புதிய சேனல் தொடங்கும் ‘பிக்பாஸ்’ நடிகை வனிதா

Bigg Boss fame Vanitha launches logo for her Channel பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள், அருண்விஜய்யின் சகோதரி என பல அடையாளங்கள் இருந்தாலும் நடிகை வனிதாவுக்கு பிக்பாஸ் 3 தனி அடையாளத்தை கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

இவரால் அந்த நிகழ்ச்சியில் டிஆர்பியில் உச்சம் தொட்டது என்று கூட சொல்லலாம்.

பிக்பாஸ் ராசியால் தற்போது பல டிவி நிகழ்ச்சிகளில் விருந்தினராக பங்கேற்று வருகிறார்.

பல யூடியூப் சேனல்களும் இவரின் பேட்டிக்காக அடிக்கடி காத்திருப்பது உண்டு.

இனி ஏன் அடுத்த யூடிப் சேனலுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ..? தற்போது வனிதாவே புதிய யூடியுப் சேனல் ஒன்றை தொடங்குகிறாராம்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடங்கவுள்ள சேனலுக்கான் லோகோவை வெளியிட்டுள்ளார். லோகோ நன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குக்கிங் சேனலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

காரணம்.. பிக்பாஸ் வீட்டிலேயே நன்றாக சமைக்கத் தெரிந்தவர் வனிதாதான் என்கின்றனர்.

Bigg Boss fame Vanitha launches logo for her Channel

இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் லோகோவை பார்க்கலாம்…

https://www.instagram.com/p/B-KP-DEDtTf/

Overall Rating : Not available

Latest Post