எந்த கட்சிக்கு போறதுன்னே தெரியாம இருந்தேன்..; பாஜக-வில் எல்லாமே கிடைக்கும்.. – காமெடி நடிகர் செந்தில்

எந்த கட்சிக்கு போறதுன்னே தெரியாம இருந்தேன்..; பாஜக-வில் எல்லாமே கிடைக்கும்.. – காமெடி நடிகர் செந்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அதிமுக-வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் செந்தில்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019-ல் செந்தில் தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டவர் இவர்

அமமுக கட்சி பணிகளில் ஈடுபாடு இல்லாமல் செந்தில் ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் அந்த கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

இந்த நிலையில், நடிகர் செந்தில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பாஜகவில் இனைந்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

“ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தேன்.

அதன்பின்னர் எந்த கட்சிக்கு போவது என தெரியாமல் இருந்தேன்.

நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். பாஜக ஒரு நல்ல கட்சி.

எல்லோருக்கும் என்ன வேண்டுமோ, அவையெல்லாம் கிடைக்கும் .

இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்.

நாட்டு மக்களுக்கு பாஜக நல்லது செய்யும். ஊழலற்ற ஆட்சியாக பாஜக உள்ளது”

இவ்வாறு செந்தில் பேசினார்.

Comedy actor Senthil joins BJP

JUST IN மறக்காம ஓட்டு போட ‘டாக்டர்’ அட்வைஸ்.; ரசிகர்களுக்கு ரம்ஜான் விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்

JUST IN மறக்காம ஓட்டு போட ‘டாக்டர்’ அட்வைஸ்.; ரசிகர்களுக்கு ரம்ஜான் விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள படம் ‘டாக்டர்’. இதில் வருண் என்ற பெயரில் நடிக்கிறார்.

இப்படம் மூலமாக பிரியங்கா மோகன் என்பவர் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இந்த மாதம் மார்ச் 26ம் தேதி டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

தற்போது தமிழகம் புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.

ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே மறு ரிலீஸ் தேதி அறிவிக்காமல் படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்தனர்.

இப்போது தேர்தல் முடிந்த பிறகு ரம்ஜானை முன்னிட்டு படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இப்போதும் சரியான தேதியை அறிவிக்கவில்லை.

ரம்ஜான் மே 14 வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே அப்போது டாக்டரை எதிர்ப்பார்க்கலாம்.

இது பற்றிய அறிவிப்பில்… “மறக்காம ஓட்டு போடுங்க.. ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது” என அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan’s Doctor release date announced

விஜய் கைவிட்டதால் விஷாலை இயக்கும் ஏஆர். முருகதாஸ்.?

விஜய் கைவிட்டதால் விஷாலை இயக்கும் ஏஆர். முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் மிகப்பெரிய ஹிட்டுக்கு பிறகு முருகதாஸின் அடுத்த பட ஹீரோ? யார் என்ற கேள்வி வெகு நாட்களாக கோலிவுட்டில் எழுந்தது.

இவரது அடுத்த பட இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்தார். ஆனால் விஜய் விலகிவிட்டார்.

எனவே விஜய்க்காக எழுதி வைத்த கதையில் விஷாலை முருகதாஸ் நடிக்க வைக்க உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவியது.

ஆனால் அது முற்றிலும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார் விஷால்.

மேலும் மிஷ்கின் விலகி விட்டதால் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷாலே இயக்கவுள்ளார்.

இதனால் அந்த படங்களை முடிக்கும் வரையில் வேறு படங்களில் கவனம் செலுத்த மாட்டாராம் விஷால் என தெரிய வந்துள்ளது.

Vishal replaces Vijay in ARM’s next ?

‘குக் வித் கோமாளி’ புகழ் பிரபலத்துக்கு விபத்து.; பன்ச் வித் செம அப்டேட்..

‘குக் வித் கோமாளி’ புகழ் பிரபலத்துக்கு விபத்து.; பன்ச் வித் செம அப்டேட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் டிவி நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதில் விஜய் டிவிக்கு நிகர் எதுவுமில்லை.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை அடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இப்போ ஹாட் டாப்பிக்.

இதன் மூலம் ஒரேடியாக பாப்புலர் ஆன புகழ் & சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சீசன் 2 நிகழ்ச்சியில் விஜே மணிமேகலையும் பங்கெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்கள் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு பன்ச் டயலாக்கையும் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு…

ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கையில்லை.. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை

Cooku With Comali contestant met with an accident

சூட்டிங்கில் விபத்து…; நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் எப்படி இருக்கிறார்.?

சூட்டிங்கில் விபத்து…; நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் & சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பஹத் பாசில்.

இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

பஹத் பாசிலின் தந்தை பாசில் தயாரித்து வரும் ‘மலையன் குஞ்சு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பஹத்.

இப்படப்பிடிப்பின்போது, உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அப்போது பஹத்துன் மூக்கில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் பஹத் பாசில்.

பின்னர் வீடு திரும்பி தற்போது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் புகைப்படத்தை சோஷியல் மீடியா பகிர்ந்துள்ள அவரது மனைவி நஸ்ரியா, ‘ஆல் இஸ் வெல்” என தெரிவித்துள்ளார்.

Update on fahadh faasil’s health

மீண்டும் சாத்தான்குளம் சர்ச்சை.? அதிமுக ஆட்சியில் கண்ணியத்தை இழக்கும் காவல்துறை..; கமல் கண்டனம்

மீண்டும் சாத்தான்குளம் சர்ச்சை.? அதிமுக ஆட்சியில் கண்ணியத்தை இழக்கும் காவல்துறை..; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

ஊரடங்கு சமயத்தில் இரவில் கடை திறந்து வைத்து இருந்ததாக கூறப்பட்டது.

காவல் நிலையத்தில் இருவரும் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற சம்பவம் ஒன்றை தற்போது கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

ஓமலூருக்கருகே இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீக்கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்.

இதே காரணம் சொல்லித்தான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள்.

அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது…

MNM leader Kamal Haasan slams TN Govt

More Articles
Follows