‘பிளட் மணி’-க்காக மீண்டும் பத்திரிகையாளராக மாறிய பிரியா பவானி சங்கர்

‘பிளட் மணி’-க்காக மீண்டும் பத்திரிகையாளராக மாறிய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில்,…

“‘ப்ளட் மணி’ படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறேன்.

பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி”.

நடிகர் கிஷோர் கூறுகையில்,…

“வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உலகம் முழுதும் நிகழ்ந்திருக்கும் நகரமயமாக்கலில் இன்று இது சாதாரணமாகிவிட்டது.

‘ப்ளட் மணி’ வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் அவலத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. அதே நேரம் இன்றைய சமூகத்தில் இதில் உள்ள விவரங்களை வெளிப்படுவத்திலும், சமூகத்தில் இது பற்றிய மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கையும் இது வலியுறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பணக்கார வாழ்க்கையைத் தேடி, அனைத்தையும் விட்டுவிட்டு, வெளிநாட்டிற்கு, தெரியாத நிலத்திற்கு பயணம் செய்வதற்கு முன்பு, எவரையும் ஒருமுறைக்கு இருமுறை இந்த படம் யோசிக்க வைக்கும்.

இந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஊடகங்கள் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் உணர்ச்சிகரமான விஷயங்களை திரையில் கொண்டு வந்ததற்காக புகழ்பெற்ற இயக்குனர் சர்ஜுனுடன் மீண்டும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.”

நடிகர் ஷிரிஷ் கூறுகையில்….

, “பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும், தலைப்பு செய்தியை விட அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதையும் கூறும் படைப்பாக வரவுள்ளது”

இயக்குனர் சர்ஜூன் KM கூறுகையில்…

, “ZEE5 இன் மிகச் சிறப்பு மிகுந்த படைப்புகளில் ஒன்றான ‘பிளட் மணி’ படத்தின் இயக்குனராக இருப்பது மிகப் பெருமையான தருணமாகும். வியத்தகு லொகேஷன்களில், சிறந்த நடிகர்களுடனான, மிக அற்புதமான படப்பிடிப்பு அனுபவங்கள் என, ‘பிளட் மணி’ என் வாழ்வின் சூப்பர் ஸ்பெஷல் திரைப்படம் !”

தயாரிப்பாளர் இர்பான் மாலிக் கூறுகையில்….

, “ZEE5 உடன் இணைந்து இந்த அற்புதமான ‘பிளட் மணி’ திரைப்படத்தை உருவாக்கியது மிகவும் பெருமையாக உள்ளது”.

திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ்
ஒளிப்பதிவு – G பாலமுருகன் DFT
இசை – சதிஷ் ரகுநந்தன்
கலை – சூர்யா ராஜீவன்
படத்தொகுப்பு – பிரசன்னா GK
பாடல்கள் – Kugai M புகழேந்தி

‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Catch Blood Money a ZEE5 Original from 24 December

ரஜினியை இயக்க ஆசை..; விஜய்-தனுஷ் படங்களுக்கு வரவேற்பு இருக்கு..; RRR விழா சுவாரஸ்யங்கள்

ரஜினியை இயக்க ஆசை..; விஜய்-தனுஷ் படங்களுக்கு வரவேற்பு இருக்கு..; RRR விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).

இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “RRR” திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. நேற்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான , பிரமாண்ட முன்னோட்ட விழாவில், இயக்குநர் S S ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜீனியர் என் டி ஆர், ஆலியாபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*இவ்விழாவில் Lyca Productions சார்பில் தமிழ்குமரன் பேசியதாவது..*

பிரமாண்ட படங்களை தயாரித்து வருவதில் லைகா புரொடக்சன் சுபாஸ்கரன் முதன்மையாக இயங்கி வருகிறார். பிரமாண்ட படங்களை இயக்கி வரும் ராஜமௌலியுடன் இணைந்தது மகிழ்ச்சி. நடிகர் ராம் சரண், நடிகர் என் டி ஆர், ஆலியா பட் ஆகியோரை இங்கு வரவேற்பது மிகவும் மகிழ்ச்சி.

