சினிமா சான்ஸ் தேடுபவர்களுக்கு ‘முன்னோடி’யான எஸ்.பி.டி.ஏ.குமார்

சினிமா சான்ஸ் தேடுபவர்களுக்கு ‘முன்னோடி’யான எஸ்.பி.டி.ஏ.குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

munnodi‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.

சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் இப்படத்திற்கு இயக்குனர் ஆகியிருக்கிறார் எஸ்.பி.டி.ஏ.குமார்.

சினிமாவில் டைரக்டர் ஆவதற்கு வாய்ப்பு தேடுபவர்கள் இவரையே முன்னோடியாக வைத்துக் கொள்ளலாம் போல. அதான் தன் படத்திற்கும் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்.

இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர்.

‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார்.

நகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.

Munnodi- Siddhara

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது…

“படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன்.

இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும்.

இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.

படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.

munnodi 3

நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார்.

போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.

தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்றார்.

இந்த முன்னோடி டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

‘ரம்பா நல்லா இருக்காங்க; உங்க வேலைய பாருங்க…’ குஷ்பூ

‘ரம்பா நல்லா இருக்காங்க; உங்க வேலைய பாருங்க…’ குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kushboo rambhaநடிகை ரம்பா தனது கணவர் இந்திரனை விவாகரத்து செய்யப் போவதாகவும் இது தொடர்பாக அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் இது முற்றிலும் தவறானது என தெரிய வந்துள்ளது.

அதாவது அவர் தன் கணவருடன் சேர்த்து வைக்க கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறாராம்.

இதுகுறித்த அறிந்த ரம்பா தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது, குஷ்பூ ட்விட்டரில் கூறியிருப்பதாவது…

ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன்.

ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்தேன். அவரது கணவர் அவருக்காக கட்டியுள்ள புதிய பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். ரம்பாவுடன் தொடர்பில் உள்ளேன்.

அவர் அழகான இரண்டு குழந்தைகளுடன் நலமாக உள்ளார். அவர் நிம்மதியாக வாழட்டும். என்று பதிவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஹரி இயக்கத்தில் எஸ்-3 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இதன் சூட்டிங்கை பாடல் காட்சியுடன் நேற்று முடித்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை டிசம்பர் 16-ந் தேதி வெளியிடவுள்ள நிலையில், இதன் டீசரை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் டீசர் ரிலீஸ் தேதியை தீபாவளி அன்று மோசன் போஸ்டர் மூலமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.

மேலும் இந்த மோசன் போஸ்டர் திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் பிரச்சினைக்காக ஒன்று கூடும் நடிகர்கள்

சிவகார்த்திகேயன் பிரச்சினைக்காக ஒன்று கூடும் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyan new photosஅண்மையில் நடைபெற்ற ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.

தன் படங்களுக்கு சிலர் பிரச்சினை எழுப்புவதாக அப்போது கூறினார்.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பேசியபோது…

“சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்து புகார் நடிகர் சங்கத்திற்கு வந்துள்ளது. இதற்கு நிச்சயம் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.

இது தொடர்பாக விரைவில் அனைத்து நடிகர்களுடன் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கிறோம்.

இதில் முன்னணி நடிகர்களின் கருத்துக்களும் இடம்பெறும். என்றனர்.

டி.ராஜேந்தருடன் மடோனாவின் ‘நியூ இயர் சாங்’

டி.ராஜேந்தருடன் மடோனாவின் ‘நியூ இயர் சாங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TR and Madonna sebastianகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண்.

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார். நவம்பரில் இதன் இசை வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் உள்ள ஒரு பாடலை மடோனா செபாஸ்டியனும் டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.

ஒரு நியூ இயர் ஆரம்பம் ஆவது போல இப்பாடலை வடிவமைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

சரத்குமாரின் படத்தலைப்பை கைபற்றிய விஜய்சேதுபதி

சரத்குமாரின் படத்தலைப்பை கைபற்றிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay-sethupathi-photosவிஜய்சேதுபதி நடிப்பில் நிறைய படங்கள் உருவாகி வெளியானாலும் சில படங்கள் இன்னும் கிடப்பில் உள்ளன.

அதில் இடம் பொருள் ஏவல் மற்றும் மெல்லிசை ஆகிய படங்கள் முடிவடைந்தும் சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகவில்லை.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள மெல்லிசை படத்தில் காயத்ரி, ராம்திலக், சோனியா தீப்தி, அர்ஜீனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மெல்லிசை படத்தின் தலைப்பை புரியாத புதிர் என மாற்றியுள்ளனர்.

இது 1990ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், ரகுமான், ரகுவரன் நடிப்பில்இப்படம் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த புதிய புதியாத புதிரை நவம்பரில் வெளியிடவுள்ளனர்.

 

puriyadha puthir

More Articles
Follows