நல்ல பயிற்சியாளர். ஒட்டன்சத்திரத்தை என்னால் மறக்க முடியாது என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது:-

சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றுவது இது 7-வது படம். இத்தனை படங்களிலும் எங்களுடைய உறவு கெடாமல் இருப்பது இருவருக்கும் உள்ள புரிதல்கள் தான். ஒவ்வொரு படங்களிலும் அடித்தளத்தை தெளிவாக அமைத்துக் கொடுப்பார் சுசீந்திரன். விவேகாவும் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியிருந்தார். மேலும், பின்னனி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக ‘கென்னடி கிளப்’ இருக்கும். சசிகுமாரின் கதாபாத்திரம் முதல் பார்வை போஸ்டரிலேயே நன்றாக இருக்கும் என்ற தெரிந்தது. பாரதிராஜா இருந்தாலே அங்கே ஒரு காந்த அலைகள் இருக்கும் என்றார்.

கபடி வீராங்கனை ஜீவா பேசும்போது:-

கபடி மட்டும் தான் எங்களுக்கு விளையாட தெரியும். சினிமா எங்களுக்கு புதியது. இருப்பினும் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாரதிராஜா, சசிகுமார் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் எங்களுக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தார்கள் என்றார்.

கபடி பயிற்சியாளர் செல்வம் பேசும்போது:-

எங்களுடைய ஒவ்வொரு போட்டிக்கும் நல்லுச்சாமி தவறாமல் கலந்துக் கொள்வார். அங்கே எங்கள் பெண்கள் படும் துயரங்களைப் பார்த்து இதை ஒரு படமாக எடுக்க வேண்டும் கூறினார். கபடிக்குழு நிறுவனர் நல்லுச்சாமி பேசும்போது:-

50 வருடங்களுக்கு முன்பு என் நண்பர்களுடன் கபடி குழுவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசிக்கும்போது நான் ‘வெண்ணிலா கபடி குழு’ என்று வைத்தேன்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது:-

நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலா கபடி குழு எடுத்தேன். என் அப்பாவை இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.இமானிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை. விவேகா நன்றாக பாடல் எழுதியிருக்கிறார்கள்.

ராஜபாண்டி இப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார்கள். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. கலை இயக்குநர் சேகருடன் இது எனக்கு மூன்றாவது படம். நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம்.

ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகிறது. இப்படம் எங்களுடைய குடும்ப படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரை பெண் மீனாட்சி நாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் சசிகுமார் பேசும்போது:-

‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாக தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது:-

நல்ல கலைஞர்களை வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்த அனுபவமே இல்லை. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த பெண்களுக்கு நன்றி கூற வேண்டும்.

சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானிபோல் வசதியாக வாழ விருப்பமில்லை.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன். இது சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுச்சாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன்.

சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போது தான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இப்படத்தை தொழிற்சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

நானும் டி.இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பல படங்கள் பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையானவர். லெனின் பேசும்போது, நான் அதிகம் பேசவில்லை பேசினால் பிரச்னை வரும் என்று கூறினார். பேசினால் பிரச்னை தீரும். ஆகையால் பேச வேண்டும். நான் துணை நிற்கிறேன் தயங்காமல் பேசு லெனின். உன்னுடைய சமீபத்தில் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்:-

இயக்குநர் அகத்தியன், SD.சபா, எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார்.

குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

கமல் – ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசையா..?

கமல் – ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா?

இதோ ஒரு சான்ஸ்…

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளனர்.

முதன்முறையாக கமல் மற்றும் ஷங்கர் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் துணை வேடங்களில் நடிக்க ஆர்வமும் பயிற்சியும் உள்ள நடிகர்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

வயது வித்தியாசமின்று ஆண், பெண் என இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த களவாணி

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த களவாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)இயக்குனர் சற்குணம் தயாரித்து இயக்கியுள்ள களவாணி 2 திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியாவுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் சுதாகர் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம்.

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் பேசும் வசனத்திற்கு ஆரவாரமாக கைதட்டுகிறார்கள்.

இப்படி, வில்லனாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது அவரை சூழ்ந்துக் கொண்ட மக்கள், “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் தலைவரே…” என்றும் கோஷமிடுகிறார்களாம்.

தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.

முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, பொது மக்கள் அரசியல்வாதியாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த அளவுக்கு ‘களவாணி 2’ வில் அவர் நடித்த ஊராட்சி தலைவர் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.

More Articles
Follows