*நடிகை ஆலியா பட் பேசியதாவது…*

நான் என் திரைப்பயணத்தை இங்கு தமிழில் தான் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. RRR படத்தை காண நானும் மிக ஆவலாக இருக்கிறேன். எனக்கு இப்படத்தில் நடித்தது ஒரு கனவு நனவானது போன்று தான் இருந்தது. உங்களுக்கு இப்படம் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும்.
பாலிவுட் படத்தில் மட்டும் நடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. ஒரு இயக்குநர் தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும், இயக்குநரின் பார்வை தான் முக்கியம். நான் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இப்படத்தில் என்னை மிக மிக ஆதரவாக பார்த்து கொண்டார்கள், படத்தில் நடித்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் நடிக்கும்போது ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுவிட்டேன். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

*நடிகர் ராம்சரண் பேசியதாவது…*

இங்கு வந்து தமிழக ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலி உடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாக தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். இப்படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாக படைத்திருக்கிறார்.அதை திரையிலும் சரியாக கொண்டு வர நாங்கள் உழைத்திருக்கிறோம். படத்தில் வேலை செய்த போது சில காட்சிகளில் நடிக்கும் போது, என் டி ஆர் ஃப்ரீயாக இருப்பார் அதை பார்த்த போது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்.

நான் சென்னையில் தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி, இப்படத்தில் தமிழில் பேசியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள்.

*நடிகர் ஜீனியர் என் டி ஆர் பேசியதாவது…*

உங்களுடன் கலந்துரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜமௌலி எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுவே எனக்கு பயத்தை தந்தது. ஒரு நடிகருக்கு இயக்குநர் நம்புவதை தருவது சவாலானது. அதை எங்களால் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறோம்.

எனக்கும் ராம்சரணுக்கு தோன்றிய எண்ணம் தோன்றியது. நான் கஷ்டப்பட்டு ஷூட்டிங் செய்யும்போது அவர் பேக்கப் பண்ணி போய்கொண்டிருப்பார், என்னை விட்டுட்ட்டு போறியா இரு நானும் வர்றேன் என்பேன். படம் முழுக்க வேலை பார்த்ததே, மிக புதிதான அனுபவமாக இருந்தது. பாகுபலி இந்தியா முழுதையும் ஒன்றாக்கியது எந்த நடிகரும் எந்த மொழியிலும் நடிக்கலாம்.

விஜய் சாரின் மாஸ்டர் படம் தெலுங்கில் மிகபெரிதாக வெற்றி பெற்றது. தனுஷ் படமும் தெலுங்கில் நன்றாக ஓடியது.

ஒரு நாள் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட படம் உருவாகும், அதில் நாங்கள் எல்லோரும் நடிக்கலாம். தென்னிந்திய சினிமா பிறந்தது சென்னையில் தான். சிரஞ்சீவி சார் பிறந்ததே இங்கு தான். தமிழுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மறுக்கமுடியாதது. இப்படத்தில் கார்கி, விஜய் மிகச்சிறப்பாக எங்களுக்கு தமிழ் சொல்லி தந்தார்கள். தமிழை சரியாக கஷ்டப்பட்டு பேசியிருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.

*இயக்குநர் S S ராஜமௌலி பேசியதாவது…*

நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படிச்ச ஸ்கூலுக்கு வந்தா பயமா இருக்கும். அது மாதிரி தான் சென்னை எனக்கு, சினிமா கற்று தந்தது சென்னை தான். அந்த பயம் எனக்கு இருக்கிறது. ஒரு பெரிய படம் என்பதை எடுக்கும்போதே யாரும் நிர்ணயிக்க முடியாது. நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம், இறுதியில் ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும்.

இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ரஜினி சாரை வைத்து படமெடுக்க நீங்கள் சொல்வதில் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும், கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாகுபலி எல்லோருக்கும் பிடிக்க காரணம் அதன் மொழி அல்ல, அதன் எமோஷன் தான் அதே போல் RRR பாகுபலியைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும். ராம் சரண், என் டி ஆர், ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தை தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகதான் இருந்தது. ஆனால் என் கதை அதை செய்திருக்கிறது.

ராம்சரண், என் டி ஆர் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில் தான் முடிவு செய்தேன். இந்த இரு கேரக்டர்களும் வரலாற்றில் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவே கேட்க அதிசயமாக இருந்தது.

வரலாற்றில் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்த நாயகர்கள், உண்மையில் அவர்கள் சந்தித்ததில்லை, சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப்படம். போஸ்ட் புரொடக்சன் மட்டும் 1 1/2 வருடம் செய்திருக்கிறோம். நான் இந்தப்படத்தை தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் தான் எடுத்திருக்கிறேன். என் சிந்தனை தெலுங்கு அதை மாற்ற முடியாது. ஆனால் தமிழில் நடக்கும் கதையை இயக்கும் போது, இங்கு வந்து கண்டிப்பாக இயக்குவேன். பாகுபலி மாதிரி நினைத்து வராதீர்கள் என்று சொல்லவில்லை ரசிகர்கள் மனதில் இருந்து பாகுபலியை மறக்கடிக்க முடியாது.

