சுரேஷ் இயக்கத்தில் ஆண் விபச்சாரி(ரன்)களை பற்றிய படம் *போத*

Bodha aka Botha tamil movie based on GIGOLOSபெரும்பாலும் போதை என்றாலே சரக்கு அடித்துவிட்டு வரும் போதையை தான் பலரும் கூறுவார்கள்.

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போதை இருக்கும். சிலருக்கும் பெண்கள் மீது இருக்கும் போதை. சிலருக்கு பணம் மீது போதை இப்படி பல வகை உண்டு.

தற்போது பண போதையை மையப்படுத்தி போத என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர்களே இதன் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது எனலாம்.

அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்கி என்பவர் நாயகனாக நடித்துள்ளார்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய படக்குழுவினர் இப்படம் ஆண்கள் விபச்சாரத்தை பற்றிய படம் என தெரிவித்தனர்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வருவதில்லை. எனவே இதுதான் முதல்முறை எனலாம்.

ஆங்கிலத்தில் ஆண் விபச்சாரியை GIGOLOS என்பார்கள்.

Bodha aka Botha tamil movie based on GIGOLOS

Overall Rating : Not available

Related News

"போத" படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து…
...Read More

Latest Post