பிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோவை தமிழ் மொழியில் வெளியிட்ட தனுஷ் மற்றும் சூர்யா !!

பிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோவை தமிழ் மொழியில் வெளியிட்ட தனுஷ் மற்றும் சூர்யா !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் லோகோ தமிழ் மொழியில் வெளியானது.. தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோர் மதியம் 2 மணிக்கு வெளியிட்டனர் .தெலுங்கு மொழியில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் ,பிரபல நடிகர் ராணா டகுபடி -யும் காலை 11 மணிக்கு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராமாஸ்டரா திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது.

தயாரிப்பு :ஹிரோ யாஷ் ஜோகர் கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா , நமிட் மல்ஹோத்ரா , ரன்பீர் கபூர் , அயன் முகர்ஜி, & பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் .

Logo Link – https://youtu.be/jVxP5TQ-NsI

தமிழனின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய ரஞ்சித்

தமிழனின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Pa Ranjith talks about Oppari Showதமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.

அந்த வகையில் சமீபத்தில் அவரின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்து நடத்திய “வானம் கலைத் திருவிழா” மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “ரூட்ஸ் 2” குழுவினர் ஒருங்கிணைத்த “ஒரு ஒப்பாரி ஷோ” நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஒப்பாரியானது, முதல் முறையாக ஒரு பொது மேடையில் அரங்கேறியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.

இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள ஒப்பாரிக் கலைஞர்கள் பங்குபெற்று பாடினார்கள்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்து பார்க்க வந்திருந்த பார்வையாளர்களைத் தாண்டி ஆந்திரா, கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து கூட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தவர்களும் இருந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், பங்குபெற்ற இசைக் கலைஞர்களுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய “மியூசிக் அகாடமி” நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் முதல் முறையாக ஒப்பாரியை ஒரு பெரிய மேடையில் பார்த்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இயக்குநர் பா.இரஞ்சித் இதுபோல நிகழ்ச்சிகளை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்க வேண்டுமென நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் வைத்தனர்.

Director Pa Ranjith talks about Oppari Show

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் சின்னம்; ரஜினி ஆதரவை கேட்கும் கமல்

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் சின்னம்; ரஜினி ஆதரவை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamals MNM party gets Torch Light symbol Will Rajini support

சிறுவயது முதல் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கமல் அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது.

அப்போது மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளார். விரைவில் எந்த தொகுதி? என்பதை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மற்ற தொகுதிகளில் தன் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தன் கட்சி உறுப்பினர்கள் களம் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதனிடையில் உங்கள் கட்சிக்கு நண்பர் ரஜினி ஆதரவளிப்பாரா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

நான் கேட்பதை விட அவர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கமல் மறைமுகமாக ரஜினி ஆதரவை கேட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என முன்பே ரஜினி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kamals MNM party gets Torch Light symbol Will Rajini support

இடைத்தேர்தலில் போட்டி; பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு; விஷால் முடிவு

இடைத்தேர்தலில் போட்டி; பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு; விஷால் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

By elections to 18 Assembly constituencies in TN Vishal plans to Nominateகோலிவுட் நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

சரத்குமார், ராதாரவி, கார்த்தி, டிஆர், சீமான் உள்ளிட்ட பலர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கமலும் களத்தில் இறங்கியுள்ளார். விரைவில் ரஜினிகாந்த் களம் இறங்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷாலும் வருகிற இடைத்தேர்தலில் களம் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலிலேயே போட்டியிட முயற்சித்திருந்தார் விஷால். ஆனால் அவரது வேட்புமனு அப்போது நிராகரிக்கப்பட்டதால் அவர் போட்டியிடவில்லை.

இந்நிலையில் அவர் வருகிற பார்லிமென்ட் தேர்தல் குறித்து கூறியுள்ளதாவது…

இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.

பார்லிமென்ட் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை விரைவில் அறிவிப்பேன்.

இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் முக்கியமானதாக இருக்கும்” என விஷால் கூறியுள்ளார்.

By elections to 18 Assembly constituencies in TN Vishal plans to Nominate

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கும் மோகன் ராஜா

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கும் மோகன் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Velayudham Vijay and Mohanraja team up for Thalapathy 64ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்த பின் விஜய்யின் 64வது படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி பல நாட்களாக கோலிவுட் எழுந்தது.

இந்நிலையில், ஒரு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மோகன்ராஜா விரைவில் விஜய்யை வைத்து படத்தை இயக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

After Velayudham Vijay and Mohanraja team up for Thalapathy 64

அண்ணனுக்கு முன்பே திருமணம்; தனுஷ் வழியில் சிம்பு தம்பி குறளரசன்

அண்ணனுக்கு முன்பே திருமணம்; தனுஷ் வழியில் சிம்பு தம்பி குறளரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus brother Kuralarasan is getting married next monthஇயக்குனர் செல்வராகவனின் தம்பி தான் நடிகர் தனுஷ் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அண்ணன் திருமணத்திற்கு முன்பே ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார் தனுஷ் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவரைப் போல சிம்புவின் தம்பி குறளரசனும் அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் குறளரசன்.

அண்மையில் அவர் முஸ்லீம் மதத்திற்கு மாறியிருந்த தகவலை நாம் பார்த்தோம்.

முஸ்லீம் மதத்தை சேர்ந்த தன் கேர்ள்ட் பிரண்ட்டை மணக்கவிருக்கிறராம் குறளரசன்.

இவர்களின் திருமணம் அடுத்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் குறளரசன் தந்தை டி. ராஜேந்தர் வெளியிட உள்ளார்.

Simbus brother Kuralarasan is getting married next month

More Articles
Follows