பாகுபலியில் உள்ள எல்லாம் இதில் இருக்காது ஆனால் அதில் இருந்த எமோஷன் இந்தப்படத்திலும் இருக்கும். ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடுவார்கள்

*தொழில்நுட்ப குழு:*

திரைக்கதை, இயக்கம் – S S ராஜமௌலி
கதை – விஜயேந்திர பிரசாத்
வசனம் – கார்கி
இசை – MM மரகதமணி
ஒளிப்பதிவு – K K செந்தில்குமார்
படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பு – நிகில்

RRR movie pre release event high lights

‘சூரரைப் போற்று’ படத்தை கொண்டாடும் கேரளத்து சூர்யா ரசிகர்கள்.; டென்ஷனில் தமிழக ரசிகர்கள்

‘சூரரைப் போற்று’ படத்தை கொண்டாடும் கேரளத்து சூர்யா ரசிகர்கள்.; டென்ஷனில் தமிழக ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியது இந்த திரைப்படம்.

கடந்தாண்டு 2020ல் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

ஓடிடி ரிலீசை விட தமிழக திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வசூல் சாதனை படைத்திருக்கும் என அனைத்து தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

தற்போது 100% இருக்கைகளுடன் தியேட்டர்களில் அனுமதி கிடைத்திருப்பதால் இப்படம் தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓடிடி-யில் ரிலீசான படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

ஆனால் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்தனர்.

அதன்படி ‘சூரரைப் போற்று’ பட சிறப்பு காட்சிகள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.

இப்படத்தை கேரளத்து சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட்டான ‘சூரரைப் போற்று’ படத்தை தமிழகத்தில் நாம் கொண்டாட முடியவில்லையே என சூர்யா ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Kerala suriya fans celebrate soorarai pottru in theatres

‘புஷ்பா’ ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா.? அசத்தும் அல்லு அர்ஜூன்

‘புஷ்பா’ ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா.? அசத்தும் அல்லு அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.

இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.

முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே ‘அலா வைகுந்தபுரமுலோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ‘புஷ்பா: தி ரைஸ்’ வெளியாகிறது.

‘அலா வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக கூறப்படும் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

அணைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

‘புஷ்பா: தி ரைஸ்’, படத்தின் முன் வெளியீட்டு வணிகம் இன்னும் அதிமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் தடம் பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

‘புஷ்பா: தி ரைஸ்’ 2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமாகும்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து வரவிருக்கும் விளம்பரங்களுடன், ‘புஷ்பா’ பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

Allu Arjun’s Pushpa total business deals

‘மாநாடு’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய டி.ஆரை கண்டித்து பாரதிராஜா அறிக்கை

‘மாநாடு’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய டி.ஆரை கண்டித்து பாரதிராஜா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரு. டி. ராஜேந்தர் அவர்களுக்கு, வணக்கம்…
.
தங்கள் மகன் திரு. சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் திரு. சுரேஷ் காமாட்சி தயாரித்த வெளியான மாநாடு திரைப்படம் சம்மந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் TFAPA பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே. படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று திரு. சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகமும் அறியும்.

அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

மாநாடு வெளியீட்டுக்கு முந்தையநாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.

படத்தின் தொலை்காட்சி உரிமம் விற்கப்படாத்தால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்திரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரியமனதுடன் ஒத்துக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்திரவாதம் தர முனவந்தீர்கள்.

படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைகாட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனை திரும்பி தருகிறார். ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன் உதாரணம் ஆகும்.

ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?
ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?

இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திரு. சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டூ உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்?

வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்புடன்,

பாரதிராஜா
தலைவர்,
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

Legendary director Bharathi Raja condemns T Rajendar

ஓ சொல்றியா மாமா… சர்ச்சைக்குள்ளான சமந்தா பாடல்..; நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் வழக்கு

ஓ சொல்றியா மாமா… சர்ச்சைக்குள்ளான சமந்தா பாடல்..; நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.

இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது.

தமிழ் பதிப்பில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாட விவேகா எழுதியிருக்கிறார்.

இதுவரை இந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை யூடியுப்பில் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு ஆந்திராவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Case filed against Samantha’s dance number in Pushpa

More Articles
Follows