நீட் தேர்வு விவகாரம்; அனிதா தற்கொலைக்கு ரஜினி-கமல்-தனுஷ் இரங்கல்

நீட் தேர்வு விவகாரம்; அனிதா தற்கொலைக்கு ரஜினி-கமல்-தனுஷ் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

student anithaநீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.

மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனிதாவுக்கு நடந்தவை துரதிஷ்டவசமானவை. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் மற்றும் ஜிவி. பிரகாஷ் அவர்களும் தங்களது இரங்கலை பதிவிட்டுள்ளனர்.

3 படங்களை தயாரித்து நடிக்கும் விமல்; பிறந்தநாளில் அறிவித்தார்

3 படங்களை தயாரித்து நடிக்கும் விமல்; பிறந்தநாளில் அறிவித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vimalஇயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா.
இப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் விமல் தனது பிறந்த நாள் (ஆகஸ்ட் 30) கொண்டாட்டத்தின் போது, தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

மன்னர் வகையறாவை முடித்தவுடன் ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கிறார்.
அவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து சற்குணம் இயக்கத்தில் களவாணி-2’ படத்தில் மீண்டும் நடிக்கிறார் விமல்.

இதில் சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் தொடர்கிறது.

மாதவன் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு ‘களவாணி-2’ படத்தை சற்குணம் தொடங்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

புரியாத புதிர் காட்சிகள் ரத்து; விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம்

புரியாத புதிர் காட்சிகள் ரத்து; விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathiஇன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட புரியாத புதிர் படத்தின் காலை காட்சிகள் ரத்தாகி விட்டது.திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி 22.13 லட்சம் ரூபாய் பாக்கி தயாரிப்பாளர் வைத்துள்ளதால் படத்துக்கு தடை விதிக்க கோரி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வழக்கு தொடுத்தது.

எனவே, அந்த தொகையை கொடுக்கும் வரை படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் திட்டமிட்டபடி படம் இன்று ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

இந்த பிரச்சினையில் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

எனவே எங்கும் இந்தப்படம் திரையிடப்படவில்லை.

எனவே விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தீபாவளியில் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு விருந்து

தீபாவளியில் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஇந்தாண்டு 2017 தீபாவளிக்கு மெர்சல், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு குறைந்தபட்சம் அரை டஜன் படங்களை கொடுக்கும் விஜய்சேதுபதியின் படங்களில் ஏதாவது ஒன்றாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரின் எந்த படங்களும் அந்த சமயத்தில் வெளியாகவில்லை.

இந்நிலையில் கோகுல் இயக்கத்தில் சாயிஷாவுடன் விஜய்சேதுபதி இணையும் ஜீங்கா படத்தின் பர்ஸ்ட் லுக்கை தீபாவளியன்று வெளியிடவிருக்கிறார்களாம்.

இது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

பெப்சி காலவரையற்ற ஸ்டிரைக்; மீண்டும் காலா சூட்டிங் நிறுத்தம்

பெப்சி காலவரையற்ற ஸ்டிரைக்; மீண்டும் காலா சூட்டிங் நிறுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala stillsதிரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து சில நாட்களுக்கு முன் ரஜினியின் காலா மற்றும் விஜய்யின் மெர்சல் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

ஆனால் மற்ற அமைப்பின் தொழிலாளர்களை வைத்து தன் துப்பறிவாளன் பட சூட்டிங்கை நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

இந்நிலையில் மீண்டும் பிரச்சினை எழவே, பெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளதாவது…

‘கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) பெரும் பங்கு வகித்து வருகிறது.

பல சூழலில் இழுபறி நிலவிய போதும் எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமாவின் பயணத்துக்கு உதவியிருக்கிறோம்.

தற்போது எங்கள் அமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக மற்றொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

எனவே இதை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கிறோம்.
மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர்’ என்றார்.

இதனையடுத்து ரஜினியின் காலா மற்றும் 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய்க்கு பயந்து சிவகார்த்திகேயனுடன் மோதும் பிரபல நடிகர்

விஜய்க்கு பயந்து சிவகார்த்திகேயனுடன் மோதும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hara Hara Mahadevaki clash with Velaikkaran on Ayudha Pooja 2017அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதே நாளில் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம்கார்த்திக், நிக்கிகல்ராணி நடித்துள்ள ஹரஹர மஹாதேவகி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த தீபாவளி போட்டியில் இருந்து விலகி இந்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் வெளியாகிறது.

மேலும் செப். 28ஆம் தேதி மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர், ஜிவி.பிரகாஷ் நடித்துள்ள செம உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hara Hara Mahadevaki clash with Velaikkaran on Ayudha Pooja 2017
harahara mahadevaki poster

More Articles
Follows