சாண்டியை பயமுறுத்தும் நேரம் : மிரட்ட வரும் ஹாரர் திரில்லர் ‘3:33’

சாண்டியை பயமுறுத்தும் நேரம் : மிரட்ட வரும் ஹாரர் திரில்லர் ‘3:33’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’.

முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.

படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு வீட்டின் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் தொழில்நுட்ப குழு விவரம்
எழுத்து & இயக்கம் – நம்பிக்கை சந்துரு
ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன்
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு – தீபக் S. துவாரகநாத்
VFX சூப்பரவைசர் – அருண்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
மிக்சிங் – ராம்ஜி சோமா
SFX – A. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

விளம்பர வடிவமைப்பு – SABA DESIGNS

வித்தியாசமான கதையில், மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள திரைப்படம், டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

வித்தியாசமான கதையில், மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள திரைப்படம், டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Dance master Sandy’s 3.33 will release on december 10

போலீஸ் ஸ்டேசன் ‘ரைட்டர்’ எழுதாத பக்கங்களை சொல்லும் ரஞ்சித்

போலீஸ் ஸ்டேசன் ‘ரைட்டர்’ எழுதாத பக்கங்களை சொல்லும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும்.

அதை மீண்டும் நிரூபிக்கின்ற வகையில் வெளியாகிவுள்ள “ரைட்டர்” பட டீசர் அமைந்துள்ளது எனலாம்.

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது.

ரைட்டர் கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். படத்தின் டீசர் காட்சிகளை பார்க்கும்போதே அதிகார உயர் அதிகார போலீசாரிடம் சிக்கி ரைட்டர் படும் பாட்டை அருமையாக உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவருடன் இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை “லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்” மற்றும் “கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த ‘ரைட்டர்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.

Pa Ranjith’s writer will release on december 24

அரவிந்த் சாமி & த்ரிஷா இணைந்த ‘சதுரங்க வேட்டை 2’ பட ரிலீஸ் அப்டேட்.

அரவிந்த் சாமி & த்ரிஷா இணைந்த ‘சதுரங்க வேட்டை 2’ பட ரிலீஸ் அப்டேட்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2.

H.வினோத் (வலிமை, நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டையின் இயக்குனர்) எழுதி, NV நிர்மல் குமார் (விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ புகழ்) இயக்கிய இந்தப் படத்தை, தயாரிப்பாளர் மனோபாலாவின் Picture House and Cinema city நிறுவனம் தயாரித்துள்ளது.

ONSKY Technology PVT. LTD நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் இது குறித்து கூறியதாவது…

“அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன்.

சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று.

இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.

இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, ​​உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன்.

இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி.

இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பிரபலமான பழமொழி உள்ளது – சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில்இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா உடன், பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் மற்றும் பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள் சதுரங்க வேட்டை 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Sathuranga Vettai 2 release date is here

ஹாட்ரிக் ஹிட்டடிக்க மோதலுக்கு ரெடியான சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி

ஹாட்ரிக் ஹிட்டடிக்க மோதலுக்கு ரெடியான சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் டான்.

இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது-

இதே நாளில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர்.

ஏற்கெனவே 2013 ஆண்டில் எதிர்நீச்சல் மற்றும் சூதுகவ்வும் படங்கள் மோதின.

அதன்பின்னர் 2016 ஆண்டில் ரெமோ, றெக்கை ஆகிய படங்கள் மோதின.

இந்த நான்கு படங்களும் ஹிட்டானது.

தற்போது 3வது முறையாக விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் ஹாட்ரிக் ஹிட்ட்டிக்க மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Vijay Sethupathi to clash next year

விஜயகாந்த்-பிரபு படங்களை இயக்கியவர் ஏவிஎம் எதிரே அனாதையாக இறந்து கிடந்தார்

விஜயகாந்த்-பிரபு படங்களை இயக்கியவர் ஏவிஎம் எதிரே அனாதையாக இறந்து கிடந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் 150வது படமான விஜயகாந்த் நடித்த ‛மாநகர காவல்’ படத்தை இயக்கியவர் எம்.தியாகராஜன்.

இவர் இளையதிலகம் பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் சினிமா வாய்ப்பின்றி சென்னை மாநகர தெருக்களில் அநாதையாக அலைந்து திரிந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 8ஆம் தேதி அதிகாலை சென்னையில் ஏ.விஎம்.எம். ஸ்டுடியோ எதிரில் உள்ள தெருவில் அனாதையாக இறந்து கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார், கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாநகர காவல் என்ற பெயரில் படம் எடுத்த இயக்குனரின் நிலையறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் செய்வதறியாது உள்ளனர்.

இவரது மறைவுக்கு விஜயகாந்த், அவர் குடும்பத்தினர் சார்பில், மறைந்த எம்.தியாகராஜன் தம்பியும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை அருப்புகோட்டையில் நடக்கும் எம்.தியாகராஜன் இறுதி சடங்கில் தேமுதிக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director M Thyagarajan passed away

ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..

ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய Sudesi App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும்.

Sudesi App-ஐ அறிமுகம் செய்வதற்காக சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு Sudesi App பற்றி பேசினார்கள். Sudesi App- ன் CEO கோபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் ஒன்றினைந்து Sudesi App-ஐ அறிமுகம் செய்தனர். திருச்சியில் 800 ஓட்டுநர்கள் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் இயங்கி கொண்டிருக்கும் Sudesi App சென்னையில் 10.12.2021 முதல் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் அடுத்த 5 நாட்களில் முதல் சேவையை தொடங்க இருக்கிறது.

கால் டாக்சி மற்றும் வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபெர் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுபோன்ற செயலிகள் வெளியானது முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக Sudesi App-ஐ உருவாக்கும் முன், சுதந்திரம் என்ற பெயரில் டெலிகிராம் அக்கவுண்ட் மற்றும் இலவச தொலைபேசி எண் மூலமாக இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான கட்டணத்தில் சேவை வழங்க துவங்கினர். பின் சுதந்திர மீட்டர் ஆட்டோ என்ற பெயரை மாற்றி சுதேசி என்ற பெயரில் செயலியை உருவாக்கி் ஆட்டோ மற்றும் டாக்சி இரண்டு சேவையும் தருகின்றனர்.

Sudesi App, A specified app for Auto ride from the auto drivers Launched in chennai

More Articles
Follows