சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்சேதுபதி படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்சேதுபதி படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் ஓரிரு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம்.

தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை இயக்கவிருக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் கடந்த 2018ல் தமிழ்நாடு அளவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்திலும் சந்தானத்துடனும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

Cooku with comali contestant joins VJS film

cooku with comali pugazh

‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்யும் ஷங்கர்..; விக்ரம் கேரக்டரில் இவரா..?

‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்யும் ஷங்கர்..; விக்ரம் கேரக்டரில் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.

பெரிய நடிகர்களின் படங்களைப் போலவே ஷங்கரின் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

லைகா தயாரிப்பில் கமல், விவேக், சித்தார்த், பிரியா நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் ஷங்கர்.

சூட்டிங்கில் விபத்து & கொரோனா அச்சுறுத்தல் & கமலின் அரசியல் பிரவேசம் ஆகியவற்றால் இந்தியன் 2 முடங்கியது.

இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர்.

இந்த படத்தை முடித்துவிட்டு விக்ரம் நடித்து ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம் ஷங்கர்.

இதில் விக்ரம் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது.

Shankar to remake anniyan in bollywood ?

ரஜினி வெறியர் கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து தள்ளிய தனுஷ்

ரஜினி வெறியர் கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து தள்ளிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2012ல் விஜய்சேதுபதி நடித்த பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.

இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என வித்தியாசமான படங்களை இயக்கினார்.

ஜிகர்தண்டா படம் மூலம் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

தீவிர ரஜினி ரசிகரான இவர் ‘பேட்ட’ படத்தின் மூலம் ரஜினியை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

தற்போது ரஜினி மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இன்று மார்ச் 19ல் பிறந்தநாள் கொண்டாடி வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள தனுஷ்.

அதில்… “தான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்” என புகழ்ந்துள்ளார்.

Dhanush praises Karthik Subbaraj on his birthday

மக்கள் கேண்டீன்.. மகளிர் வங்கி.. NEETக்கு நோ SEETக்கு எஸ்..; கமல் கட்சியின் தேர்தல் அறிக்கை

மக்கள் கேண்டீன்.. மகளிர் வங்கி.. NEETக்கு நோ SEETக்கு எஸ்..; கமல் கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

இன்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மார்ச் 19ல் வெளியிட்டார்.

சிறப்பம்சங்கள்…

* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்க திட்டம்

*பெண்களுக்கு மாத ஊதியம் என்பது வேலை வாய்ப்பை உருவாக்குவது; இலவசம் வழங்குவது அல்ல. அவர்களது திறனை மேம்படுத்தி மாதம் ரூ.10,000 வரை வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும்.

* இலவச வாஷிங் மெஷினுக்கான மின் கட்டணம் நாளை மக்கள் தலையில் தான் விழும்.

*அனைத்து மாநகராட்சிகளிலும் ’மோனா ரயில்’ திட்டம் கொண்டு வரப்படும்.

* மருத்துவப்படிப்புக்கான ’நீட்’ நுழைவுத்தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டங்களை கொண்ட ’சீட்’ நுழைவுத்தேர்வு. (STATE ENTRANCE ELEGIBILITY TEST)

*அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி, உயர் கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

*மகளீர் வங்கிகள் உருவாக்கப்படும்.

*சர்வதேச தரத்தில் தமிழக அரசு பள்ளிகள்.

* மக்கள் கேண்டீன் உருவாக்கப்படும்… இந்த கேண்டீன் அம்மா கேண்டீன் போன்றதல்ல… ராணுவ கேண்டீன் போன்றது. மக்கள் கேண்டீன் திட்டத்தில் தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்.

Kamal Haasan releases MNM party manifesto

அருண் விஜய் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா..; டைரக்டர் ஹரி ஆஸ்பத்திரியில் அனுமதி.!

அருண் விஜய் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா..; டைரக்டர் ஹரி ஆஸ்பத்திரியில் அனுமதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருந்த படம் ‘அருவா’.

இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். எனவே அருண் விஜய்யை நயகனாக வைத்து படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

இது சூர்யாவுக்கான கதையா? அல்லது புதிய கதையா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பழனி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்த்துள்ளது.

எனவே AV33 படக்குழுவில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையில் இயக்குனர் ஹரி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஹரிக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Director Hari admitted to hospital

வேட்புமனு தாக்கல் நிறைவு.; கட்சி தலைவர்கள் தொகுதிகளில் எத்தனை பேர் போட்டி.?

வேட்புமனு தாக்கல் நிறைவு.; கட்சி தலைவர்கள் தொகுதிகளில் எத்தனை பேர் போட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

இன்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

இதுவரை 5000-க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும்.

வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 22ம் தேதி ஆகும்.

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் 33 பேர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 41 பேர்

அமமுக தலைவர் தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 19 பேர்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 19 பேர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சுயேட்சையாக மட்டும் 59 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Assembly election nominations over

More Articles
Follows